20
March, 2026

A News 365Times Venture

20
Friday
March, 2026

A News 365Times Venture

Kharg Island: ஈரான் மகுடக் கல்லில் தாக்குதல்; "நாகரிகத்திற்காக 'இதை' மட்டும் செய்யவில்லை" – ட்ரம்ப்

Date:

ஈரானுக்கு மிக மிக முக்கியமானது, ‘கார்க் தீவு’. இந்தத் தீவில் இருந்து தான் ஈரான் தன்னுடைய 90 சதவிகித எண்ணெய் ஏற்றுமதிகளைச் செய்கிறது.

90 சதவிகிதம் என்றால் ஒரு ஆண்டுக்குக் கிட்டத்தட்ட 950 மில்லியன் பேரல்கள்.

இந்தத் தீவை அமெரிக்கா தொட்டால் ஈரான் கடுமையாக எதிர்வினையாற்றும் என்று இந்தப் போர் தொடங்கியதில் இருந்து அரசியல் பார்வையாளர்கள் எச்சரித்து வந்தனர்.

தற்போது அந்தத் தீவை தான் குறி வைத்து தாக்கியிருக்கிறது அமெரிக்கா.

இதை அமெரிக்க அதிபர் ட்ரம்பே உறுதிசெய்துள்ளார்.

ட்ரம்ப்

ட்ரம்ப் பதிவு

இது குறித்து ட்ரம்ப் தனது ட்ரூத் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளதாவது…

“என்னுடைய வழிகாட்டுதலின் படி, ஈரானின் மகுடக் கல்லான ‘கார்க் தீவில்’ உள்ள அனைத்து ராணுவ தளவாடங்களும் தகர்க்கப்பட்டுள்ளது. இது மத்திய கிழக்கு வரலாற்றிலேயே மிக சக்தி வாய்ந்த வெடிகுண்டு தாக்குதல் ஆகும்.

நாகரிகம் காரணமாக, அந்தத் தீவில் இருக்கும் எண்ணெய் கட்டமைப்புகளை நாங்கள் தாக்கவில்லை.

ஹார்மோஸ் ஜலசந்தி வழியாக செல்லும் கப்பலின் பயணத்திற்கும், பாதுகாப்பிற்கும் பாதிப்பு ஏற்பட்டால் எனது முடிவை மாற்ற வேண்டியதாக இருக்கும்”.

இதற்கு ஈரானின் பதிலடி எப்படி இருக்குமோ?

https://truthsocial.com/@realDonaldTrump/116109447886304328

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

TVK : முதுகுளத்தூரை கேட்கும் இமானுவேல் சேகரன் பேரன்! – முட்டுக்கட்டை போடுவது யார்?

ஊரெங்கும் இப்போது ஒரே பேச்சு... 'சீட்'.திமுக, அதிமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு...

`கூட்டணி இருக்கா இல்லையா?’ – காத்திருக்கும் பாஜக; கூலாக வேட்பு மனுக்களை தாக்கல் செய்த ரங்கசாமி

புதுச்சேரி 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்து வெற்றிபெற்ற...

‘’அப்ப கடைக்கு ஓனர் டக்ளஸ் அண்ணே இல்லையா?" – டெல்லி சென்ற எடப்பாடி; கடுமையாக விமர்சித்த கே.என்.நேரு

தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தொகுதி பங்கீடு குறித்து கலந்து ஆலோசிக்க அதிமுக...

குளித்தலை: `எங்க தொகுதியில இதையெல்லாம் கொஞ்சம் கவனிங்க!' – மக்கள் முன்வைக்கும் `27' கோரிக்கைகள்

கரூர் மாவட்டத்தில் இருக்கிறது, குளித்தலை சட்டமன்றத் தொகுதி. முன்னாள் முதல்வர் கலைஞர்...