21
March, 2026

A News 365Times Venture

21
Saturday
March, 2026

A News 365Times Venture

Kannada – Hindi சர்ச்சை: `முதலில் வங்கி ஊழியர்களுக்கு இந்த பயிற்சியைக் கொடுங்கள்'- கர்நாடக முதல்வர்

Date:

கர்நாடகாவில் எஸ்.பி.ஐ வங்கியில், உள்ளூர் வாடிக்கையாளரிடம் வங்கியின் மேலாளர் கன்னடத்தில் பேச மறுத்து, “இது இந்தியா இந்தியில்தான் தான் பேசுவேன். ஒருபோதும் கன்னடத்தில் பேசமாட்டேன்” என்று கூறும் வீடியோ இரண்டு நாள்களாக சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவிக்கொண்டிருக்கிறது.

அந்த வீடியோவில், வாடிக்கையாளர், “இது கர்நாடகா. எந்த மாநிலமோ அந்த மாநில மொழியில் பேசவேண்டும் என ரிசர்வ் வங்கி விதி இருக்கிறது” என்று குறிப்பிட்டார்.

அப்போதும் கூட, “கன்னடத்தில் பேச மாட்டேன், இந்தியில்தான் பேசுவேன். நீங்கள் சென்று எஸ்.பி.ஐ சேர்மனிடம் பேசுங்கள். ஒருபோதும் நான் கன்னடத்தில் பேசமாட்டேன்” என்று அதிகாரத் தொனியில் பேசினார்.

வீடியோவிலேயே, இது சூர்யா நகரிலுள்ள எஸ்.பி.ஐ கிளை என்றும் அந்த வாடிக்கையாளர் தெரிவித்தார். இந்த வீடியோ கன்னடர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பைத் தூண்டியது.

SBI – State Bank of India

இந்த சம்பவம் தொடர்பாக, பெங்களூரு (தெற்கு) பா.ஜ.க எம்.பி தேஜஸ்வி சூர்யா, “எஸ்.பி.ஐ கிளை மேலாளரின் இத்தகைய நடத்தை ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல.

நீங்கள் கர்நாடகாவில் வங்கி போன்ற துறைகளில் வேலைபார்க்கும்போது, வாடிக்கையாளர்களுக்கு அவர்கள் அறிந்த மொழியில் தொடர்புகொள்வது முக்கியம்.

இவ்வாறு ஆணவமாக இருப்பது சரியல்ல” என்று கண்டித்து, “இவ்வாறு நடந்துகொண்ட மேலாளர் மீது நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் நான் பேசியுள்ளேன்.

கர்நாடகாவில் இயங்கும் வங்கிகள், வாடிக்கையாளர்ளுக்கு கன்னடத்தில் சேவை வழங்க வேண்டும்” என வலியுறுத்தினார்.

பின்னர், இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுத்த எஸ்.பி.ஐ நிர்வாகம், சம்பந்தப்பட்ட மேலாளரை பணியிடமாற்றம் செய்து நடவடிக்கை எடுத்திருக்கிறது.

இந்த சம்பவம் குறித்து மாநில முதல்வர் சித்தராமையா தனது எக்ஸ் தளப் பக்கத்தில், “அனேகல் தாலுகா, சூர்யா நகரிலுள்ள எஸ்.பி.ஐ கிளை மேலாளர், கன்னடம் மற்றும் ஆங்கிலத்தில் பேச மறுத்து, குடிமக்களை அலட்சியப்படுத்திய நடத்தை வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

சம்பந்தப்பட்ட அதிகாரியை இடமாற்றம் செய்ததில் எஸ்.பி.ஐ-யின் விரைவான நடவடிக்கை பாராட்டத்தக்கது. இந்த விவகாரம் இப்போது முடிக்கப்பட்டதாகக் கருதப்படலாம். இருப்பினும், இவ்வாறான சம்பவங்கள் மீண்டும் நிகழக் கூடாது.

சித்தராமையா
சித்தராமையா

அனைத்து வங்கிகளும் வாடிக்கையாளர்களைக் கண்ணியமாக நடத்த வேண்டும். அதோடு, உள்ளூர் மொழியில் பேசுவதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும்.

நாடு முழுவதுமுள்ள அனைத்து வங்கி ஊழியர்களுக்கும் கலாசார மற்றும் மொழிப் பயிற்சியைக் கட்டாயமாக்குமாறு மத்திய நிதியமைச்சர் மற்றும் நிதி சேவைகள் துறையை நான் கேட்டுக்கொள்கிறேன். உள்ளூர் மொழிகளை மதிப்பதென்பது மக்களை மதிப்பதாகும்.” என்று பதிவிட்டிருக்கிறார்.


Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

"CSK-விற்கு ஏன் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் விளையாடவில்லை?" – ஸ்டாலினைப் போராடச் சொல்லும் TTV

கிட்டத்தட்ட ஒரு மாதத்தில் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் நடக்க உள்ளது. இப்போது...

"அவர் இங்கு வந்திருக்கிறார் என்பதை அறிந்து உடனே வந்தேன்" – சிபிஎம் அலுவலகத்தில் வைகோ; பின்னணி என்ன?

திமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு இடையே தொகுதிப் பங்கீட்டில் இழுப்பறி நீடித்து...

”கூட்டணிக்காக விஜய் வீட்டு வாசலைத் தட்டிக் கொண்டிருக்கிறார் பழனிசாமி” – ஓ.பன்னீர்செல்வம் தாக்கு

விருதுநகர் மாவட்டம், ஶ்ரீவில்லிபுத்தூரில் தி.மு.க நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அமைச்சர்கள் சாத்தூர்...

"விசிக தோற்றதற்கு திமுக சொன்ன காரணம்; வேட்பாளர்களைத் தேர்வு செய்ய சுதந்திரம் வேண்டும்" – திருமா

திமுக கூட்டணி 'வலிமை'யான கூட்டணி என்று சொல்லிக்கொண்டாலும், விசிக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்...