ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த தீவிரவாத தாக்குதலைத் தொடர்ந்து, பிரதமர் மோடி தலைமையில் உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் ஆகியோர் கலந்து கொண்ட 2.5 மணி நேர பாதுகாப்பு அமைச்சரவைக் குழு (CCS) கூட்டம் நடத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து, இந்திய அரசு பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்குமான சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை நிறுத்தி வைத்திருக்கிறது.
இந்திய அரசின் இந்த நடவடிக்கையை பா.ஜ.க எம்.பி நிஷிகாந்த் துபே பாராட்டியிருக்கிறார். இது தொடர்பாக அவர் தன் எக்ஸ் பக்கத்தில், “பாம்புக்கு தண்ணீர் கொடுக்கும் ஒப்பந்தத்தின் நாயகன் நேரு ஜி, 1960 இல் நோபல் பரிசு பெறுவதற்காக, சிந்து, ரவி, பியாஸ், செனாப், சட்லஜ் ஆகியவற்றின் தண்ணீரைக் கொடுத்து இந்தியர்களின் இரத்தத்தைச் சிந்தினார்.
இன்று, மோடி ஜி உணவு மற்றும் தண்ணீரை நிறுத்தியுள்ளார். பாகிஸ்தானியர்கள் தண்ணீரின்றி இறந்துவிடுவார்கள். இது 56 அங்குல மார்பு. ஹூக்கா, தண்ணீர், உணவு மற்றும் தண்ணீர் நிறுத்தப்படும். நாங்கள் பாஜக ஊழியர்கள். அவர்களை சித்திரவதை செய்த பிறகு நாங்கள் அவர்களைக் கொல்வோம்,” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.