8
March, 2026

A News 365Times Venture

8
Sunday
March, 2026

A News 365Times Venture

Iran – America: `நியூயார்க் மேயரையே நியமிக்க முடியாதவர் ட்ரம்ப்' – டெல்லியில் ஈரான் அமைச்சர் காட்டம்

Date:

டெல்லியில் நடைபெற்று வரும் ‘ரைசினா டயலாக்’ சர்வதேச மாநாட்டில் ஈரான் துணை வெளியுறவு அமைச்சர் சயீத் காதிப்ஜாதே கலந்துகொண்டார். அந்த மாநாட்டில் உரையாற்றிய காதிப் ஜாதே, “அதிபர் ட்ரம்ப் ஈரானில் ஆட்சி மாற்றத்தைக் கோருகிறார். ஆனால் அவரால் நியூயார்க் நகர மேயரைக் கூட நியமிக்க முடியவில்லை. இது ஒரு காலனித்துவ மனப்போக்கு. ஈரானில் ஜனநாயக ரீதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அதிபரைக் கவிழ்க்க அமெரிக்கா முயற்சிக்கிறது.

பிப்ரவரி 28 அன்று ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமேனி வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல்கள் வாழ்வா-சாவா போராட்டம்.

ஈரான் துணை வெளியுறவு அமைச்சர் சயீத் காதிப்ஜா

ஈரானால் எந்தத் தூண்டுதலும் இல்லாத நிலையில், இஸ்ரேல் எனும் மாயையாலும், அதிகார அரசியலாலும் இந்தத் தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன. மேலும், ஒரு நாட்டின் தலைவரைக் குறிவைத்துத் தாக்குவது சர்வதேச விதிகளுக்கு எதிரானது. இந்தியாவின் ‘மிலன்’ கடற்படைப் பயிற்சியில் பங்கேற்றுத் திரும்பிய ஈரானின் ‘ஐரிஸ் டெனா’ கப்பல் மூழ்கடிக்கப்பட்டது.

ஆயுதங்கள் ஏதுமற்ற நிலையில், இந்தியாவின் அழைப்பை ஏற்று வந்த ஒரு விருந்தினரை அமெரிக்கா தாக்கியது சர்வதேச சட்டத்தின் கடுமையான மீறலாகும். ஈரான் ஒரு பொறுப்புள்ள தேசம். ஹார்முஸ் ஜலசந்தியின் நிலைத்தன்மைக்கு நாங்களே அச்சாணி. நாங்கள் அதை மூடவில்லை. அவ்வாறு மூடுவதாக இருந்தால் முறைப்படி அறிவிப்போம்” என்று என்றார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related