30
March, 2026

A News 365Times Venture

30
Monday
March, 2026

A News 365Times Venture

Iran: மேற்கு ஆசியாவிற்குள் நுழைந்த அமெரிக்கப் போர்க்கப்பல்; ஈரான் எல்லையில் பதற்றம்?

Date:

ஈரான் மீது அமெரிக்கா தரைவழித் தாக்குதலை நடத்தக்கூடும் என்ற ஊகங்கள் வலுத்து வரும் நிலையில், அமெரிக்காவின் பிரமாண்டமான ‘யுஎஸ்எஸ் திரிபோலி’ (USS Tripoli) போர்க்கப்பல் மேற்கு ஆசியப் பகுதிக்கு வந்தடைந்தது.

நேற்று (28-ம் தேதி) அமெரிக்க மத்திய கட்டளை அமைப்பு இந்தத் தகவலை உறுதிப்படுத்தியுள்ளது.

ஜப்பானைத் தளமாகக் கொண்டு இயங்கும் இக்கப்பல், சுமார் 3,500 கடற்படை வீரர்கள் மற்றும் மாலுமிகளைக் கொண்டுள்ள ஒரு வலிமையான படைப்பிரிவின் முதன்மைக் கப்பலாகும்.

யுஎஸ்எஸ் திரிபோலி

இதில் அதிநவீன F-35 போர் விமானங்கள், சீஹாக் ஹெலிகாப்டர்கள் மற்றும் வீரர்களை ஏற்றிச் செல்லும் ஆஸ்ப்ரே (Osprey) ரக விமானங்கள் எனப் பெரும் ஆயுதக் கிடங்கே தயார் நிலையில் உள்ளதாக அமெரிக்க மத்திய கட்டளை அமைப்பு (United States Central Command – CENTCOM) தெரிவித்துள்ளது.

அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ வெள்ளிக்கிழமை, “நவீனப் போர்முறையில் தரைப்படை வீரர்களை நேரடியாகக் களமிறக்காமல், அமெரிக்கா தனது இலக்குகளை அடைய முடியும். ஒரு நாட்டின் மீது ஆதிக்கம் செலுத்த அல்லது அதன் ராணுவத் திறனை முடக்கப் பல வழிகள் உள்ளன” எனத் தெரிவித்திருந்தார்.

இருப்பினும், அதிபர் டொனால்ட் ட்ரம்ப் இது குறித்துத் தெளிவான முடிவை அறிவிக்காமல் மௌனம் காத்து வருகிறார். சுமார் 10,000 வீரர்களை மேற்கு ஆசியாவிற்கு அனுப்ப அதிபர் ஆலோசித்து வருவதாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

திரிபோலி போர்க்கப்பலின் வருகை இப்பகுதியில் நிலவும் போர் பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

'டார்கெட் தலைநகரம்!' – சென்னையில் இறங்கும் தவெகவின் முக்கிய தலைகள்! – வேட்பாளர் பட்டியல் முழு விவரம்

சட்டமன்றத் தேர்தலுக்கான 234 தொகுதிகளுக்குமான தவெகவின் வேட்பாளர் பட்டியலை விஜய் இன்று...

திமுக: சுரேஷ்ராஜனுக்கு கல்தா; நாகர்கோவில் மேயர் மகேஷுக்கு கன்னியாகுமரியில் சீட் கிடைத்தது எப்படி?

கன்னியாகுமரி மாவட்டத்தில் மொத்தம் உள்ள 6 சட்டசபை தொகுதிகளில் கன்னியாகுமரி மற்றும்...

ஆம்ஸ்ட்ராங்: "என் கணவரின் கொடூரக் கொலைக்கு நீதி கிடைக்க வேண்டும்"- திரு.வி.க நகர் வேட்பாளர் பொற்கொடி

ஏப்ரல் மாதம் 23-ம் தேதி தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது....

தவெக: "அத்தனை வலியையும் தாங்கிட்டு உங்களுக்காக வரேன்!' – விஜய் எமோஷனல்

தவெகவின் வேட்பாளர் அறிமுகக் கூட்டத்தை அக்கட்சியின் தலைவர் விஜய் நடத்தி வருகிறார்....