1
April, 2026

A News 365Times Venture

1
Wednesday
April, 2026

A News 365Times Venture

India – Pakistan Conflict: “எங்களுக்கு எந்தச் சம்பந்தமும் இல்லை" – அமெரிக்க துணை அதிபர் பேட்டி

Date:

பஹல்காமில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு எதிர்வினையாற்றும் வகையில், இந்தியா ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் பாகிஸ்தான் மீது தாக்குதலை நடத்தியது. இதற்கு பதிலடியாக பாகிஸ்தான் இந்தியாவின் ஜம்மு, பதான்கோட் உள்ளிட்ட சில நகரங்கள் மீது தாக்குதல் நடத்தியது. இந்தத் தாக்குதலை இந்திய ராணுவம் திறம்பட முறியடித்ததாக தகவல் வெளியாகியிருக்கிறது. இந்த நிலையில் அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார்.

operation sindoor
Operation Sindoor – ஆபரேஷன் சிந்தூர்

அப்போது அவரிடம் இந்தியா – பாகிஸ்தான் சூழல் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “அடிப்படையில் எங்களுக்கும் இந்தப் போருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இந்தப் போர் பதற்றத்தைக் குறைக்க வேண்டும் என இரு நாடுகளிடமும் பேச முயற்சிக்க முடியும். அடிப்படையில் எங்களுக்குச் சம்பந்தமில்லாத, அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் இல்லாத இரு நாடுகளுக்கு நடுவிலான போரில் நாங்கள் ஈடுபடப் போவதில்லை.

இந்தியாவிடமோ, பாகிஸ்தானிடமோ அமெரிக்காவால் ஆயுதங்களைக் கீழே போடச் சொல்ல முடியாது. எனவே, இராஜதந்திர வழிகள் மூலம் இந்த விஷயத்தைக் கையாளப் போகிறோம். இது ஒரு பெரும் போராகவோ அல்லது அணு ஆயுத மோதலாகவோ மாறப் போவதில்லை என்பதே எங்கள் நம்பிக்கையும் எதிர்பார்ப்பும்.” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

'அவரு போயி 2 வருசம் ஆச்சு சார்!' உள்துறை செயலாளருக்கு பதில் மணிப்பூர் கவர்னருக்கு கடிதம் எழுதிய தவெக

தவெக தலைவர் விஜய்யின் பாதுகாப்பில் தமிழக காவல்துறை அலட்சியமாக செயல்படுவதாக அக்கட்சியின்...

'கூட்டமே இல்லாத ஸ்டாலினின் ரோடு ஷோவுக்கு 2000 போலீஸ் பாதுகாப்பா?' – கொந்தளிக்கும் ஆதவ்!

தவெக தலைவர் விஜய்யின் பிரசாரத்துக்கு தமிழக காவல்துறை முறையான பாதுகாப்பு வழங்கவில்லை...

"விஜய்யுடன் பேசி NDA கூட்டணி ஆட்சி அமைக்கும்.!"- மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே சொல்வதென்ன?

பெரும்பான்மை கிடைக்காவிட்டால் தவெக தலைவர் விஜய்யுடன் பேசி தேசிய ஜனநாயகக் கூட்டணி...