15
September, 2025

A News 365Times Venture

15
Monday
September, 2025

A News 365Times Venture

GST: “வரி குறைவது இருக்கட்டும்; முதலில் அடிப்படையை மாற்றுங்கள்..'' – ஜெய்ராம் ரமேஷ் சாடல்

Date:

நேற்று நடந்த விருது நிகழ்ச்சி ஒன்றில் நிர்மலா சீதாராமன், “இனி ஜி.எஸ்.டி வரி குறையும்” என்று கூறியுள்ளார்.

இதுக்குறித்து காங்கிரஸ் மாநிலங்களவை எம்.பி ஜெய்ராம் ரமேஷ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “நிதியமைச்சர் விரைவில் ஜி.எஸ்.டி விகிதங்கள் குறையும் என்று கூறுள்ளார். ஜி.எஸ்.டியில் மாற்றம் என்பது வெறும் வட்டி விகித குறைப்பாக மட்டும் இல்லாமல், அனைத்தையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும். பாப்கார்னுக்கு மூன்று வரிகள் இருக்கும் அடிப்படையை மாற்றாமல் கேரமல் பாப்கார்னுக்கான வரியை மட்டும் குறைப்பது சரியல்ல. ஜி.எஸ்.டியை எளிதாக்குவதும், குறைந்த தண்டனைக்குரியதாக ஆக்குவதும் தான் இப்போதைய தேவை.

‘ஜி.எஸ்.டி குறைய போகிறது’ நிர்மலா சீதாராமன் அறிவிப்பு

ஜி.எஸ்.டி 2.0-ல் முதலில் வரி விகிதங்களை எளிதாக்க வேண்டும். பாப்கார்னுக்கு மூன்று வரி விகிதங்கள், கிரீம் பன்னுக்கு ஒரு வரி… சாதாரண பன்னுக்கு ஒரு வரி என்பதெல்லாம் ஒரு சிறு உதாரணமே. மோடி அரசின் தலைமை பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்பிரமணியன் ஒப்புக்கொண்டதைப்போல, ஜி.எஸ்.டியில் 100 சதவிகித வரி எல்லாம் கூட இருக்கிறது. இது பிசினஸ் நிர்வாகத்தையும், அரசின் அதிகாரத் துறையையும் கடினமாக்குகிறது. இப்படி நிறைய வரி விகித விதிப்பு இருப்பது 2023 நிதியாண்டில் இருந்த 1.01 லட்சம் கோடி ஜி.எஸ்.டி ஏய்ப்பை, கடந்த நிதியாண்டில் 2.01 கோடி ஜி.எஸ்.டி ஏய்ப்பாக மாற்றியிருக்கிறது. 18,000 போலி நிறுவனங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது; இன்னும் நிறைய நிறுவனங்கள் கண்டுபிடிக்காமல் இருக்கின்றன. இப்போதிருக்கும் ஜி.எஸ்.டியின் சிக்கல் தன்மை எளிமையான வரி நடைமுறையை அமல்படுத்த அரசு முன்வராததைக் காட்டுகிறது.

இரண்டாவதாக, கடந்த சில மாதங்களில் அதிகமாக்க கொடுக்கப்பட்ட ரீபண்டுகளால், ஜி.எஸ்.டி வசூலிப்பதை மெதுவாக்கி இருக்கிறது. ஆன்லைன் பதிவுகளில் இல்லாத பிசிக்கல் சோதனைகளால் நிறைய போலி நிறுவனங்கள் உருவாக்கப்பட்டு, அதன் மூலம் ரீபண்டுகள் பெறப்பட்டுள்ளது. தகுதியில்லாத நிறுவனங்கள் கூட ஏற்றுமதிக்கு ரீபண்டுகளை பெற்றுள்ளது.

மூன்றாவதாக, சில முக்கிய பொருள்களுக்கு அரசு ஜி.எஸ்.டியை குறைக்க வேண்டும். கல்வி சம்பந்தமான புத்தகங்கள், ஸ்டேஷனரிகள், யூனிபார்ம்களுக்கு ஜி.எஸ்.டியை குறைக்க வேண்டும்.

ஜி.எஸ்.டி | GST

ஜி.எஸ்.டி செஸ் தனது இலக்கை அநேகமாக அடைய உள்ள இந்த ஆண்டு தான் ஜி.எஸ்.டி 2.0-விற்கான சரியான ஆண்டு. அதனால் நிதி அமைச்சகம் ஜி.எஸ்.டியை எளிதாக்க முடியும். இந்த எளிதான ஜி.எஸ்.டி 2.0 பற்றி இந்திய காங்கிரஸ் 2024-ம் ஆண்டு நடந்த மக்களவை தேர்தலில் நியாய பத்திரம் மூலம் கூறியுள்ளது. இப்போது இது ஒன்றிய அரசின் கையில் உள்ளது. அது இந்த வரலாற்று சிறப்புமிக்க வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளுமா?!

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

உட்கட்சிக்குள் எழும் எதிர்ப்புகள்; "நீங்கள் காங்கிரஸில் தொடர்வீர்களா?" – சசி தரூரின் பதில்

ஆபரேஷன் சிந்தூர் மூலம் பஹல்காம் தீவிரவாதத் தாக்குதலுக்கு மத்திய அரசு பதிலடி...

RCB Event Stampede : 'ரசிகர்களுக்கு வேகம் தேவைதான், அதேபோல..!' – செல்வப்பெருந்தகை

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (RCB) அணியின் வெற்றி கொண்டாட்டத்தில் மக்கள் உயிரிழந்த...

Tatkal: இனி தட்கல் டிக்கெட் எளிதாக கிடைக்கும்; IRCTC-ல் ஆதார் இணைப்பு வருகிறது!

ரயில் டிக்கெட் புக்கிங் நடைமுறைகளை கொஞ்சம் கொஞ்சமாக கடுமையாக்கி வருகிறது ரயில்வே...