13
March, 2026

A News 365Times Venture

13
Friday
March, 2026

A News 365Times Venture

GK Vasan: ”நல்லாட்சி அமைய ஒத்த கருத்துடையவர்கள் ஒன்று சேர வேண்டும்” – என்ன சொல்கிறார் ஜி.கே.வாசன்?

Date:

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி நிர்வாகியின் இல்லத் திருமண விழாவில் கலந்து கொண்ட அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், “தற்போது பா.ஜ.க, அ.தி.மு.க, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி மற்றும் ஒத்த கருத்துடைய கட்சிகள் தமிழகத்தில் முதல் அணியாகவும், வெற்றி அணியாகவும் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன.  

தமிழகத்திற்குத் தேவையான நல்லாட்சிக்கு ஒத்த கருத்துடையவர்கள் ஒன்று சேர வேண்டும் என்பதுதான் என்னுடைய விருப்பமாக உள்ளது.  

மூன்று முறை நிதி ஆயோக் கூட்டத்திற்குத் தமிழக முதல்வர் செல்லவில்லை. அதுவும் தமிழகத்தின் நிதி தேவையைப் பூர்த்தி செய்யக்கூடிய முக்கியமான கூட்டத்திற்குத் தமிழக முதல்வர் செல்லவில்லை.  

ஜி.கே.வாசன்

இந்தியாவின் 99 சதவீத முதல்வர்கள் நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்து கொண்டு தங்களது மாநிலத்தின் வளர்ச்சிக்காக நிதி தேவை குறித்துப் பேசுகின்ற ஒரு சூழலை மத்திய அரசு ஏற்படுத்தும் போது நிதி வேண்டும் என எதிர்பார்க்கும் தமிழக அரசு ஏன் மூன்று ஆண்டுகளாக நிதி ஆயோக் கூட்டத்தை அலட்சியப்படுத்திப் புறக்கணித்தது என்பது மக்களுடைய கேள்வியாக உள்ளது.

இந்த முறை முதல்வர் நிதி ஆயோக் கூட்டத்திற்குச் சென்றது, அரசியல் கண்ணோட்டம், தேர்தல் கண்ணோட்டம், வாக்கு வங்கி கண்ணோட்டம் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.

ரிசர்வ் வங்கி நகைக் கடன் நிபந்தனைகளைத் தளர்த்த வேண்டும். சாதாரண மக்களின் எண்ணங்களை நிறைவேற்றும் வகையில் ரிசர்வ் வங்கி முடிவெடுக்கும் என நம்புகிறேன்.

கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களைப் பாதுகாக்கின்ற வகையில் அரசு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

கனமழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். 2025 – 2026ம் நிதி ஆண்டில் ஏற்கனவே உயர்த்தப்பட்ட சொத்து வரியிலிருந்து ஆறு சதவீதம் வரை உயர்த்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஜி.கே.வாசன் செய்தியாளர் சந்திப்பு
ஜி.கே.வாசன் செய்தியாளர் சந்திப்பு

இதனால், வரி செலுத்துவோர் மிகக் கடுமையாகப் பாதிக்கப்படுவார்கள். அதாவது ஏற்கனவே தமிழக அரசு இரண்டு முறைக்கு மேல் பேரூராட்சி, நகராட்சி மற்றும் மாநகராட்சிகளில் உள்ள வீடுகள், கடைகளுக்குச் சொத்து வரியை உயர்த்தியதால் பொது மக்கள் குறிப்பாகச் சாதாரண ஏழை, எளிய, நடுத்தர மக்கள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் இப்போது ஆண்டுதோறும் 6 சதவீத வரி உயர்வையும் நடைமுறைப்படுத்துவதை மக்கள் எதிர்க்கிறார்கள்.

தமிழக அரசு, மக்கள் மீது வரிச்சுமையை ஏற்றாமல், உயர்த்திய சொத்து வரி உயர்வைத் திரும்பப் பெற வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் கேட்டுக்கொள்கிறேன்

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3PaAEiY

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

பண்ணையாளர்கள் அறிமுகப்படுத்திய பரிசுகள்… வளைக்கப்பட்ட வாக்காளர்கள்! | நினைவுச் சுவடுகள் 09

பரிசுகளால் வளைக்கப்பட்ட வாக்காளர்கள்நினைவுச் சுவடுகள்தமிழ்நாட்டு அரசியலில் தேர்தல்கள் என்றால் பொதுக்கூட்டம், மாநாடு,...

"நடிகர் ரஜினிகாந்தை யாரும் மிரட்ட முடியாது; எந்த மிரட்டலுக்கும் அவர் அடிபணிய மாட்டார்!" – ரகுபதி

புதுக்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ரகுபதி,"நடிகர் ரஜினிகாந்தை யாரும் மிரட்ட முடியாது....

எரியும் மேற்கு ஆசியா; தத்தளிக்கும் MSME-கள்: 'Tax Holiday நிச்சயம் தேவை'- எம்.எல்.ஏ எழிலன் கோரிக்கை!

மேற்கு ஆசியப் போர்ச் சூழலால் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து, இந்தியாவின்...

'புறக்கணித்த விஜய் தரப்பு; முயன்று பார்த்த திமுக!' – காளியம்மாள் அதிமுகவில் இணைந்த பின்னணி!

நாம் தமிழர் கட்சியின் முன்னாள் நிர்வாகி காளியம்மாள் இன்று எடப்பாடி பழனிசாமி...