1
February, 2026

A News 365Times Venture

1
Sunday
February, 2026

A News 365Times Venture

Epstein File-ல் மோடியின் பெயர்; பூகம்பம் கிளப்பும் அமெரிக்கா; மத்திய அரசின் பதில் என்ன?

Date:

எப்ஸ்டீன் ஃபைல் – இது ஜெஃப்ரி எப்ஸ்டீன் என்கிற பாலியல் குற்றவாளியின் ஆவணம் ஆகும். இவர் பாலியல் குற்றவாளி மட்டுமல்ல… உலகில் உள்ள பல அரசியல்வாதிகள், பிசினஸ்மேன்களுக்கு சிறுமிகளை பாலியல் உறவிற்காக சப்ளை செய்யும் நெட்வொர்க்கையும் வைத்திருந்திருக்கிறார்.

மேலும், அரசியல், பிசினஸ் என இவர் பல லாபிகளையும் செய்துள்ளார்.

அவர் சம்பந்தப்பட்ட அரசியல்வாதிகள் மற்றும் பிசினஸ்மேன்களின் ஆவணமே எப்ஸ்டீன் ஃபைல்.

ஜெஃப்ரி எப்ஸ்டீன்

ட்ரம்ப்

இந்த ஆவணத்தில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பெயர் உள்ளது என்று உலகின் டாப் பணக்காரர் எலான் மஸ்க் கடந்த ஆண்டு கூறினார். அதன் பின், மீண்டும் இந்த ஆவணம் பரபரப்பாகப் பேசத் தொடங்கப்பட்டது.

2025-ம் ஆண்டு நவம்பர் மாதம், இந்த ஆவணத்தை வெளியிட அமெரிக்க நாடாளுமன்றம் மசோதா ஒன்றை நிறைவேற்றியது. அதில் ட்ரம்பும் கையெழுத்திட்டார்.

இதையடுத்து இந்த ஆவணத்தில் இடம்பெற்றவர்களின் பெயர்கள் தொடர்ந்து வெளியாகிக் கொண்டிருக்கின்றன.

மோடியின் பெயர்?

சமீபத்தில் வெளியாகிய இந்த ஆவணத்தில் இந்தியப் பிரதமர் மோடியின் பெயரும் இடம்பெற்றிருந்தது. இது இந்தியாவில் கடும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

அந்த ஆவணத்தில் 2017-ம் ஆண்டு இஸ்ரேலுக்கு மோடி சென்றது எப்ஸ்டீனின் ஆலோசனை என்றும், அது அமெரிக்க அதிபர் ட்ரம்பிற்குச் சாதகமாக அமைந்தது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

ரந்தீர் ஜெய்ஸ்வால்
ரந்தீர் ஜெய்ஸ்வால்

வெளியுறவுத் துறை விளக்கம்

இதற்கு இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் பதில் அளித்துள்ளார்…

“எப்ஸ்டீன் ஃபைல் என்று அழைக்கப்படும் ஆவணங்களில் உள்ள இ-மெயில் அறிக்கையில், பிரதமரின் பெயரும், அவருடைய இஸ்ரேல் பயணமும் இடம்பெற்றிருப்பதைப் பார்த்தோம்.

2017-ம் ஆண்டு ஜூலை மாதம் பிரதமர் இஸ்ரேலுக்கு அலுவல் ரீதியாகப் பயணம் மேற்கொண்டார் என்பதைத் தவிர, அதில் இருக்கும் அனைத்துமே குற்றவாளியின் குப்பை வதந்தி.

இவை கடும் கண்டனத்துடன் நிராகரிக்கப்பட வேண்டும்”.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

"விஜய் வாங்கும் சம்பளம் ஒயிட்டில் எவ்வளவு? கருப்பில் எவ்வளவு?" – திண்டுக்கல் சீனிவாசன் கேள்வி

திண்டுக்கல்லில் நடைபெற்ற அதிமுக பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அதிமுக முன்னாள்...

திமுக – காங்கிரஸ் பஞ்சாயத்து; அனல் தகிக்கும் மதுரை வடக்குத் தொகுதி – என்னதான் நடக்கிறது அங்கே?

திமுக, காங்கிரஸ் இடையேயான உறவில் ஏற்கெனவே புகைச்சல் ஏற்பட்டிருக்கிறது. இருதரப்பினரும் மாறி...

நாஞ்சிக்கோட்டை: பூட்டியே கிடக்கும் பொதுக் கழிவறை; அவதியுறும் மக்கள்- நடவடிக்கை எடுக்குமா மாநகராட்சி?

தஞ்சாவூர் மாவட்டம், நாஞ்சிக்கோட்டை சாலை முனியாண்டவர் காலனியில் உள்ள கழிவறை பயன்பாடு...

'நாட் ரீச்சபிளில் இருப்பவர்கள் பற்றி கேட்காதீங்க' – விஜய் குறித்து செந்தில் பாலாஜி விமர்சனம்

கோவை மாவட்டம், சிங்காநல்லூர் தொகுதியில் திமுக தேர்தல் அலுவலகம் ஏற்கனவே திறக்கப்பட்டுள்ளது....