19
March, 2026

A News 365Times Venture

19
Thursday
March, 2026

A News 365Times Venture

DOGE-ல் இருந்து விலகிய மஸ்க்… ட்ரம்ப் – எலான் மஸ்க் நட்பில் விரிசலா; ட்ரம்ப் என்ன சொல்கிறார்?

Date:

‘அமெரிக்க அதிபர் ட்ரம்ப், டெஸ்லா தலைவர் எலான் மஸ்க் இடையே மனக்கசப்போ?’ என்கிற கேள்வி நேற்று முன்தினத்தில் இருந்து உலகில் வட்டமடித்து வருகிறது.

‘ஒரு ஸ்ட்ரைட் ஆண் மற்றொரு ஆணை எவ்வளவு காதலிக்க முடியுமோ, அதிபர் ட்ரம்பை அவ்வளவு நான் காதலிக்கிறேன்’ என்று கூறிய எலான் மஸ்க், தற்போது ட்ரம்ப் அறிமுகப்படுத்திய சட்டம் ஒன்றுக்கு கடும் எதிர்ப்புகளை தெரிவித்துள்ளார். அதுதான் இந்த சர்ச்சைக்கு காரணம்.

கூடுதலாக, இந்த விவாதங்களுக்கு வலு சேர்ப்பதுபோல, எலான் மஸ்க் DOGE அமைப்பில் இருந்து விலகுவதாக நேற்று முன்தினம் அறிவித்திருந்தார்.

டொனால்ட் ட்ரம்ப், எலான் மஸ்க்

ஆரம்பத்தில் ட்ரம்பும், எலான் மஸ்க்கும் எதிரும் புதிருமாகத் தான் இருந்தனர். ட்ரம்ப் மற்றும் எலான் மஸ்க்கின் கொள்கைகள் ஒன்று சேர, கடந்த ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தல் பிரசாரத்தில் கைக்கோத்தனர். அப்போதிருந்து ட்ரம்ப் – எலான் மஸ்க் நட்பு பிரிக்க முடியாததாக ஆகிவிட்டது.

அமெரிக்க அதிபராக ட்ரம்ப் வெற்றி பெற்றதில் எலான் மஸ்க்கிற்கு கணிசமான பங்கு உண்டு. இதற்கு கைமாறாகத் தான், அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டதும் தான் உருவாக்கிய DOGE அமைப்பின் தலைவராக எலான் மஸ்கை அறிவித்தார்.

இது அமெரிக்காவில் மிகப்பெரிய சர்ச்சையைக் கிளப்பியது. இதற்கு எலான் மஸ்க் சம்பளம் வாங்காத தன்னார்வ பணியாளராக செயல்படுவார் என்று விளக்கம் கொடுக்கப்பட்டது.

டோஜின் முக்கியப் பணி, ‘அரசின் தேவையில்லாத செலவுகளைக் குறைப்பது’ தான். இது சம்பந்தமாக பல அதிரடி நடவடிக்கைகளை கொண்டு வந்தார்.

இதில், கிட்டத்தட்ட இரண்டரை லட்சம் பெடரல் பணியாளர்களை பணிநீக்கம் செய்தது அல்லது பணியில் இருந்து ஓய்வுபெற வைத்தது… பெடரல் பணியாளர்களின் கிரெடிட் கார்டை குறைத்தது போன்ற பல நடவடிக்கைகள் அடுங்கும்.

ஆட்குறைப்பு, நிதி குறைப்பு போன்றவை அரசின் செயல்பாட்டை மெதுவாக்கும் என்று எழுந்த விமர்சனங்களுக்கு எலான் மஸ்க்கும் சரி… ட்ரம்பும் சரி செவிமடுக்கவில்லை.

எலான் மஸ்க் | DOGE
எலான் மஸ்க் | DOGE

சமீபத்தில், ட்ரம்ப் ‘ஒன் பிக் பியூட்டிஃபுல் பில்’ என்ற வரி குறைப்பு சட்டத்தை அமல்படுத்தினார்.

கடந்த செவ்வாய்கிழமை (மே 27), இந்த சட்டம் குறித்து பேட்டி ஒன்றில் எலான் மஸ்க், “இந்தச் சட்டம் பெடரலின் செலவீனத்தை அதிகரிக்கும். டோஜ் எதற்காக உருவாக்கப்பட்டதோ, அந்த நோக்கமே எட்டப்படாது.

ஒன்று, இந்த சட்டம் பெரிதாக இருக்க முடியும் அல்லது அழகாக இருக்க முடியும். இரண்டுமாக இருக்க முடியாது. நான் நினைத்ததை விட, அரசாங்கத்தின் பொருளாதார நிலைமை மோசமாக இருக்கிது.

நான் போதுமான அளவு செய்துவிட்டேன். இனி அரசியல் நன்கொடைகள் எதுவும் செய்யாமல், எனது நிறுவனங்களின் மீது கவனம் செலுத்தப் போகிறேன்” என்று தெரிவித்திருந்தார்.

ட்ரம்பிற்கு எதிராக எலான் மஸ்க் பேசுகிறார் என்று பேச்சு எழுந்துகொண்டிருந்த வேளையில், நேற்று முன்தினம் (மே 28), தனது எக்ஸ் பக்கத்தில் டோஜில் இருந்து விலகுவதாக பதிவிட்டார் எலான் மஸ்க்.

அந்தப் பதிவில், “சிறப்பு அரசு ஊழியராக என்னுடைய பதவிக்காலம் முடிவுக்கு வருகிறது. அரசின் தேவையில்லாத செலவுகளை குறைக்க இதன் மூலம் வாய்ப்பளித்த அதிபர் ட்ரம்பிற்கு எனது நன்றி. டோஜ் வரும் நாள்களில் இன்னும் பலப்படும் மற்றும் அரசு செயல்பாடுகளில் பங்கு வகிக்கும்” என்று குறிப்பிட்டிருந்தார்.

இது தான் சர்ச்சையை பெரிதாக்கியது.

டொனால்டு ட்ரம்ப்
டொனால்டு ட்ரம்ப்

ஆனால், டோஜில் எலான் மஸ்க் பதவிக்காலம் 130 நாள்கள் மட்டுமே. அது இன்றோடு முடிவடைகிறது. அதனால் தான், எலான் மஸ்க் அவ்வாறு பதிவிட்டிருந்தார்.

ட்ரம்ப் – எலான் மஸ்க் இடையே விரிசல் என்று விவாதம் பெரிதாக கிளம்பவே, ட்ரம்ப் மற்றும் எலான் மஸ்க் இணைந்து இன்று செய்தியாளர் சந்திப்பை ஏற்பாடு செய்திருக்கிறார்.

தனது சமூக வலைதள பக்கத்தில் ட்ரம்ப், “அவருக்கு இன்று கடைசி நாளாக இருக்கலாம். ஆனால், உண்மையாக அப்படி இல்லை. அவர் நம்முடன் தான் எப்போதும் இருக்கப்போகிறார்… நமக்கு உதவி செய்யப்போகிறார். எலான் அற்புதமானவர்” என்று பதிவிட்டுள்ளார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

நேபாளத்தின் புதிய விடியல்: இளைஞர் கைகளில் ஒரு தேசத்தின் கனவு

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது....

முட்டுகட்டை போட்ட சிபிஎம்; கறார் காட்டிய திமுக – '5' சீட்டுக்கு இறங்கி வந்த இந்திய கம்யூனிஸ்ட்!

தி.மு.க கூட்டணியில் இரு கம்யூனிஸ்ட் கட்சிகளுடனான தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தையில் தொடர்...

கார்ட்டூன்..!

Source link

“திமுக-வினர் வேண்டுகோள் விடுத்தார்களே தவிர கட்டளையிடவில்லை.!' – இந்திய கம்யூனிஸ்ட் வீரபாண்டியன்

நான்காம் கட்ட பேச்சுவார்த்தைக்கு பின் இந்திய கம்யூனிஸ்ட்- திமுக இடையே தொகுதி...