16
April, 2026

A News 365Times Venture

16
Thursday
April, 2026

A News 365Times Venture

Delhi: 'டெல்லியின் வளர்ச்சிகளை பாஜக உறுதி செய்யும்.!' – பிரதமர் மோடி நெகிழ்ச்சி

Date:

டெல்லியில் மொத்தமுள்ள 70 தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக கடந்த பிப்ரவரி 5 ஆம் தேதி வாக்குப்பதிவு நடந்தது.

இந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை தற்போது நடைபெற்று வருகிறது. இதில் பெரும்பான்மை தொகுதிகளை வென்று பாஜக தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது. 27 ஆண்டுகளுக்குப் பிறகு டெல்லியில் பாஜக ஆட்சியை அமைக்கும் சூழல் நிலவுகிறது. இதையொட்டி டெல்லியின் பல்வேறு பகுதிகளில் பாஜக தொண்டர்கள் பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடி வருகின்றனர்.

கொண்டாட்டம்

மேலும் டெல்லி சட்டமன்ற தேர்தல் வெற்றி உறுதியாவதைத் தொடர்ந்து மாலை 7 மணி அளவில் டெல்லி பா.ஜ.க அலுவலகத்திற்கு மோடி செல்ல இருப்பதாகவும், அங்கு கொண்டாட்டங்களுக்கான ஏற்பாடு நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இந்நிலையில் பாஜகவின் வெற்றி குறித்து பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றைப் பதிவிட்டிருக்கிறார்.

அந்தப் பதிவில், “ வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியை வழங்கிய டெல்லி மக்களுக்கு எனது நன்றிகள். வளர்ந்த இந்தியாவை உருவாக்குவதில் டெல்லி முக்கிய பங்கு வகிக்கிறது. டெல்லியின் அனைத்து துறையின் வளர்ச்சிகளையும் பாஜக உறுதி செய்யும்.

மக்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்கான அனைத்து முயற்சிகளையும் செய்வோம். இந்த வெற்றிக்காக உழைத்த அனைத்து ஊழியர்களுக்கும் நன்றி” என்று நெகிழ்ச்சியாகப் பதிவிட்டிருக்கிறார்.


Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

"அண்ணன் மேல் ஒரேயொரு குற்றச்சாட்டுதான் இருக்கிறது; அது..!"- ஸ்டாலின் முன் பேசிய பிரேமலதா விஜயகாந்த்

தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் 23 ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள...

'ஸ்டாலின் சார் மாதிரி பொய் சொல்லமாட்டோம்…' – தேர்தல் அறிக்கையை வெளியிட்ட விஜய்!

சென்னையிலுள்ள தனியார் விடுதியில் தவெக தலைவர் விஜய் விவாசியிகள், நெசவாளர்கள், தொழிலாளர்கள்...

`உங்கள் கட்சியில் அனைத்து சீட்டுகளையும் முஸ்லிம் பெண்களுக்கே கொடுங்களேன்..!' – அமித் ஷா Vs அகிலேஷ்

நாடாளுமன்றம், சட்டமன்றம் போன்ற அரசியல் மையங்களில் பெண்களுக்கான இட ஒதுக்கீடு வழங்கும்...

`அரசாங்கத்திற்கு ஆயுதம் தயாரிக்க உதவி செய்யுங்கள்!' – General Motors, Ford-ஐ கேட்கும் ட்ரம்ப் & கோ

ரஷ்யா - உக்ரைன் போரில் உக்ரைனுக்கு உதவி... ஈரான் மீது தாக்குதல்...