4
June, 2026

A News 365Times Venture

4
Thursday
June, 2026

A News 365Times Venture

Delhi Election: தேர்தலுக்கு 4 நாள்களுக்கு முன் ஆம் ஆத்மியிலிருந்து விலகிய 7 MLA-க்கள்; பின்னணி என்ன?

Date:

டெல்லி சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு பிப்ரவரி 5-ம் தேதி நடைபெறவிருக்கிறது. இந்தியா கூட்டணியில் இருந்தாலும், ஆளும் ஆம் ஆத்மியும், காங்கிரஸும் தனித்தனியே களமிறங்குகின்றன.

இதனால், ஆம் ஆத்மி vs காங்கிரஸ் vs பாஜக என மும்முனைப் போட்டி நிலவுகிறது. இந்த நிலையில், வாக்குப்பதிவுக்கு நான்கு நாள்கள் மட்டுமே இருக்கும் சூழலில், ஆம் ஆத்மி கட்சியிலிருந்து 7 எம்.எல்.ஏ-க்கள் திடீரென விலகியிருப்பது பேசுபொருளாகியிருக்கிறது.

டெல்லி சட்டமன்றத் தேர்தல் – அரவிந்த் கெஜ்ரிவால்

நரேஷ் யாதவ், ரோஹித் குமார், ராஜேஷ் ரிஷி, மதன் லால், பவன் சர்மா, பாவ்னா கவுட், பி.எஸ்.ஜூன் ஆகிய 7 பேர் ஆம் ஆத்மி மற்றும் கெஜ்ரிவால் மீது குற்றச்சாட்டை முன்வைத்து விலகியிருக்கின்றனர். இதில், நரேஷ் யாதவ் இந்தத் தேர்தலில் மெஹ்ராலி தொகுதி வேட்பாளராக முதலில் அறிவிக்கப்பட்டிருந்தார். ஆனால், கடந்த டிசம்பரில் குரான் அவமதிப்பு வழக்கில் பஞ்சாப் நீதிமன்றத்தால் அவருக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனைக்கு ஆளானதால், அந்தத் தொகுதியில் அவர் மாற்றப்பட்டு மஹேந்தர் சவுத்ரி என்பவர் வேட்பாளராகக் களமிறக்கப்பட்டார்.

இந்த நிலையில், நரேஷ் யாதவ் தனது ராஜினாமா கடிதத்தில், “நேர்மையான அரசியல் என்ற கொள்கையிலிருந்து ஆம் ஆத்மி விலகிவிட்டது. ஊழலின் சதுப்பு நிலத்தில் தாமாகவே சிக்கிக்கொண்டது.” என்று விமர்சித்திருக்கிறார். அதேபோல், பாவ்னா கவுட் தனது ராஜினாமா கடிதத்தில், “உங்கள் மீது நம்பிக்கை இழந்துவிட்டேன்.” என கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் கெஜ்ரிவால் மீது குற்றச்சாட்டை முன்வைத்திருக்கிறார்.

அரவிந்த் கெஜ்ரிவால்

மேலும், தனது ராஜினாமா கடிதத்தை எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்த ரோஹித் குமார், “அன்னா ஹசாரே தலைமையிலான ஊழலுக்கு எதிரான இயக்கத்தின்போது, ​​தலித் மற்றும் வால்மீகி சமூகங்களுக்கு சமூக நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் ஆம் ஆத்மியில் இணைந்தேன். ஆம் ஆத்மி அப்போது உறுதியும் அளித்திருந்தது. ஆனால் ஒப்பந்த அடிப்படையிலான தொழிலாளர்களை நீக்குதல், தற்காலிக தொழிலாளர்களை நிரந்தரமாக்குதல் போன்ற முக்கியமான பிரச்னைகளுக்கு கட்சித் தீர்வுகாணத் தவறிவிட்டது.” என்று குற்றம்சாட்டியிருந்தார்.

விலகிய மற்ற எம்.எல்.ஏ-க்களும் இதேபோன்ற குற்றச்சாட்டுகளை தங்களின் ராஜினாமா கடிதத்தில் அடுக்கினர். விலகிய 7 பேருக்கும் இந்தத் தேர்தலில் முன்பே சீட் மறுக்கப்பட்டுவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

டெல்லி தேர்தலில் யார் வெற்றி பெற்று ஆட்சியமைப்பார் என்பது பற்றிய உங்களின் கருத்துகளை கமென்ட்டில் பதிவிடவும்!


Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

`என்ன ஜெயிக்க வெச்சதுக்கு நன்றி'- `அமைச்சரே இது உங்க தொகுதி இல்ல' வைரலான ஸ்ரீநாத் வீடியோ; ADMK சாடல்

தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதியில் முன்னாள் அமைச்சர் கீதா ஜீவனை எதிர்த்து த.வெ.க...

`அறிவாலயம் வரும் சிறுத்தைகள்; திமுக க்ரீன் சிக்னல் டு எடப்பாடி Vs வேலுமணி – தொடரும் மோதல்! | கழுகார்

தூய ஆட்சியில் தீய அதிகாரி!''மாதம் 20 லட்டுக்கள் தரணும்...'தாம்பரம் போலீஸ் கமிஷனர்...

Pocso சட்டம் தவறாக பயன்படுத்துவதை தடுக்க ‘சிங்கப்பெண் விழிப்புணர்வு’ முகாம்! – உயர் நீதிமன்ற உத்தரவு

திருச்சி, தூத்துக்குடி, புதுக்கோட்டை, மதுரை போக்சோ நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்ககுளை...