1
July, 2025

A News 365Times Venture

1
Tuesday
July, 2025

A News 365Times Venture

Delhi: சிவராத்திரியில் அசைவம் பரிமாறியதாக தகராறு; பெண்கள் மீது தாக்குதல் – SFI, ABVP சொல்வதென்ன?

Date:

நேற்றைய தினம் (26.02.2025 – புதன் கிழமை) தெற்கு டெல்லியில் உள்ள தெற்கு ஆசிய பல்கலைக்கழகத்தில் அசைவ உணவு பரிமாறப்பட்டதால் தகராறு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

மகா சிவராத்திரி தினத்தில் பல்கலைக்கழக உணவகத்தில் அசைவ உணவருந்தியதற்காக மாணவர்களை ஏ.பி.வி.பி அமைப்பினர் தாக்கியதாகக் கூறப்படுகிறது.

இது குறித்து டெல்லி காவல் நிலையம் மற்றும் பல்கலைக்கழக நிர்வாகத்தின் தரப்பில் எதுவும் கூறப்படவில்லை. டெல்லி இந்திய மாணவர் சங்கம் (SFI) சார்பாக இது குறித்து அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையின்படி, ஏ.பி.வி.பி அமைப்பினர் சொன்னபடி மகா சிவராத்திரி இரவில் அசைவ உணவு பரிமாறுவதை நிறுத்தாததால் உணவு விடுதியில் மாணவர்களைத் தாக்கியுள்ளனர்.

பெண்கள் உட்பட, மாணவர்களையும் உணவக பணியாளர்களையும் தாக்கியுள்ளனர். இதனால் மாணவர் சங்கத்தினர் உடனடியாக பல்கலைக்கழக நிர்வாகம் அகில பாரதிய வித்தியார்த்தி பரிசத் அமைப்பினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமெனக் கேட்டுக்கொண்டுள்ளனர்.

இந்திய மாணவர் சங்கத்தின் தகவல்களை ஏ.பி.வி.பி-யினர் மறுத்துள்ளனர். மகாசிவராத்திரியில் விரதம் இருந்த மாணவர்களுக்கான உணவகத்தில் SFI-யினர் வலுக்கட்டாயமாக அசைவ உணவை பரிமாற முயன்றதாக அவர்களது அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

இந்திய மாணவர் சங்கத்தினரின் நடவடிக்கை மத சுதந்திரத்தையும் நல்லிணக்கத்தையும் குழைக்கும் முயற்சி என ஏ.பி.வி.பி குற்றம்சாட்டியுள்ளது. இந்த விவகாரத்தில் நடுநிலையான விசாரணை தேவை எனக் கோரியுள்ளனர்.

இந்த விவகாரம் தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. அதில் உணவகத்தில் வன்முறை நடந்ததைக் காண முடிகிறது. ஏ.பி.வி.பி-யினர் பெண்களைத் தாக்கும் வீடியோ எஸ்.எஃப்.ஐ சார்பாக வெளியிடப்பட்டது.


Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

உட்கட்சிக்குள் எழும் எதிர்ப்புகள்; "நீங்கள் காங்கிரஸில் தொடர்வீர்களா?" – சசி தரூரின் பதில்

ஆபரேஷன் சிந்தூர் மூலம் பஹல்காம் தீவிரவாதத் தாக்குதலுக்கு மத்திய அரசு பதிலடி...

RCB Event Stampede : 'ரசிகர்களுக்கு வேகம் தேவைதான், அதேபோல..!' – செல்வப்பெருந்தகை

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (RCB) அணியின் வெற்றி கொண்டாட்டத்தில் மக்கள் உயிரிழந்த...

Tatkal: இனி தட்கல் டிக்கெட் எளிதாக கிடைக்கும்; IRCTC-ல் ஆதார் இணைப்பு வருகிறது!

ரயில் டிக்கெட் புக்கிங் நடைமுறைகளை கொஞ்சம் கொஞ்சமாக கடுமையாக்கி வருகிறது ரயில்வே...