3
February, 2026

A News 365Times Venture

3
Tuesday
February, 2026

A News 365Times Venture

'CM கான்வாய்க்காக நிறுத்தப்பட்ட விஜய்யின் கார்; கடுப்பான முதல்வர் தரப்பு! – உளவுத்துறைக்கு 'ரெய்டு?'

Date:

தவெகவின் மூன்றாமாண்டு தொடக்க விழா விஜய் தலைமையில் பனையூரில் இன்று நடந்திருந்தது. அதே ECR யைக் கடந்துதான் முதல்வர் ஸ்டாலினும் மாமல்லபுரத்தில் சுற்றுலா உச்சி மாநாட்டை தொடங்கி வைக்க சென்றிருந்தார். முதல்வரின் கான்வாயும் விஜய்யின் காரும் ஒரே நேரத்தில் நீலாங்கரையை கடக்கும் சூழல் ஏற்பட்டதால், உஷ்ணமான மேலிடம் உளவுத்துறையினரை காய்ச்சி எடுத்திருப்பதாக கிசுகிசுக்கின்றனர்.

Vijay

தவெகவின் மூன்றாமண்டு நிகழ்வுக்காக காலை 9:55 மணியளவில் விஜய் நீலாங்கரை வீட்டிலிருந்து புறப்பட்டிருந்தார். அதே சமயத்தில்தான் முதல்வரின் கான்வாயும் நீலாங்கரையை நோக்கி வந்து கொண்டிருந்தது. இதனால் ECR சாலையை கனெக்ட் செய்யும் பக்கவாட்டு சாலைகளை காவல்துறையினர் கான்வாய்க்காக ப்ளாக் செய்தனர்.

இதில் நீலாங்கரை வீட்டிலிருந்து ECR யைப் பிடித்து பனையூரை எட்டவிருந்த விஜய்யின் காரும் மற்ற சில வாகனங்களோடு சேர்த்து தடுத்து நிறுத்தப்பட்டது. 2-3 நிமிடங்களில் முதல்வரின் கான்வாய் நீலாங்கரையை கடக்கவே போக்குவரத்து விடுவிக்கப்பட்டிருக்கிறது.

விஜய்யின் கார்
விஜய்யின் கார்

விஜய் வீட்டிலிருந்து கிளம்பி அலுவலகம் வருவதை பாலோ செய்ய சாட்டிலைட் சேனல்கள் கேமராமேன்களுடன் சில யூனிட்டுகளை நியமித்திருந்தனர். அவர்கள் விஜய்யின் கார் சி.எம் இன் கான்வாய்க்காக தடுத்து நிறுத்தப்பட்டதாக தகவல் சொல்லவே, முதல்வருக்காக விஜய்யின் தடுத்து நிறுத்தம் என லைவ்விலேயே செய்தியாக்கிவிட்டன சேனல்கள்.

ஸ்பாட்டிலிருந்த உளவுத்துறையினர் அப்போதே நம்முடைய தலையைத்தான் மேலிடம் உருட்டப்போகிறதென கடுப்பாகினர். எதிர்பார்த்ததை போலவே தவெக அலுவலகத்தில் நோட் எடுத்துக் கொண்டிருந்த உளவுத்துறையினருக்கு மேலிடத்திலிருந்து அழைப்பு வந்தது.

‘இவ்வளவு அஜாக்கிரதையாகவாக இருப்பீர்கள். முதல்வரின் நிகழ்ச்சி இருக்கிறதென்று தெரியுமல்லவா? விஜய் தரப்பிடம் தகவலைச் சொல்லி அவரை முதல்வரின் வருகைக்கு முன்போ பின்போ வரச் சொல்லியிருக்க வேண்டியதுதானே? இதெல்லாம் வழக்கமான நடைமுறைதானே. இதில் கூடவா கோட்டை விடுவீர்கள்’ என ரெய்டு விட்டிருக்கின்றனர்.

CM Convoy
Stalin Convoy

‘நிகழ்ச்சி 11 மணிக்குதான் என தவெக தரப்பு அறிவித்திருந்தது. அதனால் இயல்பாகவே விஜய் 10:40 க்கு மேல்தான் நீலாங்கரை வீட்டிலிருந்து கிளம்புவார் என அனுமானித்திருந்தோம். ஆனால், திடீரென உடனிருந்தவர்கள் எதோ ஜோசிய காரணங்களை அடுக்க சீக்கிரமே கிளம்பியிருக்கிறார் விஜய். மேலும், வேறு எதுவும் பெரிதாக இல்லாததால் செய்தியாளர்கள்தான் இந்த விவகாரத்தை ஊதி பெரிதாக்கி லைவ்விலேயே அடித்துவிட்டார்கள்’ என மேலிடத்திடம் கூறி ஒருவழியாக சமாளித்ததாக ஸ்பாட்டிலிருந்த உளவுத்துறையினர் பெருமூச்சு விட்டனர்.

சி.எம் கான்வாய்க்காக விஜய்யின் வாகனம் நிறுத்தப்பட்டதென பரவிய செய்தியில்தான் முதல்வர் தரப்பு கடுப்பானதாகவும் அதனால்தான் ஸ்பாட்டிலிருந்த உளவுத்துறையை பிடித்து அதிகாரிகள் வாங்கு வாங்கென வாங்கியதாகவும் கூறுகின்றனர் காவல்துறை வட்டாரத்தினர்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

'ஆகஸ்ட்' மாத எண்ணெய் அரசியல்; இந்திய வர்த்தகத்தில் அமெரிக்கா நாட்டாமை; மத்திய அரசின் மௌனம் | Detail

2025-ம் ஆண்டு அக்டோபர் மாதம். "இனி இந்தியா, ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய்...

தமிழ்நாட்டுக்கு 2 புல்லட் ரயில்கள்; சென்னை – பெங்களூரு 67.8 நிமிடங்களில்… அமைச்சர் அறிவிப்பு!

மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், நேற்று (ஞாயிறு) அதிவேக...

ஆரணி: வன்னியர் இட ஒதுக்கீடு கோரி பட்டதாரி இளைஞர் தற்கொலை – திமுக அரசு மீது அன்புமணி கடும் தாக்கு!

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அருகேயுள்ள புதுப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் கந்தன். இவரின்...