14
April, 2025

A News 365Times Venture

14
Monday
April, 2025

A News 365Times Venture

BJP: "பண்ணையார் என அன்போடு அழைக்கப்படும் நயினார் நாகேந்திரனுடன் இணைந்து அவரது வழியில்…" – அண்ணாமலை

Date:

2026 சட்டமன்றத் தேர்தல் வியூகங்கள், கூட்டணி கணக்குகளைத் திட்டமிட்டு மத்திய பாஜக தமிழ்நாட்டு அரசியலில் காய்களை நகர்த்தத் தொடங்கியிருக்கிறது.

இதில் அதிமுக கூட்டணி பேச்சுவார்த்தைகள் அடிபட அண்ணாமலை பதவி குறித்த பேச்சும் எழுந்தது. பின்னர் மாநில தலைவருக்கான தேர்தல் அறிவிப்பு வெளியானது.

இதில் நயினார் நாகேந்திரன் மட்டுமே விருப்ப மனு அளித்தார். இதையடுத்து நயினார் நாகேந்திரன் ஒரு மனதாகப் போட்டிகளின்றி பாஜக மாநிலத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்படவுள்ளார்.

புதிய தலைவரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் நிகழ்ச்சியும், தேசிய பொதுக்குழு உறுப்பினர்களைத் தேர்வு செய்யும் நிகழ்ச்சியும் இன்று மாலை 5 மணியளவில் வானகரம் ஸ்ரீவாரு மண்டபத்தில் நடைபெற்று வருகிறது.

இதில் தமிழக பாஜகவின் புதிய மாநிலத் தலைவராகப் பதவியேற்றார் நயினார் நாகேந்திரன்.

நயினார் நாகேந்திரன், அண்ணாமலை

பாஜகவின் மாநிலத் தலைவராக நயினார் நாகேந்திரன் பதவியேற்ற பிறகுப் பேசியிருக்கும் அண்ணாமலை, “ஐந்து முறை சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு மூன்று முறை வெற்றி பெற்று, ஒரு முறை அமைச்சரவையில் அமைச்சராகப் பணியாற்றியவர் நயினார் நாகேந்திரன்.

இரண்டு முறை பாராளுமன்றத் தேர்தலிலும் போட்டியிட்டவர். இப்படி அரசியலில் நீண்ட நெடிய அனுபவமிக்கவர். எல்லாராலும் பண்ணையார் என்று அன்போடு அழைக்கப்படும் நயினார் நாகேந்திரன் அவர்கள்.

அவருடன் இணைந்து அனைவரும் பணியாற்றுவோம். 2026 தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றியைச் சாத்தியப்படுத்துவோம்.

தமிழகத்திற்கு நேற்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வந்தபோது, தேசிய ஜனநாயகக் கூட்டணி இன்னும் பலமாகியுள்ளது. நிச்சயமாக வெற்றி பெறுவோம் என்கிற நம்பிக்கையை விதைத்திருக்கிறது.

அண்ணாமலை, நயினார் நாகேந்திரன்

புதிய மாநிலத் தலைவராகப் பொறுப்பேற்று 2026 சட்டப்பேரவைத் தேர்தலின் வெற்றியை நோக்கி பணியாற்றும் நயினார் நாகேந்திரன் அவர்களின் பின்னால் நாம் அனைவரும் ஒரே அணியாக அணிவகுத்து நின்று, அவரின் வழிகாட்டுதலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியை வெற்றிபெற வைக்கப் பாடுபடுவோம் என்று உறுதி ஏற்போம்.

உங்களை வழிநடத்த எனக்கு நான்கு ஆண்டுகள் அனுமதி கொடுத்ததற்கு எனது தனிப்பட்ட நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். நன்றி வணக்கம்.” என்று பேசியிருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/47zomWY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/47zomWY

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

TVK: 'நம் சமூகத்தில் சமத்துவம் நிலைத்திட உறுதி ஏற்போம்'-அம்பேத்கர் சிலைக்கு மரியாதை செலுத்திய விஜய்

அண்ணல் அம்பேத்கரின் 135வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை ஈசிஆர் பகுதியில்...

பாமக: 'நல்ல அறிகுறி தெரிகிறது; விரைவில் நல்ல செய்தி வரும்'- கட்சி விவகாரம் குறித்து ஜி.கே.மணி

பாமக நிறுவனர் ராமதாஸ் கடந்த வாரம் கட்சியின் தலைவராகவும், நிறுவனராகவும் தானே...

`பதவி மோகத்தில் தமிழ்நாட்டை பாழாக்கியவர் பழனிசாமி; இதெல்லாம் அமித் ஷாவுக்கு தெரியுமா?’ – ஸ்டாலின்

அடுத்த ஆண்டு தமிழ்நாட்டில் சட்டசபை தேர்தல் வர உள்ளது. கூட்டணி பேச்சுவார்த்தை,...

“மௌனச்சாமி எடப்பாடி; பாஜக – அதிமுக கூட்டணி 3, 4 வாரத்திற்குள் முடிந்துவிடுமா?'' – வைகோ சந்தேகம்

அதிமுக - பாஜக கூட்டணி குறித்து இன்று மதிமுக பொதுச்செயலாளர் செய்தியாளர்...