28
August, 2026

A News 365Times Venture

28
Friday
August, 2026

A News 365Times Venture

Belonging: A Journey of Love: சோனியா காந்தியின் புத்தகம்: வெளியீட்டுக்கு முன்பே மாறும் பதிப்பகம்!

Date:

சோனியா காந்தியின் வாழ்க்கை மற்றும் அரசியல் பயணங்களைப் பதிவு செய்துள்ள ‘பிலாங்கிங்: எ ஜர்னி ஆஃப் லவ்’ (Belonging: A Journey of Love) தன்வரலாற்றுப் புத்தகம், வரும் நவம்பர் 10-ம் தேதி உலகளவில் வெளியாகிறது.

அமெரிக்காவில் உள்ள ஆல்பிரட் எ. நாஃப் (Alfred A. Knopf) இந்தப் புத்தகத்தை வெளியிட உள்ள நிலையில், இதன் இந்திய வெளியீட்டு உரிமையைக் கொண்டிருந்த ‘பெங்குயின் ரேண்டம் ஹவுஸ் இந்தியா’ (Penguin Random House India) நிறுவனம் திடீரென அதிலிருந்து விலகியுள்ளது.

கையெழுத்துப் பிரதியில் சில மாற்றங்களைச் செய்யுமாறு பெங்குயின் தரப்பு கேட்டதாகவும், அதை சோனியா காந்தி ஏற்க மறுத்ததாலேயே இந்த விலகல் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன. எனினும், இந்தக் காரணத்தினால் தான் விலகியதாகக் கூறப்படுவதை பெங்குயின் இந்தியா மறுத்துள்ளது.

சோனியா காந்தி

‘பிலாங்கிங்’ என்ன புத்தகம்?

544 பக்கங்களைக் கொண்ட இந்தத் தன்வரலாற்று நூல், சோனியா காந்தியின் தனிப்பட்ட வாழ்க்கை முதல் பல ஆண்டுகால அரசியல் பயணம் வரை விரிவாகப் பேசுகிறது. இத்தாலியில் அவர் கழித்த குழந்தைப் பருவம், கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் ராஜீவ் காந்தியைச் சந்தித்தது, 1968-ல் நடைபெற்ற திருமணம் மற்றும் இந்தியாவின் முன்னணி அரசியல் குடும்பத்திற்குள் அவர் நுழைந்தது ஆகியவை இதில் இடம்பெற்றுள்ளன.

மேலும், சஞ்சய் காந்தியின் மறைவு, இந்திரா காந்தி மற்றும் ராஜீவ் காந்தியின் படுகொலைகள் போன்ற குடும்பத்தை உலுக்கிய துயரச் சம்பவங்கள் குறித்த அவரது பார்வையும் இந்நூலில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து அரசியலுக்குள் வந்தது, காங்கிரஸ் தலைவராகப் பொறுப்பு வகித்த காலம், மற்றும் 2004-ல் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி (UPA) ஆட்சி அமைந்தபோது பிரதமர் பதவியை ஏற்க அவர் மறுத்த முடிவு போன்ற முக்கியமான அரசியல் நிகழ்வுகளும் இதில் இடம்பெற்றுள்ளன எனக் கூறப்படுகிறது.

பெங்குயினுக்கும் சோனியா காந்திக்கும் என்ன மோதல்?

இந்தியாவில் இந்தப் புத்தகத்தை வெளியிடும் பணியில் ஈடுபட்டிருந்த பெங்குயின் ரேண்டம் ஹவுஸ் இந்தியா, வெளியீட்டுக்கு முன்பாக வழக்கமான ‘பேக்ட்-செக்கிங்’ (Fact-checking) மற்றும் ‘எடிட்டோரியல் ரிவ்யூ’ (Editorial review) பணிகளை மேற்கொண்டது. இந்தப் பணியின்போது புத்தகத்தின் சில பகுதிகளில் மாற்றங்களையோ அல்லது நீக்கங்களையோ அந்நிறுவனம் பரிந்துரைத்ததாகச் செய்திகள் வெளியாயின.

அவற்றை சோனியா காந்தி ஏற்க மறுத்ததால், பெங்குயின் இந்திய வெளியீட்டிலிருந்து விலகியதாகத் தகவல்கள் பரவின. ஆனால், பெங்குயின் ரேண்டம் ஹவுஸ் இந்தியா இதைத் தெளிவுபடுத்தியுள்ளது. சோனியா காந்தி மாற்றங்களை ஏற்க மறுத்ததால்தான் நிறுவனம் வெளியேறியது என்ற தகவல் சரியல்ல என்றும், எடிட்டோரியல் பரிந்துரைகள் மற்றும் உண்மை சரிபார்ப்புப் பணிகள் என்பவை வழக்கமான வெளியீட்டுச் செயல்முறையின் ஒரு பகுதி மட்டுமே என்றும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும், இரு தரப்புக்கும் இடையே நடைபெற்ற குறிப்பிட்ட எடிட்டோரியல் விவாதங்கள் குறித்து, வாடிக்கையாளர் ரகசியக் காப்பு ஒப்பந்தம் (Client confidentiality) காரணமாக விரிவாகக் கருத்து தெரிவிக்க முடியாது என்றும் பெங்குயின் விளக்கமளித்துள்ளது. இதனால், எந்தப் பகுதிகள் குறித்து உண்மையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டது என்பது தற்போதைக்கு முழுமையாக வெளிவரவில்லை.

அடுத்து என்ன?

பெங்குயின் இந்தியா விலகியிருந்தாலும், புத்தகத்தின் சர்வதேச வெளியீடு திட்டமிட்டபடி தொடர்கிறது. ஆல்பிரட் எ. நாஃப் நிறுவனம் மூலம் நவம்பர் 10-ம் தேதி உலகளவில் இது வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, இந்தியாவில் இந்தப் புத்தகத்தை வெளியிடுவதற்கான உரிமையைப் பெற ‘ஹார்பர்காலின்ஸ் இந்தியா’ (HarperCollins India) நிறுவனத்துடன் பேச்சுவார்த்தைகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

முடிவாக…

‘பிலாங்கிங்’ புத்தகத்தின் வெளியீடு எங்கும் ரத்து செய்யப்படவில்லை. சர்வதேச அளவில் திட்டமிட்டபடி நூல் வெளிவந்தாலும், இந்தியாவில் எந்தப் பதிப்பகம் இந்த 60 ஆண்டுகால வாழ்க்கைக் கதையை வாசகர்களிடம் கொண்டு செல்லப் போகிறது என்பதே இப்போதைய எதிர்பார்ப்பாகியுள்ளது.!

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

கூடலூர்: ஆட்கொல்லி புலி விவகாரம்; 2-வது நாளாக தொடரும் வேலை நிறுத்தம்! – பதற்றத்தில் காவல்துறை!

நாட்டில் மனித - வனவிலங்கு எதிர்கொள்ளல்கள் அதிகம் நிகழும் மாவட்டங்களில் ஒன்றான...

புதுச்சேரி: `மாநில அந்தஸ்துக்காக ராஜினாமா செய்யத் தயார்!' – பேரவையில் சீறிய முதல்வர் ரங்கசாமி

புதுச்சேரி சட்டப்பேரவையில் பட்ஜெட் மீதான விவாதத்தில் இன்று பேசிய பா.ஜ.க எம்.எல்.ஏ...

`நிதியமைச்சர் மரியவில்சன் இங்கிலாந்தின் அரசரா?’ – அடிதடி வழக்கில் நீதிமன்றம் கடுகடுத்த பின்னணி!

தமிழக சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் ஆர்.கே.நகர் தொகுதியில்...

சொத்துவரி விவகாரம்: கேள்வி கேட்ட திமுக கவுன்சிலர்; சரண்டர் ஆன சென்னை மாநகராட்சி ஆணையர்! –

சென்னையில் சொத்துவரி மறுமதிப்பீடு செய்யப்பட்ட விவகாரத்தை இன்று நடந்த மாநகராட்சி கூட்டத்தில்...