9
May, 2025

A News 365Times Venture

9
Friday
May, 2025

A News 365Times Venture

Aadhav Arjuna : 'விஜய்யுடன் இணைந்த ஆதவ் அர்ஜூனா!' – வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு

Date:

வாய்ஸ் ஆஃப் காமன்ஸ் நிறுவனத்தின் தலைவரும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் முன்னாள் துணைப் பொதுச்செயலாளருமான ஆதவ் அர்ஜூனா விஜய்யின் தவெக-வுடன் இணைந்து பயணிக்கவிருப்பதாக அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியாகியிருக்கிறது.

ஆதவ் அர்ஜுனா

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளராக இருந்த சமயத்தில் ஆதவ் பேசிய கருத்துகள் பலவும் பேசுபொருளாகியிருந்தது. ஆட்சி அதிகாரத்தில் பங்கு, தலீத் தமிழகத்தின் முதலமைச்சராக வேண்டும் என பல கருத்துகளையும் பேசியிருந்தார். எல்லாருக்குமான தலைவர் அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவிலும் ‘2026 இல் பிறப்பின் அடிப்படையில் ஒரு முதல்வர் வரக் கூடாது.’ என வாரிசு அரசியலுக்கு எதிராக பேசியிருந்தார்.

இதனைத் தொடர்ந்து விசிக-விலிருந்து 6 மாத காலத்துக்கு இடைநீக்கம் செய்யப்பட்டிருந்தார். இடைநீக்க அறிவிப்பு வெளியான பிறகு, தாமாகவே முன்வந்து முழுமையாக கட்சியிலிருந்து வெளியேறிக் கொள்வதாகவும் ஆதவ் அர்ஜூனா அறிவித்திருந்தார். கட்சியிலிருந்து வெளியேறுவதாக சொன்ன அந்த அறிக்கையிலேயே தொடர்ந்து அரசியலில் ஈடுபடுவேன் என்பதையும் அறிவித்திருந்தார்.

ஆதவ் அர்ஜூனா

இந்நிலையில்தான், கடந்த சில நாள்களாக ஆதவ் அர்ஜூனா விஜய்யின் தவெக-வில் இணையப்போவதாக தகவல்கள் வெளியாகியிருந்தது. விஜய்யும் ஆதவ் அர்ஜூனாவும் பட்டினப்பாக்கத்திலுள்ள விஜய்யின் அலுவலகத்தில் சந்தித்து பேசியதாகவும் கூறினார்கள். அதனைத் தொடர்ந்து இன்று ஆதவ் அர்ஜூனா விஜய்யின் பனையூர் அலுவலகத்துக்கு வந்திருந்தார். இந்தச் சூழலில்தான் இப்போது ஆதவ் அர்ஜூனா தவெக-வில் இணைவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. அதன்படி,

ஆதவ் – விஜய்

தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச்செயலாளராக ஆதவ் அர்ஜூனாவை விஜய்யே அறிவித்து அறிக்கையையும் வெளியிட்டுள்ளார்.

TVK

மேலும், CTR நிர்மல் குமார் தகவல் தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடகப் பிரிவு துணைப்பொதுச்செயலாளராகவும் அறிவித்திருக்கிறார்.

‘மேற்கண்ட பொறுப்புகளில் நியமிக்கப்படுபவர்கள் அனைவரும் எனது உத்தரவு மற்றும் ஆலோசனைக்கிணங்க, கழகப் பொதுச்செயலாளர் திரு. என்.ஆனந்த் அவர்களது வழிகாட்டுதலின்படி கழகப் பணிகளை மேற்கொள்வார்கள்.

TVK

கழகத் தோழர்களும், அனைத்து நிலை நிர்வாகிகளும் புதிய பொறுப்பாளர்களுக்கு முழு ஒத்துழைப்பை நல்கி, வரும் சட்டமன்றத் தேர்தலுக்கானக் கட்டமைப்பு மற்றும் தேர்தல் முன்னெடுப்புகளை முழுவீச்சில் மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

மேலும், தேர்தல் பிரசார மேலாண்மைப் பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள திரு. ஆதவ் அர்ஜுனா அவர்கள், என்னுடைய அரசியல் வியூக வகுப்பாளர் திரு. ஜான் ஆரோக்கியசாமி அவர்களுடன் இணைந்து, அவரது அரசியல் வியூகங்களைப் பின்பற்றி, தேர்தல் பிரசாரங்களை வடிவமைத்து, தேர்தல் மேலாண்மைப் பணிகளை மேற்கொள்வார் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.’ என விஜய் கூறியிருக்கிறார்.

19 பேருக்கு புதிய பொறுப்புகளை வழங்கி அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார் விஜய்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

'இந்திய ராணுவத்தினருக்கு நம் ஆதரவை வெளிப்படுத்தும் நேரம் இது'- பேரணியை அறிவித்த ஸ்டாலின்

இந்திய ராணுவத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் பேரணி நடைபெறும் என்று முதலமைச்சர்...

India – Pakistan : `இந்தியாவுக்கு எதிராக சீனா ஜெட்?' – கேள்வியும் சீனாவின் பதிலும்!

பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத இலக்குகளை இந்தியா...

'போர் எளிய மக்களின் உயிரை அழித்து மீளாத்துயரத்தை தரக்கூடியது'- எழுத்தாளர்கள், கலைஞர்கள் அறிக்கை

இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில் தமிழ்...

"கடவுளே… நாட்டை காப்பாற்றுங்கள்" – பாக். நாடாளுமன்றத்தில் அதன் முன்னாள் ராணுவ மேஜர் பேசியது என்ன?

இந்தியா - பாகிஸ்தான் எல்லையில் பதற்ற நிலை அதிகரித்து வருகிறது. ஆபரேஷன்...