28
March, 2026

A News 365Times Venture

28
Saturday
March, 2026

A News 365Times Venture

`காங்கிரஸ் தொகுதியை கைப்பற்றி கம்யூனிஸ்ட்; தேமுதிக-வை கூல் செய்த முதல்வர்!' – பைனல் ஆன பட்டியல்!

Date:

காங்கிரஸ் கைவசம் உள்ள ஒரு தொகுதியை கம்யூனிஸ்ட் கைப்பற்றியுள்ளது. தே.மு.தி.கவுடனும் தொகுதியை இறுதி செய்துவிட்டது தி.மு.க தலைமை.  இதனால், தி.மு.க கூட்டணியில் கட்சிகளுக்கான தொகுதிகள் பட்டியல் இன்று மாலை அறிவிக்கபடும் என தெரிகிறது.  
தி.மு.க கூட்டணியில் உள்ள கட்சிகளுடன்  தொகுதி பங்கீட்டை இறுதி செய்த தி.மு.க அந்த கட்சிகளுக்கான தொகுதிகளை ஒதுக்க முடியாமல் கடந்த வாரமாக திணறிவந்தது. இரண்டு தொகுதிகளை வாங்கிய கட்சிகளுடன் எளிதாக தொகுதியை இறுதி செய்த தி.மு.க தலைமை, காங்கிரஸ், கம்யூனிஸ்ட், வி.சி.க உள்ளிட்ட கட்சிகளுடன் தொகுதி பங்கீட்டை இறுதி செய்ய முடியவில்லை. எதிர்கட்சிகயான அ.தி.மு.க தொகுதியை இறுதி செய்து, அவர்கள் கட்சியின் வேட்பாளர்கள் பட்டியலையும் வெளியிட்டுவிட்டனர்.

அண்ணா அறிவாலயம்

ஆனால், தி.மு.க தரப்பு இதுவரை தொகுதிகளை கூட முடிவு செய்ய முடியாமல் இழுபறியாகி வந்தது. கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பாக தி.மு.க-வின் பேச்சுவார்த்தைக் குழுவை அழைத்து இரண்டு நாட்களுக்குள் கூட்டணிக் கட்சிகளுக்கான  தொகுதிகளை முடிவு செய்யுங்கள் என்று கடுமையாக சொல்லியிருக்கிறார். இதன் தொடர்ச்சியாகவே நேற்று காலை காங்கிரஸ் கட்சியின் குழுவை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அந்த பேச்சுவார்த்தையில் 23 தொகுதிகளை இறுதி செய்துவிட்டு, ஐந்து தொகுதிகளை மட்டும் டெல்லி தலைமையிடம் ஒப்புதல் பெற்று சொல்கிறோம் என்று சொல்லியது காங்கிரஸ் தரப்பு.

இந்த பேச்சுவார்த்தை முடிந்த கையோடு  சென்னையிலிருந்து செல்வபெருந்தகை, கிரிஷ் சோடங்கர் உள்ளிட்டோர் டெல்லி கிளம்பி சென்றனர். அங்கு காங்கிரஸ் மூத்த தலைவர்களுடன் தொகுதிகளை இறுதி செய்வதற்கான பேச்சுவார்த்தையை துவக்கினார்கள்.

தே.மு.தி.க தரப்புடன் தி.மு.க தரப்பு நேற்று ஒரே நாளில் மூன்று முறை பேச்சுவார்த்தை நடத்தியது. தே.மு.தி.க தரப்பில் தற்போது தி.மு.க  வசம் உள்ள தொகுதிகளை கேட்டதோடு, தி.மு.க-வின் மாவட்ட செயலாளர்கள் களம் இறங்க உள்ள தொகுதிகளையும் தங்களுக்கு வேண்டும் என விடாப்பிடியாக கேட்டது. இதனால் நேற்று மாலை வரை அந்த கட்சியுடன் தொகுதியை இறுதி செய்யாமல் தே.மு.தி.க இழுத்தடித்து வந்தது.

இந்நிலையில், இன்று காலை முதல்வரே தலையிட்டு தே.மு.தி.கவுக்கான தொகுதிகளை இறுதி செய்யும் பணியை கையில் எடுத்திருக்கிறார். அவர் பேசி தே.மு.தி.க கேட்ட சில தொகுதிகளை மட்டும் மாற்றிக்கொடுத்துள்ளார். அதன்படி பல்லாவரம், திருத்தனி, ஓமலுார், மைலம், போளூர், குடியாத்தம்,சேலம் மேற்கு, தர்மபுரி, விருதுநகர், விருதாசலம் ஆகிய பத்து தொகுதிகள் தே.மு.தி.க-வுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது எனத் தெரிகிறது.

ரிஷிவந்தியம், திருக்கோவிலுார், விக்கிரவாண்டி உள்ளிட்ட தொகுதிகளை தே.மு.தி.க கேட்டதற்கு அது தி.மு.க-வின் ஆதர்சன தொகுதி என முதல்வர் சொல்லியிருக்கிறார்.

பிரேமலதா - ஸ்டாலின்
பிரேமலதா – ஸ்டாலின்

அதே போல், மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடந்த இரண்டு நாட்களாக தி.மு.க தலைமையுடன் தொகுதியை இறுதி செய்ய பேசிவந்தது. காங்கிரஸ் வலுவாக உள்ள கன்னியாக்குமரி மாவட்டத்தில் தங்களுக்கு ஒரு தொகுதி வேண்டும் என மார்சிஸ்ட் வலியுறுத்தியது. ஆனால், காங்கிரஸ் தரப்பு அதை கொடுக்க மறுத்தது.

இறுதியாக அமைச்சர் மனோ தங்கராஜ் வசம் உள்ள பத்மநாபபுரம் தொகுதியை மார்சிஸ்ட் கட்சிக்கு தர தி.மு.க முன்வந்தது. ஆனால், மார்சிஸ்ட் தரப்பில் விளவங்கோடு தொகுதி வேண்டும் என்று உறுதியாக நின்றனர். இதனால், தி.மு.க தரப்பு டெல்லியில் உள்ள செல்வ பெருந்தகையுடன் இன்று காலை தொடர்பு கொண்டு பேசினார்கள். விளவங்கோடு தொகுதியை விட்டுக்கொடுக்க செல்வ பெருந்தகை ஒப்புக்கொண்டுள்ளார். இதன்பிறகு, மார்சிஸ்ட் கட்சிகான தொகுதிகள் இறுதியாக உள்ளது.

அந்த கட்சி வசம் தற்போதுள்ள கீழ்வேளூர், கந்தர்வகோட்டை ஆகிய தொகுதிகளுடன் தி.மு.க வசம் உள்ள பழனி, திருவெற்றியூர் தொகுதியை மார்சிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கியுள்ளது தி.மு.க. பழனி  தொகுதியில் போட்டியிட்ட தி.மு.க வேட்பாளர் ஐ.பி.செந்தில் குமார் இம்முறை திண்டுக்கல் தொகுதியில் போட்டியிட முடிவெடுத்துள்ளதால், அந்த தொகுதியை மார்சிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கியுள்ளது தி.மு.க.

அதே போல் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு தி.மு.க  திருப்போரூர், காட்டுமன்னார்கோவில், செய்யூர், கள்ளக்குறுச்சி, பெரியகுளம், பண்ரூட்டி, திண்டிவனம், அரக்கோணம் ஆகிய எட்டு தொகுதிகளை இறுதி செய்துள்ளது. தி.மு.க ஒதுக்கிய இந்த எட்டு தொகுதிகளில் தங்களுக்கு திருப்தியில்லை என விடுதலை சிறுத்தைகள் சொல்லிவந்தாலும், அந்த தொகுதிகளையே இறுதி செய்ய தி.மு.க தரப்பு முடிவெடுத்துள்ளது.

திருமா

இறுதியாக காங்கிரஸ் கட்சிக்கு மட்டும் சில தொகுதிகளை இறுதி செய்ய வேண்டியிருப்பதால், அந்த வேலைகள் தற்போது தீவிரமாக நடந்துவருகிறது. இன்று மாலைக்குள் காங்கிரஸ் கட்சியுடன் தொகுதியை இறுதி செய்து, மாலை கூட்டணிக்கட்சிகளுக்கான பட்டியலை வெளியிட தி.மு.க முடிவெடுத்துள்ளது.

இன்று தொகுதி பட்டியல் அறிவிக்கப்பட்டால், நாளை தி.மு.க-வின் வேட்பளார்கள் பட்டியலும் வெளியிடப்படும் என்கிறார்கள் தி.மு.க வினர். 

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

'மாற்றுக் கட்சி சீனியர்கள்..' ஸ்டாலின், உதயநிதிக்கு எதிராக விஜய் டிக் அடித்திருக்கும் அந்த இருவர்!

திமுகவின் வேட்பாளர் பட்டியல் வெளியாகியிருக்கிறது. 164 வேட்பாளர்கள் திமுக சார்பில்...

அண்ணாவுக்கு பிறகு… நெடுஞ்செழியனை முந்தி கருணாநிதி முதல்வராக, திமுக தலைவராக மாறிய கதை! ஆடுபுலி 11

திமுகவில் துரைமுருகன், கே.என்.நேரு, பொன்முடி, டி.ஆர்.பாலு, ஆ.ராசா, அதிமுகவில் திண்டுக்கல் சீனிவாசன்,...

கோவைக்கு மாறிய செந்தில் பாலாஜி; அமைச்சருக்கு இடம் இல்லை! – வெளியானது திமுக வேட்பாளர் பட்டியல்!

தமிழக சட்டபேரவைத் தேர்தல் ஏப்ரல் 23 ஆம் தேதி நடைபெற இருக்கிறது....

"தனது கலைத்திறமையால் மகிழ்வித்து வந்த சுந்தர்.சி இனி மக்களுக்கு சேவை ஆற்றுவார்"- வாழ்த்திய குஷ்பு

அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம் பெற்றுள்ள புதிய நீதிக்கட்சி...