27
March, 2026

A News 365Times Venture

27
Friday
March, 2026

A News 365Times Venture

'என் பிரசாரத்தை மட்டும் ஏன் தடுக்குறீங்க?' – கொந்தளிக்கும் விஜய்!

Date:

தவெக தலைவர் விஜய் நாளை பெரம்பூரிலிருந்து பிரசாரத்தை தொடங்க திட்டமிட்டிருந்தார். இந்நிலையில், பெரம்பூரின் தேர்தல் அதிகாரி விஜய்யின் பிரசாரத்துக்கு அனுமதி மறுத்திருக்கின்றார். இதற்கு எதிராக விஜய் கொந்தளித்து போய் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.

TVK Vijay – விஜய்

விஜய் கூறியிருப்பதாவது, `தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் திட்டமிடப்பட்ட பரப்புரைக்குச் சென்னை மாநகரக் காவல் துறையும், அதிகாரிகள் சிலரும் இணைந்து முட்டுக்கட்டை போட்டிருப்பது, ஜனநாயகத்தின் மீது நடத்தப்பட்டுள்ள ஒரு பாசிசத் தாக்குதலே ஆகும்.

நிகழ்ச்சிக்கு இரண்டு நாள்கள் முன்பே (26/03/26) தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில், சென்னை பெரம்பூர் சட்டமன்றத் தொகுதி, முல்லை நகர் சந்திப்பில் தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள அனுமதி கோரப்பட்டது.

ஆனால், நம்முடைய தேர்தல் பரப்புரை நிகழ்வுக்கு ஒரு நாளுக்கு முன்பு சென்னை மாநகராட்சி சார்பில் திடீரென அந்த இடத்தில் பள்ளம் தோண்டப்பட்டு, இரும்பால் ஆன தடுப்புகள் வைக்கப்பட்டுள்ளன. இந்த திடீர்ப் பள்ளங்களும் தடுப்புகளும் எங்கிருந்து வந்தன??

இந்த நிலையில் அங்கே காவல் துறை ஆய்வு செய்து 3000 பேர் கூடமுடியாது என்று கூறியுள்ளது. இதன் அடிப்படையில் தற்போது அந்த இடம் பிரசாரம் செய்வதற்கு உகந்ததல்ல என்று அனுமதி மறுக்கப்பட்டு, தமிழக வெற்றிக் கழகத்தின் மனு நிராகரிக்கப்பட்டுள்ளது. இப்படி அதிகாரிகள் சிலரின் துணையுடன் த.வெ.க.விற்கு எதிராகச் செயல்படும் தி.மு.க. காபந்து அரசுக்கு வெட்கமாக இல்லையா?

TVK Vijay
TVK Vijay

தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் நான் தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள முயற்சி செய்யும் போதெல்லாம், தி.மு.க. அரசு ஏதேதோ காரணங்களைக் கூறி, அனுமதியைத் தாமதிப்பதும் அல்லது அனுமதி மறுப்பதும் தொடர்கதையாகி வருகிறது.

மக்களின் பேராதரவைப் பெற்ற ஒரு புதிய அரசியல் கட்சியின் ஜனநாயக உரிமைகளைத் திட்டமிட்டு நசுக்கும் இந்தச் செயல், ஆளுங்கட்சியின் ஏவலர்களாக அதிகாரிகள் சிலர் செயல்படுகிறார்களா என்ற எண்ணத்தை ஏற்படுத்துகிறது. அத்துடன் “எங்களுக்கு எதிராக யார் உருவெடுத்தாலும் அவர்களை அதிகார பலத்தால் நசுக்குவோம்” என நினைப்பது அப்பட்டமான அடக்குமுறையே ஆகும்.

தமிழக வெற்றிக் கழகத்தைக் கண்டு தி.மு.க. எந்த அளவிற்கு அஞ்சுகிறது என்பதற்கு இந்தத் தடையே சாட்சி. எனவே, வரும் சட்டமன்றத் தேர்தலில் ஜனநாயக விரோதத் தி.மு.க. ஆட்சியைத் தமிழக மக்கள், வீட்டிற்கு அனுப்பப் போவது உறுதி’ எனக் கூறியிருக்கிறார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

'கூட்டம் கூடுவதற்கு ஏற்ற இடமல்ல' – விஜய்யின் பிரசாரத்துக்கு தேர்தல் அலுவலர் அனுமதி மறுத்தது ஏன்?

தவெக தலைவர் விஜய் நாளை பெரம்பூரிலிருந்து தனது பிரசாரத்தை தொடங்குவதாக திட்டமிட்டிருந்தார்....

`எங்கள் கூட்டணியில் எந்த இழுபறியும் இல்லை; விரும்பிய தொகுதிகள் கிடைத்துள்ளன!' – திருமாவளவன்

சென்னை அண்ணா அறிவாலயத்தில் விசிக தொகுதி ஒதுக்கீடு தொடர்பான பேச்சுவார்த்தைக்குப் பின்...

"தோனி அப்படி விளையாடுவதற்கு ஓய்வு பெற்றுவிடலாம்..!"- அஷ்வின் சொல்வது என்ன?

ஐபிஎல் 2026 திருவிழா நாளை (மார்ச் 28) தொடங்கவிருக்கிறது. இதில் மார்ச்...

பெரம்பூரில் விஜய் பிரசாரத்துக்கு அனுமதி மறுப்பு? நிர்வாகிகள் அவசர ஆலோசனை! – நிலவரம் என்ன?

தவெக தலைவர் விஜய் நாளை அவர் போட்டியிடவிருக்கும் பெரம்பூர் தொகுதியிலிருந்து பிரசாரத்தை...