27
March, 2026

A News 365Times Venture

27
Friday
March, 2026

A News 365Times Venture

தவெக: 234 வேட்பாளர்களையும் இறுதி செய்த விஜய்; நாளை வேட்பாளர் பட்டியல் வெளியீடு?

Date:

வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலுக்கான தவெகவின் வேட்பாளர் பட்டியலை விஜய் இன்று இறுதி செய்யவிருக்கிறார். இதைத் தொடர்ந்து தவெகவின் வேட்பாளர் அறிமுகக் கூட்டத்தையும் நாளை நடத்தவிருக்கின்றனர்.

TVK Vijay | விஜய்

தவெக சார்பில் முதற்கட்டமாக 60 வேட்பாளர்களைக் கடந்த மார்ச் 10 ஆம் தேதி விஜய் உறுதி செய்திருந்தார். வேட்பாளர்களை நேரில் அழைத்து வாழ்த்து கூறி அனுப்பியிருந்தார்.

இதைத் தொடர்ந்து கடந்த வாரத்தில் இரண்டாம் கட்டமாக 50 வேட்பாளர்களை உறுதி செய்து அவர்களையும் விஜய் நேரில் சந்தித்து வாழ்த்து கூறியிருந்தார்.

உறுதி செய்யப்பட்ட இந்த 110 வேட்பாளர்கள் வேட்பு மனுத் தாக்கல் செய்ய தேவையான ஆவணங்களைச் சரிபார்க்கும் பணி கடந்த சில நாள்களாக தவெகவின் தேனாம்பேட்டை அலுவலகத்தில் நடந்திருந்தது. இதே அலுவலகத்தில்தான் என். ஆனந்த், ஆதவ் ஆர்ஜுனா, வியூக வகுப்பாளர் ஜான் ஆகியோர் எஞ்சிய 124 வேட்பாளர்களை உறுதி செய்யும் பணியிலும் இறங்கியிருந்தனர்.

இன்று அதிகாலை வரைக்கும் மிக திவீரமாக வேட்பாளர்களை இறுதி செய்யும் வேலைகள் நடந்திருக்கின்றன. இதைத் தொடர்ந்து இறுதி செய்யப்பட்ட வேட்பாளர்கள் இன்று பனையூரில் விஜய்யைச் சந்திக்கவிருக்கின்றனர். அவர்களுக்கு வாழ்த்து கூறி அவரவர் தொகுதிக்கான மொத்த டேட்டாவையும் ஒரு புத்தகமாக விஜய் வழங்கவிருக்கிறார்.

த.வெ.க - விஜய்
TVK – Vijay

நாளையே வேட்பாளர் அறிமுகக் கூட்டத்தையும் நடத்த தவெக தரப்பு திட்டமிட்டிருக்கிறது. ஆனால், அதற்கான இடமும் அனுமதியும் கிடைப்பதில் சிக்கல்கள் நிலவுவதால், இடத்தை இறுதி செய்ய பரபரப்பாக ஓடிக்கொண்டிருக்கிறது விஜய் தரப்பு.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

பாலியல் குற்றங்கள் குறித்து சர்ச்சை கருத்து: "மனப்பூர்வமான மன்னிப்பு"- எஸ்.வி.சேகர் வெளியிட்ட வீடியோ

நேற்று திண்டுக்கல்லில் நடைபெற்ற திருமணத்தில் கலந்துகொண்ட நடிகர் எஸ்.வி.சேகர் செய்தியாளர்களைச் சந்தித்தார்....

கேரளம்: தேர்தல் ஆணையத்தின் சுற்றறிக்கையில் பாஜக சீல்; முதல்வர் ஆவேசம்; தேர்தல் அதிகாரி சொல்வது என்ன?

கேரள மாநிலத்தில் ஏப்ரல் 9-ம் தேதி சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ள...

அவிநாசி: எல்.முருகனைக் களமிறக்கி துணை முதல்வருக்கு காய் நகர்த்தும் பா‌ஜக? பின்னணி என்ன?

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் களமிறங்கும் வேட்பாளர்களின் பட்டியலை அரசியல் கட்சிகள்...

நாமக்கல்: `பட்டியல் மற்றும் பிற சமூக குழந்தைகளுக்கு தனித்தனி அங்கன்வாடி மையங்கள்!'- அண்ணாமலை கண்டனம்

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் ஒன்றியம், காக்காவேரி ஊராட்சி புதுகாலனியில் பட்டியல் சமூக...