24
March, 2026

A News 365Times Venture

24
Tuesday
March, 2026

A News 365Times Venture

'முதலமைச்சரின் வீட்டுக்கே சென்று கேட்டோம்.!' – 5 தொகுதிகளை ஒப்புக்கொண்டு வெதும்பிய பெ.சண்முகம்!

Date:

திமுக கூட்டணியில் இழுபறியாகவே நீடித்து வந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இறுதியாக திமுக வழங்குவதாக கூறிய 5 தொகுதிகளுக்கே ஒப்புதல் தெரிவித்து ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருக்கிறது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஏன் இறங்கி வந்தது என பேசிய மாநிலச் செயலாளர் பெ.சண்முகம், ‘கூட்டணியில் நிறைய கட்சிகள் இருப்பதால், எல்லாருக்கும் சீட்டுகளை பகிர்ந்தளிப்பதில் சிக்கல் இருக்கிறது. அதனால் நாங்கள் கேட்ட 6 தொகுதிகளிலிருந்து ஒரு தொகுதியை குறைத்துகொள்ள சொல்லி முதல்வர் கேட்டார்.

எங்களின் மாநில செயற்குழுவால் சீட் குறைப்பை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. எங்களுக்கு திருப்தியில்லை. முதல்வரை அவரின் வீட்டில் சந்தித்தும் தொகுதியை குறைக்க வேண்டாம், 6 சீட்டே கொடுங்கள் எனக் கேட்டோம். அப்போதும் முதல்வர் அவர் தரப்பு சிரமங்களை சொல்லி, 5 சீட்டுகளை ஏற்றுக்கொள்ளுமாறு கூறினார்.

கூட்டணி
கூட்டணி

நாங்கள் எடுக்கும் முடிவு கூட்டணியின் ஒற்றுமையை குலைத்து, அதிமுக – பாஜக கூட்டணிக்கு சாதகமாக அமைந்துவிடக்கூடாது என்பதற்காகவே இதை ஏற்றுக்கொண்டோம். சென்னையில் ஒரு தொகுதி வேண்டுமென எங்களின் விருப்பப்பட்டியலை கொடுத்திருக்கிறோம். அதை நிறைவேற்றி கொடுக்குமாறு கேட்டிருக்கிறோம்’ என்றார்

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

"ஏன், கார் வாங்கும் தகுதி கேப்டன் குடும்பத்திற்கு இல்லையா?" – பிரேமலதா விஜயகாந்த் காட்டம்

தேமுதிக மாவட்ட செயலாளர்களுடன் அக்கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் இன்று...

சாத்தான்குளம் கொலை வழக்கு: கைது செய்யப்பட்ட 9 காவலர்களும் குற்றவாளிகள்தான்!"- நீதிமன்றம் தீர்ப்பு

தமிழ்நாட்டையே உலுக்கிய சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கில், 6 ஆண்டு விசாரணைக்குப்...

'கம்யூனிஸ்ட், விசிகவை விட அதிக சீட்டுதான்(?)' – மா.செ கூட்டத்தில் என்ன பேசினார் பிரேமலதா?

திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை பரபரப்பாக நடந்து கொண்டிருக்கும் சூழலில்,...

தேர்தல் ஆணையத்தின் அறிக்கையில் பாஜக முத்திரை! – வலுக்கும் கண்டனங்கள்

கேரளாவில் தேர்தல் ஆணைய அலுவலகத்தில் இருந்து வெளியான ஒரு அறிக்கையில் பாஜகவின்...