22
March, 2026

A News 365Times Venture

22
Sunday
March, 2026

A News 365Times Venture

ஈரானிய எண்ணெயை இந்தியா வாங்கப் போகிறதா? 'குறுக்கே' நிற்கும் இரண்டு காரணங்கள் என்ன?

Date:

கடலில் நிற்கும் கப்பல்களில் உள்ள தடை செய்யப்பட்ட ஈரானிய எண்ணெயை வாங்கிக் கொள்ளுங்கள் என்று நேற்று முன்தினம் (மார்ச் 20) அமெரிக்கா ‘அனுமதி’ அளித்துள்ளது.

அந்தந்த நாடுகள் ஈரானிய எண்ணெய் வாங்க அமெரிக்காவின் அனுமதி தேவையில்லை தான். ஆனாலும், அமெரிக்கா அனுமதி கொடுத்துள்ளது.

இந்த அனுமதியும் வெறும் 30 நாள்களுக்குத் தான்.

ஈரான் போர்

ஈரானிய‌ எண்ணெய்

Kpler தரவுகளின் படி, மத்திய கிழக்கு கடற்பகுதியில் இருந்து சீனா கடற்பகுதிக்கு அருகே வரை, 170 மில்லியன் பேரல்கள் ஈரானிய எண்ணெய் கப்பல்களில் உள்ளன.

அமெரிக்காவின் அறிக்கை படி, இந்த எண்ணெயை தான் உலக நாடுகள் வாங்க வேண்டும். புதிதாக தயாரிக்கப்படும் ஈரானிய எண்ணெய் வாங்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்தியா ஈரானிய எண்ணெய் வாங்கப் போகிறதா?

இந்தியாவில் இப்போதே எண்ணெய் தட்டுப்பாடு மிகப்பெரிய அளவில் உள்ளது. ஈரான் போர் நீடித்தால், இந்த நிலை இன்னும் மோசமாகும்.

அதனால், அமெரிக்காவின் அனுமதிக்குப் பிறகு, ஈரானிய எண்ணெயை வாங்க இந்திய எண்ணெய் நிறுவனங்கள் ரெடியாக உள்ளனவாம்.

ஆனால், அதை உடனே செய்யாமல் இந்திய நிறுவனங்கள் இரண்டு விஷயங்களுக்காக காத்திருக்கின்றன.

ஒன்று, இந்திய அரசின் வழிகாட்டுதலுக்காக.

மற்றொன்று, ஈரானுக்கு எப்படி கட்டணம் செலுத்துவது என்கிற அமெரிக்காவின் நெறிமுறைகளுக்காக.

இந்தத் தகவல்களை ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

கட்டணத்தில் என்ன பிரச்னை?

ஈரான் பொதுவாக வர்த்தகங்களுக்கு அமெரிக்க டாலர்களை பெறுவதில்லை. அது தான் சிக்கல்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related