19
March, 2026

A News 365Times Venture

19
Thursday
March, 2026

A News 365Times Venture

Vijay : 'என்ன ஆனாலும் தனியாதான் போறோம்!' – விஜய்யின் கட்டளையும் வியூகப்புள்ளியின் லாஜிக்கும்!

Date:

தவெக – என்.டி.ஏவுடன் கூட்டணி பேசுவதாக செய்தி வெளியாகி அரசியல் வட்டாரமே பரபரப்பானது. இந்நிலையில், கட்சியின் முக்கிய நிர்வாகிகளுடன் நேற்று தீவிர ஆலோசனையில் ஈடுபட்ட விஜய், ‘என்ன ஆனாலும் தனியாதான் போறோம். பார்த்துக்கலாம்…’ கறாராக கூறிவிட்டதாக உற்சாகமாக தகவல் சொல்கின்றனர் பனையூர் வட்டாரத்தினர்.

TVK Vijay | விஜய்

தவெகவுக்கான வார் ரூமை ஆதவ் அர்ஜூனா தேனாம்பேட்டையில் ஒரு பெரிய வளாகத்தின் 7 வது மாடியில் நடத்தி வருகிறார். விஜய்யும் அவ்வபோது இந்த வார் ரூமுக்கு வந்து ஆலோசனைகளை நடத்திவிட்டு பணியாளர்களை சந்தித்து உற்சாகப்படுத்திவிட்டு செல்வார்.

நேற்றும் விஜய் இந்த தேனாம்பேட்டை அலுவலகத்துக்கு வந்திருந்தார். புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜூனா, விஷ்ணு ரெட்டி, ஜெகதீஸ் என தனக்கு நெருக்கமான கட்சி நிர்வாகிகளுடன் 2 மணி நேரத்துக்கும் மேலாக விஜய் ஆலோசனை நடத்தியிருந்தார்.

இந்த மீட்டிங்கில்தான் ‘என்ன ஆனாலும் நாம தனியாதான் போறோம். தனியாதான் எலெக்சனை சந்திக்கிறோம்’ என விஜய் கறாராக கூறியதாக கிசுகிசுக்கின்றனர் தலைமைக்கு நெருக்கமான நிர்வாகிகள்.

TVK Vijay - தவெக விஜய்
TVK Vijay – தவெக விஜய்

முதற்கட்டமாக வேட்பாளர்களை இறுதி செய்த விஜய், அடுத்தக்கட்ட வேட்பாளர்கள் பட்டியலையும் தயார் செய்து கேட்டிருக்கிறார். அந்த வேட்பாளர்களையும் இந்த வாரத்துக்குள்ளேயே சந்திக்கவிருக்கிறார் என்கிறார்கள்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

'ரூ1.25 லட்சத்துக்கு குடும்பத்துக்கே விருப்ப மனு வாங்குனேன்!' – அறிவாலயத்தை வியக்க வைத்த உடன்பிறப்பு

அறிவாலயத்தில் வேட்பாளர் நேர்காணலை பரபரப்பாக நடத்திக் கொண்டிருக்கிறது திமுக. இன்று நடந்த...

தேனி: திமுக-வில் பன்னீர்; களத்தில் டிடிவி மனைவி? இழந்த செல்வாக்கை மீட்குமா அதிமுக? | முந்துவது யார்?

முந்துவது யார்?தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுவிட்டது. தற்போதைய நிலவரப்படி, யார் களத்தில் முந்துகிறார்கள்...

”விஜய்யிடம் கூட்டணி குறித்து எந்த பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை!” – நயினார் நாகேந்திரன்

தமிழக பா.ஜ.க தலைவர் நயினார் நாகேந்திரன், தனது இல்லத்தில் இன்று செய்தியாளர்களைச்...

'ஈரானிடம் அணு ஆயுதம் இல்லை; கமேனி தன் இறப்பிற்கு பயப்படவில்லை!' – ஜோ கென்ட் 'பரபர' தகவல்கள்

"ஈரானுக்கு எதிரான அமெரிக்காவின் போர் இஸ்ரேலின் அழுத்தத்தால் தொடங்கப்பட்டது... மனசாட்சிக்கு விரோதமாக...