17
March, 2026

A News 365Times Venture

17
Tuesday
March, 2026

A News 365Times Venture

ஹார்முஸ் ஜலசந்திக்கு போர் கப்பலை அனுப்புங்கள் – சீனா, ஜப்பானை அழைக்கும் ட்ரம்ப் – ஏன்? எதற்கு?

Date:

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எவ்வளவு முயற்சித்தும் ஹார்முஸ் ஜலசந்தியில் தனது பிடியை விடவில்லை ஈரான்.

அதன் வழியாக தான் இந்தியா, சீனா என பல நாடுகளுக்கு எரிசக்தி கொண்டு செல்லப்படுகின்றன.

ஹார்முஸ் ஜலசந்தி வழியாக கப்பலை விடவில்லை என்றால் தொடர் தாக்குதல் என்று ட்ரம்ப் எவ்வளவு சொல்லியும், ஈரான் கேட்பதாக இல்லை.

ஹார்முஸ் ஜலசந்தி

ட்ரம்ப் பதிவு

இந்த நிலையில், சீனா உள்ளிட்ட நாடுகளை அழைத்து ட்ரம்ப் தனது ட்ரூத் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் கூறியுள்ளதாவது…

“ஹார்முஸ் ஜலசந்தி மூடலால் பல நாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த நாடுகள் அமெரிக்கா உடன் சேர்ந்து ஹார்முஸ் ஜலசந்தியைத் திறந்தும், பாதுகாப்பாகவும் வைக்கவும் போர் கப்பலை அனுப்பும்.

ஏற்கெனவே அமெரிக்கா ஈரானின் 100 சதவிகித ராணுவ சக்தியை அழித்துள்ளது. இருந்தும் ஈரான் டிரோன்களை அனுப்பியோ, ஏவுகணைகளை ஏவியும் பிரச்னைகளை ஏற்படுத்தலாம்.

அதனால், சீனா, பிரான்ஸ், ஜப்பான், தென் கொரியா, இங்கிலாந்து மற்றும் பாதிக்கப்பட்டுள்ள பிற நாடுகள் ஹார்முஸ் ஜலசந்தியைக் காக்க கப்பல்களை அனுப்பும். அப்போது தான் ஈரான் அச்சுறுத்தலாக இருக்காது.

அதே சமயத்தில், ஹார்முஸ் ஜலசந்தி பாதை பாதுகாப்பாக மீண்டும் மாறும் வரை, அமெரிக்கா ஈரான் கடற்கரை ஓரத்திலும், ஈரான் கப்பல்கள் மீதும் தொடர்ந்து தாக்குதல் நடத்தும்”.

ட்ரம்பின் இந்தப் பதிவிற்கு எந்த நாடும் இன்னும் பதிலளிக்கவில்லை.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

'மனிதநேயமற்ற குற்றம்' – ஆப்கானிஸ்தான் மருத்துவமனை மீது பாகிஸ்தான் தாக்குதல்; 400 பேர் உயிரிழப்பு

கடந்த சில மாதங்களாக, பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் முட்டி மோதிக்கொண்டுதான் இருந்தன....

ஹார்முஸ் ஜலசந்தி: இந்தியாவுக்கு வர இரண்டு கப்பல்களை ஈரான் அனுமதித்தது எப்படி? – ஜெய்சங்கர் பதில்

ஈரான் போரின் மையமாக 'ஹார்முஸ் ஜலசந்தி'யும் இருந்து வருகிறது. போர் தொடங்கியதில்...

"தேர்தல் முடிந்ததும் பாஜக அதிமுகவை விழுங்கி துப்பிவிடும்" – உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்

திருப்பத்தூரில் நேற்று (மார்ச்.15) திமுக நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு...