7
July, 2025

A News 365Times Venture

7
Monday
July, 2025

A News 365Times Venture

இன்று அறிமுகமான `புதிய வருமான வரிச் சட்டம்!' -முக்கிய அம்சங்கள் என்னென்ன?!

Date:

கடந்த 1-ம் தேதி மத்திய நிதியமைச்சர், ‘அடுத்த வாரம் புதிய வருமான வரிச் சட்டம் அறிமுகப்படுத்தப்படும்’ என்று கூறியது, இன்று நிறைவேறி இருக்கிறது.

இன்று நடந்த கூட்டத்தொடரில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் புதிய வருமான வரிச் சட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளார்.

இது வெறும் அறிமுகப்படுத்தப்பட்டு தான் இருக்கிறதே தவிர, அமலுக்கு வரவில்லை. 2026-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் அமலுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்த புதிய சட்டத்தின் நோக்கமே எளிமைப்படுத்துதல் மற்றும் மக்களுக்கு எளிதாக புரிதல் ஆகும்.

மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்

இந்த சட்டத்தில் இருக்கும் முக்கிய அம்சங்கள்…

1. இந்த சட்டம் 622 பக்கங்களையும், 23 பிரிவுகளையும், 536 உட்பிரிவுகளையும் கொண்டிருக்கிறது. பழைய வருமான வரி சட்டத்தில் 298 உட்பிரிவுளையும், 23 பிரிவுகளையும், 823 பக்கங்களையும் கொண்டிருந்தது

2. இனி ‘அசஸ்மென்ட் ஆண்டுகள்’ என்ற ஒரு வார்த்தையே இருக்காது. அதற்கு பதில் ‘வரி ஆண்டு’ என்ற ஒற்றை வார்த்தை மட்டுமே பயன்படுத்தப்படும். அதாவது இதுவரை வருமானம் சம்பாதித்த ஆண்டை ‘முன் ஆண்டு’ என்றும், அதன் வரி கணக்கிடப்படும் ஆண்டை ‘அசஸ்மென்ட் ஆண்டு’ என்றும் கூறுவர். இதனால், பல குழப்பங்கள் ஏற்பட்டுக்கொண்டு இருந்தது.

இனி, புதிய வருமான வரிச் சட்டத்தின் படி, இரண்டு வார்த்தைகள் சொல்லப்படாது. வருமானம் சம்பாதிக்கும் ஆண்டை வெறும் ‘வரி ஆண்டு’ என்று குறிப்பிடப்படும்.

3. வருமான வரிச் சட்டம் 1961-ல் இருப்பதை தவிர, புதிதாக எந்தவொரு கூடுதல் வரியும் புதிய சட்டத்தில் அறிமுகப்படுத்தப்படவில்லை.

4. முன்பிருந்த சட்டத்தில் குறிப்பிடப்பட்டிருந்த வார்த்தைகளை எளிமைப்படுத்தப்பட்டு, இந்த சட்டத்தில் இடம்பெற்றுள்ளது.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

உட்கட்சிக்குள் எழும் எதிர்ப்புகள்; "நீங்கள் காங்கிரஸில் தொடர்வீர்களா?" – சசி தரூரின் பதில்

ஆபரேஷன் சிந்தூர் மூலம் பஹல்காம் தீவிரவாதத் தாக்குதலுக்கு மத்திய அரசு பதிலடி...

RCB Event Stampede : 'ரசிகர்களுக்கு வேகம் தேவைதான், அதேபோல..!' – செல்வப்பெருந்தகை

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (RCB) அணியின் வெற்றி கொண்டாட்டத்தில் மக்கள் உயிரிழந்த...

Tatkal: இனி தட்கல் டிக்கெட் எளிதாக கிடைக்கும்; IRCTC-ல் ஆதார் இணைப்பு வருகிறது!

ரயில் டிக்கெட் புக்கிங் நடைமுறைகளை கொஞ்சம் கொஞ்சமாக கடுமையாக்கி வருகிறது ரயில்வே...