7
March, 2026

A News 365Times Venture

7
Saturday
March, 2026

A News 365Times Venture

விவசாய கடன் தள்ளுபடி; இரு விமான நிலையங்களிடையே ரூ22000 கோடியில் மெட்ரோ ரயில்- மகா., பட்ஜெட் ஹைலைட்ஸ்

Date:

மகாராஷ்டிரா பட்ஜெட்டை மாநில முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் இன்று தாக்கல் செய்தார். அதில் மும்பையில் வடாலாவில் இருந்து சத்ரபதி சிவாஜி ரயில் நிலையம் வரை ரு.23,487 கோடியில் பூமிக்கு அடியில் மெட்ரோ ரயில் திட்டம் நிறைவேற்றப்படும் என்றும், இது தாராவி மற்றும் பாந்த்ரா டெர்மிஸ் வரை நீட்டிக்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. மும்பையில் உள்ள சத்ரபதி சிவாஜி டெர்மினஸ் விமான நிலையத்தில் இருந்து நவிமும்பையில் உள்ள விமான நிலையத்திற்கு ரூ.22,862 கோடியில் புதிய மெட்ரோ ரயில் திட்டம் நிறைவேற்றப்படும் என்று பட்ஜெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பெண்களுக்கு மாதம் ரு.1,500 வழங்கும் திட்டம் தொடரும். அதோடு நவிமும்பையில் புதிய கல்வி நகரம் உருவாக்கப்படும். விவசாயிகளின் 2 லட்சம் வரையிலான கடன் தள்ளுபடி செய்யப்படும். 2025ம் ஆண்டு செப்டம்பருக்கு முந்தைய கடன்கள் இத்திட்டத்தில் தள்ளுபடி செய்யப்படும்.

விவசாயிகளின் மின்கட்டணத்தை தள்ளுபடி செய்ய ரூ.20 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. மும்பையில் பாந்த்ரா-வர்சோவா இடையிலான கடற்சாலை திட்டம் 2028ம் ஆண்டுக்குள் முடிக்கப்படும். இச்சாலை பின்னர் பயந்தர் வரை நீட்டிக்கப்படும்.

1000 மக்கள் தொகை கொண்ட அனைத்து கிராம சாலைகளும் கான்கிரீட் மயமாக்கப்படும். மும்பை வடாலாவில் 130 ஏக்கர் பரப்பில் ஸ்டார்ட்அப் வளாகம் உருவாக்கப்படும். மும்பை மற்றும் புனேயில் போக்குவரத்து நெரிசலை குறைக்க சுரங்க சாலைகள் ஏற்படுத்தப்படும். பட்ஜெட்டில் திட்டச்செலவு ஒதுக்கீடு ரூ.7,69,467 கோடியாக இருக்கும். வருவாய் பற்றாக்குறை ரூ.40,552 கோடியாக இருக்கும். மொத்த பட்ஜெட்டில் 1,50,491 கோடி அளவுக்கு பற்றாக்குறை இருக்கும் என்று முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்தார். மேலும் மாநிலம் முழுவதும் 5 லட்சம் ஹெக்டேரில் இயற்கை விவசாய திட்டம் செயல்படுத்தப்படும். மாநிலம் முழுவதும் 295 அனிமேஷன் ஸ்டூடியோ உருவாக்கப்படும் என்றும் பட்ஜெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

தடைபோடும் அதிமுக; தாண்டிச் செல்லும் பாமக – அதகளப்படும் ஆற்காடு தொகுதி

ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு தொகுதியில், கடந்த முறைபோல அ.தி.மு.க கூட்டணியில் பா.ம.க...

"பெட்ரோல் விலை உயர்வைப் பற்றிக் கவலையில்லை; ஈரானை வீழ்த்துவதே இலக்கு!" – அதிபர் ட்ரம்ப் உறுதி

மத்திய கிழக்கில் ஈரான் மற்றும் அதன் நட்பு நாடுகளுக்கு எதிராக அமெரிக்கா...