1
March, 2026

A News 365Times Venture

1
Sunday
March, 2026

A News 365Times Venture

Modi: "திமுக அரசின் நியாயமற்ற தன்மையினாலேயே இது நடந்திருக்கிறது!" – மதுரையில் மோடி!

Date:

மதுரையில் இன்று தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பொதுக்கூட்டம் நடைபெற்று வருகிறது. இக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி இன்று மதுரைக்கு வருகைத் தந்துள்ளார். மதுரைக்கு வந்தவர் திருப்பரங்குன்றம் கோவிலில் தரிசனம் செய்தார். கோவிலில் வழிபாடு செய்தப் பிறகு பொதுக்கூட்டத்திற்கு வருகை தந்தார்.

Modi At Madurai

பொதுக்கூட்டத்தில் மோடி பேசுகையில், “பசும்பொன் முத்துராமலிங்க தேவர், மாவீரர் அழகு முத்துக்கோன், வீரபாண்டிய கட்டபொம்மன், மருது சகோதரர்கள் ஆகியோரின் பங்களிப்பை இன்று நினைவுகூர்கிறேன். நீதிக்காக போராடிய இமானுவேல் சேகரனாரையும் இன்று நினைவுகூர்கிறேன். இங்கே வருவதற்கு முன்பாக நான் திருப்பரங்குன்றம் சென்றிருந்தேன்.

முருகனை தரிசனம் செய்வது தெய்வீகமான அனுபவமாக இருந்தது. தமிழ்நாட்டின் நல் வளர்த்திற்காக இறைவனிடம் வேண்டினேன். பூரண சந்திரன் என்கிற இளம் பக்தன் உயிர் தியாகம் செய்தார் என்பதை அறிந்து என் இதயம் கனத்தது. அவருடைய மனைவியையும், இரண்டு குழந்தைகளையும் நான் சந்தித்து வந்தேன். அவர்களுடைய துக்கத்தை என்னால் உணர முடிந்தது. பூரண சந்திரனின் ஆத்மா சாந்தியடைய முருகனை பிரார்த்திக்கிறேன். ஆனால், திமுக அரசின் நியாயமற்ற தன்மையினாலேயே இது நடந்திருக்கிறது என்பது வலியை ஏற்படுத்துகிறது. திமுக என்ன வேணும்னாலும் செய்துவிட்டு போகட்டும். இறுதியில் வாய்மையே வெல்லும். முருகனின் பக்தர்கள் வெல்வார்கள். நாவில் இனிக்கும் தமிழுக்கும், நாசியில் மணக்கும் மல்லிகைக்கும் பெயர் போனது மதுரை.

Modi At Madurai
Modi At Madurai

நீங்கள் எனக்கு பொழியும் அன்பு கடந்த மாதம் நான் மலேசியா சென்றிருந்ததை நினைவுப்படுத்துகிறது. தமிழ் கலாச்சாரத்தை அங்கு ஆதரிக்க வேண்டி மலாயா பல்கலைக்கழகத்தில், திருவள்ளுவர் இருக்கை ஒன்றை அமைத்திருக்கிறோம். அங்கு திருவள்ளுவர் மையம் ஒன்றையும் அங்கு அமைத்து வருகிறோம். தமிழ்நாட்டில் சிலர் மீண்டும் ஆட்சியைப் பிடித்துவிடலாம் எனக் கனவு கண்டுக் கொண்டிருக்கிறார்கள்.

இந்தக் கூட்டத்தைப் பார்த்தப் பிறகு அவர்களுடைய கனவுகள் கானல் நீராய் ஆகிப் போய்விடும். இந்த தேர்தல் மாநிலத்திற்கு ஒரு திருப்புமுனை என்பதை மக்களாகிய நீங்கள் நன்கறிவீர்கள். தமிழ் நாட்டு மக்கள் அவர்களுடைய மனதில் தீர்மானம் செய்துவிட்டார்கள் என்பதை என்னால் கண்கூடாகப் பார்க்க முடிகிறது. திமுக வெளியேற்றப்பட வேண்டும் என்பதை மக்கள் தீர்மானித்துவிட்டார்கள். தேசிய ஜனநாயகக் கூட்டணி மாற்றத்தைக் கொண்டு வரும் என்பதை மக்கள் தெளிவாக அறிவார்கள்.

Modi At Madurai
Modi At Madurai

தமிழ்நாட்டில் அடுத்தடுத்து தேஜகூ-வின் அரசாங்கம்தான் என்பதை உங்களின் கண்களில் நான் காண்கிறேன். 25 ஆண்டுகளுக்குப் பிறகு 2021-ல் தமிழ்நாட்டு மக்கள் திமுகவுக்கு முழு பெரும்பான்மையை வழங்கினார்கள். ஆனால், நல்லாட்சியை அவர்களால் கொடுக்க முடியவில்லை. அவர்கள் மாநிலத்தைக் கொள்ளையடித்தார்கள். பரம்பரை அரசியலை முன்னெடுத்தார்கள். மக்களின் எதிர்பார்ப்புகளை மண்ணோடு மண்ணாக்கினார்கள். எம்.ஜி.ஆருக்கு மதுரை மாநகரம் உற்ற துணையாக நின்றது. அதனால்தான் திமுக-விற்கு மதுரை வேப்பங்காயாக இருந்து வந்திருக்கிறது.

மதுரைக்கு திமுகதான் கொள்ளை ரக அரசியலை அறிமுகப்படுத்தியது. சுத்தம், சுகாதார அளவில் மதுரையை தரைமட்ட அளவிற்கு அவர்கள் கொண்டு சென்றார்கள். ஊழல் காரணமாக மதுரை மேயரே பதவியை துறக்க நேர்ந்தது. இதுதான் அவர்களுடைய மாடல். தமிழ்நாடு ஒரு கரைப்பகுதி மாநிலம். இங்கு அளவற்ற சாத்தியக்கூறுகள் இருக்கின்றன. ஆனால், திமுகவும், காங்கிரஸும் 2014-ம் ஆண்டிற்கு முன்பு கூட்டாட்சி நடத்தியபோது ஆழ்ந்த உறக்கத்திலே இருந்தார்கள். கடந்த 12 ஆண்டுகளில் 12,000 கோடி மதிப்பிலான 74 திட்டங்கள் நிறைவேற்றப்பட்டிருக்கின்றன.

பிரதமர் மோடி
பிரதமர் மோடி

அதனால் பல வேலை வாய்ப்புகளும், பொருளாதார சந்தர்பங்களும் உருவாக்கப்பட்டிருக்கின்றன. நூறாண்டுகளுக்கும் மேலாக பாம்பன் பாலம் நிலையாக இருந்தது. ஆனால், இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு அது மாற்றப்பட்டிருக்க வேண்டும். ஆனால், 2004 முதல் 2014 வரை ஆட்சியில் இருந்த திமுகவும் காங்கிரஸும் என்ன செய்துக் கொண்டிருந்தார்கள். நாங்கள் வேலையில் வேகத்தைக் காட்டினோம். அதனால் இப்போது ரயில்கள் வேகமாக பயணிக்க முடிகிறது.” என்றார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

அறிவாலயம் வராத ம.நீ.ம – தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் இழுபறி?

தி.மு.க கூட்டணியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கியிருக்கும் நிலையில் மக்கள் நீதி...

அமெரிக்கா, இஸ்ரேல் மீது பதிலடி தாக்குதலை தொடங்கிய ஈரான் – தொடரும் பதற்றம்!

ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகள் இணைந்து இன்று தாக்குதலை...

கமேனி கொலை: ஈரான் இடைக்கால மதத்தலைவராக மூத்த மதகுரு அயதுல்லா அராபி நியமனம்

ஈரானில் இஸ்ரேல் மற்றும் அமெரிக்க கூட்டுப்படைகள் நேற்று நடத்திய தாக்குதலில் அந்நாட்டின்...

Ali Khamenei: "பழிவாங்குவதற்கு ஈரானுக்குக் கடமையும் உரிமையும் உள்ளன" – ஈரான் அதிபர் பெஷேஷ்கியான்

மத்திய கிழக்கில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. ஈரான் - அமெரிக்கா,...