முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் நேற்று முன்தினம் தனது ஆதரவு எம்.எல்.ஏ ஐயப்பன் உடன் திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க ஸ்டாலினை சந்தித்து திமுகவில் இணைந்து கொண்டார்.
திமுகவில் ஓ.பன்னீர்செல்வம் இணைந்ததை அடுத்து அவரது ஆதரவாளர்கள் அவரது சொந்த ஊரான பெரியகுளத்தில் பட்டாசுகளை வெடித்தும் பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கியும் கொண்டாடி மகிழ்ந்தனர்.
பெரியகுளத்தில் உள்ள ஓ.பன்னீர்செல்வத்தின் இல்லத்தில் உள்ள கேட்டில் அதிமுகவின் இரட்டை இலை சின்னம் பொறிக்கப்பட்டிருந்தது. தற்போது திமுகவில் சேர்ந்ததையடுத்து கேட்டில் பொறிக்கபட்டிருந்த இரட்டை இலை சின்னத்தை வெல்டிங் மிஷின் கொண்டு அகற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
மேலும் வீட்டின் சுவர்களில் அதிமுகவின் சின்னம் வண்ணங்களில் உள்ள கருப்பு வெள்ளை சிகப்பு வண்ணத்தில் உள்ள பெயிண்டுகள் அழிக்கப்பட்டு திமுகவின் சின்னத்தில் உள்ள கருப்பு மற்றும் சிகப்பு வண்ணங்களாக மாற்றப்பட்டு வருகிறது.

ஏற்கனவே ஓ.பன்னீர்செல்வம் பயன்படுத்தும் காரில் இருந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் புகைப்படத்தை அகற்றிவிட்டு முதலமைச்சர் ஸ்டாலின் படம் வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.




