27
February, 2026

A News 365Times Venture

27
Friday
February, 2026

A News 365Times Venture

விஜய்: 'எனக்கு துரோகம் இழைக்கப்பட்டதாக உணர்ந்தேன்' – சங்கீதா மனுவின் விவரம்

Date:

தவெக தலைவர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்துக் கோரி செங்கல்பட்டு குடும்பநல நீதிமன்றத்தில் இன்று மனு ஒன்றை தாக்கல் செய்திருக்கிறார். விஜய் வேறு ஒரு நடிகையுடன் தொடர்பில் இருந்ததால் விவகாரத்து கேட்கிறேன் என்றும் மனுவில் கூறியுள்ளார்.

சங்கீதா தாக்கல் செய்த மனுவில் என்ன சொல்லப்பட்டிருக்கிறது?

அந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது,

  • ‘கடந்த 2021 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் விஜய் ஒரு நடிகையுடன் திருமணத்தை மீறிய உறவில் இருப்பதை அறிந்தேன். அந்த உறவை விட்டுவிடுவதாக விஜய் உறுதி கொடுத்தார். ஆனால், மீண்டும் அதே உறவில் நீடித்தார்.

  • விஜய்யும் அந்த நடிகையும் வெளிநாடுகளுக்கு பல முறை ஒன்றாக பயணம் செய்தனர்.

  • அந்தப் புகைப்படங்களை நடிகை தனது சோசியல் மீடியாவில் பல முறை பதிவிட்டார்.

  • விஜய் அதற்கு எதிர்ப்போ ஆமோதிப்போ தெரிவிக்கவே இல்லை. என்னை மனரீதியாக புண்படுத்தி வீட்டிலேயே தனிமைப்படுத்தினார்.

  • இந்த விவகாரத்தை கவுன்சலிங் மூலம் தீர்த்துவிட முடியும் என நம்பினேன். ஆனால், தீர்வு கிடைக்கவில்லை.

  • குழந்தைகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு ஒரு முடிவை எடுப்பதை ஒத்திவைத்தேன்.

  • விஜய்யின் அந்த திருமணத்தை மீறிய உறவு தொடர்ந்தது எங்களின் திருமண பந்தத்தின் மீதான நம்பிக்கையை குலைத்தது.

  • செப்டம்பர் 2021 முதல் பிப்ரவரி 2022 வரை கவுன்சலிங் மூலமாக இந்த விவகாரத்தை பேசி தீர்வு காண நினைத்தோம். ஆனால், தீர்வு கிடைக்கவில்லை.

  • இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்டிருக்கு அனைத்து தரப்பினருடைய கண்ணியத்தையும் கருத்தில் கொண்டு இப்போது வரை நடிகையின் பெயரை வெளியில் கூறவில்லை. ஆனால், தேவை ஏற்படும்பட்சத்தில் நீதிமன்றத்தின் அனுமதியோடு அவரின் பெயரையும் மனுவில் சேர்க்கும் உரிமை உண்டு.

விஜய் – சங்கீதா
  • எனக்கு துரோகம் இழைக்கப்பட்டதாக உணர்ந்தேன்.

  • இப்போது வெறும் காகிதத்தில் மட்டுமே எங்களின் திருமண பந்தம் தொடர்கிறது.

  • மீண்டும் இணைய முடியாத அளவுக்கு எங்களின் பந்தம் உடைந்துவிட்டது.

  • பொதுவெளியில் இந்த விவகாரம் பூதாகரமாக மாறக்கூடாது என்பதற்காக ஆகஸ்ட் 2024 முதல் பிப்ரவரி 2025 வரை கவுன்சலிங் மூலம் சுமுகமான தீர்வை எட்ட முயன்றேன். ஆனால், விஜய் தீர்வை எட்ட முயற்சிக்காமல் அவரின் மனைவி என்ற முறையில் நான் அனுபவித்து வரும் பொருளாதார அம்சங்களின் மீது கட்டுப்பாடை விதிக்க ஆரம்பித்தார்.

  • கடைசியாக 9.11.2025 அன்று கூட பரஸ்பர ஒப்புதலோடு இந்த பந்தத்திலிருந்து விலகவும் அதற்கான உரிமை விவகாரங்கள் சார்ந்து பேசவும் முற்பட்டேன். பொதுவெளியில் அவருக்கு இருக்கும் பிம்பத்துக்கு பாதிப்பு ஏற்படக்கூடாது என நினைத்தேன். ஆனால், எந்த பேச்சுவார்த்தையிலும் தீர்வு எட்டப்படாமல் போகவே விஜய்தான் என்னை நீதிமன்றம் நோக்கி தள்ளியுள்ளார்.

  • மன உளைச்சலையும் அவமதிப்பையும் கொடுக்கும் இந்த திருமண பந்தத்தில் இனியும் தொடர முடியாது’ எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related