24
February, 2026

A News 365Times Venture

24
Tuesday
February, 2026

A News 365Times Venture

மொத்தம் 74.07 லட்சம் வாக்காளர்கள் நீக்கம் – தமிழ்நாட்டில் வெளியான இறுதி வாக்காளர் பட்டியல்!

Date:

கடந்தாண்டு பீகார் தேர்தலை முன்னிட்டு பீகாரில் ஏராளமான குழப்பங்களுடன் சிறப்பு வாக்காளர் திருத்தப் பணிகள் நடத்தி முடிக்கப்பட்டது.

அதில் சுமார் 65 லட்சம் வாக்காளர்கள் நீக்கம் செய்யப்பட்டனர். அதைத் தொடர்ந்து, சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கும் மேற்கு வங்கம், தமிழ்நாடு உள்பட 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் `வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்’ (SIR) பணிகள் மேற்கொள்ளப்பட்டது.

தேர்தல் ஆணையம்

அந்தவகையில் கடந்த நவம்பர் 4-ம் தேதி, தமிழ்நாட்டில் சிறப்பு வாக்காளர் திருத்தப் பணிகள் தொடங்கின. எல்லாப் பணிகளும் நிறைவடைந்த நிலையில் இன்று (பிப். 23) இறுதி வாக்காளர் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டிருக்கிறது.

தமிழகத்தில் கடந்த அக்டோபர் 27-ந்தேதி நிலவரப்படி 6.41 கோடி வாக்காளர்கள் இருந்தனர்.

SIR பணிகளுக்குப் பிறகு தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை – 5,67,07,380 ஆக மாறி இருக்கிறது.

இதில் ஆண் வாக்காளர்கள் – 2,77,38,925

பெண் வாக்காளர்கள் – 2,89,60,838

மூன்றாம் பாலினத்தவர்கள் – 7,617

SIR-ன் முதற்கட்ட வாக்காளர் பட்டியல் வெளியான, பிறகு இதுவரை 27.53 லட்சம் பேர் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளனர்.

வாக்காளர் பட்டியல்
வாக்காளர் பட்டியல்

தமிழ்நாட்டில் SIR மூலம் 74.07 லட்சம் வாக்காளர்கள் நீக்கம் செய்யப்பட்டிருக்கின்றனர்.

2025இல் 6.41 கோடி வாக்காளர்கள் இருந்த நிலையில், SIR பணிகளுக்குப் பிறகான இறுதி வாக்காளர் பட்டியலில் 5.67 கோடி வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மாவட்ட ரீதியாக வெளியான இறுதி வாக்காளர் பட்டியல் கீழே

மாவட்டரீதியாக இறுதி வாக்காளர் பட்டியல்
மாவட்டரீதியாக இறுதி வாக்காளர் பட்டியல்

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

கேரளா: பாஜக மாநிலத் தலைவரை எதிர்த்து களமிறங்கும் சசிதரூர்; விஐபி தொகுதியாகும் நேமம்; பின்னணி என்ன?

கேரள மாநிலத்தில் சட்டமன்றத் தேர்தல் விரைவில் நடக்க உள்ளது. தலைநகரான திருவனந்தபுரத்தில்...

எஸ்.டி.எஸ், பாக்யராஜ் முதல் பண்ருட்டியார் வரை; அடேங்கப்பா! அதிமுக-விலிருந்து எத்தனை எத்தனை கட்சிகள்?

ஓபிஎஸ் அணியிலிருந்த மூத்த அரசியல்வாதியான பண்ருட்டி ராமச்சந்திரன், 'எம்.ஜி.ஆர் அண்ணா திமுக'...

SIR : தமிழ்நாட்டில் அதிக, குறைந்த வாக்காளர்களை கொண்ட தொகுதிகள்… இறுதி வாக்காளர் பட்டியல்!

தமிழக அளவில் வாக்காளர் தீவிர திருத்தத்தப் பணிகள் முடிந்த பிறகான இறுதி...