22
February, 2026

A News 365Times Venture

22
Sunday
February, 2026

A News 365Times Venture

TVK : பெரம்பூர் தொகுதியில் போட்டியிடும் விஜய்!' – செயல்வீரர்கள் கூட்டத்தில் உறுதி செய்த நிர்வாகிகள்?

Date:

தவெக தலைவர் விஜய் பெரம்பூர் தொகுதியில் போட்டியிடுவார் என கட்சி வட்டாரத்தில் பேசப்பட்டு வரும் நிலையில், முகூர்த்த நாளான இன்று பெரம்பூர் தொகுதியில் செயல் வீரர்கள் கூட்டத்தை நடத்தி தேர்தல் வேலைகளை தொடங்கியிருக்கிறது தவெக. இந்தக் கூட்டத்தில் பேசிய சில நிர்வாகிகள் விஜய் பெரம்பூர் தொகுதியில் போட்டியிடுவதை சூசகமாக உறுதிப்படுத்தி பேசியிருந்தனர்.

செயல் வீரர்கள் கூட்டம்

பெரம்பூர் தொகுதியின் மாவட்டச் செயலாளரான சிவா பேசுகையில், ‘தலைவருக்கு மிகவும் பிடித்த தொகுதியாக பெரம்பூர் தொகுதியை மாற்றிவிட்டேன்.

ஓராண்டில் 44000 பேரை தொகுதிக்குள் கட்சியின் உறுப்பினர்களாக சேர்த்திருக்கிறேன்.

இன்னும் 35 நாட்கள்தான் இருக்கிறது. ஒரு நாளும் தூங்காமல் உழைத்து தளபதியை வெல்ல வைத்து முதல்வராக்க வேண்டும்’ என்றார்.

சமீபத்தில் தவெகவில் இணைந்த அதிமுகவின் முன்னாள் மா.செ வி.எஸ் பாபு பேசுகையில், ‘முதலமைச்சரை தேர்ந்தெடுக்கப் போகும் தொகுதி பெரம்பூர்தான்.

இந்தத் தொகுதியிலிருந்துதான் முதல்வர் வரப்போகிறார்.

திமுக, அதிமுகவில் வட்டச் செயலாளர் பதவி வாங்கவே 25 வருடம் குடும்பத்தை விட்டு விட்டு சாக வேண்டும். ஆனால், தவெகவில்தான் ஒரு ஆட்டோ ஓட்டுநர் கூட மாவட்டச் செயலாளர் ஆக முடியும்.

செயல் வீரர்கள் கூட்டம்
செயல் வீரர்கள் கூட்டம்

திமுக, அதிமுகவினர் என்ன செய்வார்கள் என எனக்கு தெரியும். பொதுச்செயலாளர் மட்டும் உத்தரவிட்டால் நான் அத்தனை பேரையும் ஓட விட்டு விடுவேன். திரு.வி.க நகர், துறைமுகம், பெரம்பூர் தொகுதியெல்லாம் தவெகவுக்குதான். தலைவரை மட்டும் ஒரு நான்கைந்து முறை தொகுதிக்கு பிரசாரத்துக்கு அழைத்து வந்து விடுங்கள்’ என்றார்.

செயல் வீரர்கள் கூட்டம்
செயல் வீரர்கள் கூட்டம்

‘பெரம்பூர் தொகுதியில் எதிர்த்து நிற்பவர்கள் அத்தனை பேரும் டெபாசிட் இழப்பார்கள்’ என்றார் செங்கோட்டையன்

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

பிப். 24 முதல் உலக நாடுகளுக்கு புது வரி அமல்; உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பிற்கு ட்ரம்பின் புது ரூட்!

'அமெரிக்க உச்ச நீதிமன்ற தீர்ப்போ, தீர்ப்பில்லையோ... வரி ரத்தோ, வரி ரத்து...

வேலூர்: விஜய்க்காகத் தயாரான பிரமாண்ட பந்தல்; 4,900 பேருக்கு மட்டுமே அனுமதி – பரபரக்கும் ஏற்பாடுகள்!

வேலூர் மாவட்டம், பள்ளிகொண்டா சுங்கச்சாவடி அடுத்துள்ள அகரம்சேரியில் நாளை நடைபெறும் த.வெ.க...

"குருவாயூரப்பனை சேவித்துக்கொண்டே நான் இறக்க வேண்டும்" – சுரேஷ் கோபி

கேரள மாநிலம் கொச்சியில் ஓர் ஆங்கில பத்திரிகையின் (தி நியூ இந்தியன்...

"நாங்கள் திமுகவிடம் 5 தொகுதிகளை கேட்டோம், ஆனால் எங்களுக்கு"- முஸ்லீம் லீக் காதர் மொகிதீன்

சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தொகுதி பங்கீட்டுக் குழுவுடனான பேச்சுவார்த்தைக்குப் பின்...