21
February, 2026

A News 365Times Venture

21
Saturday
February, 2026

A News 365Times Venture

ராஜ்ய சபாவிலும் ஓங்கும் பாஜக-வின் கை? – 37-ல் யாருக்கு எத்தனை? | Data Explains

Date:

10 மாநிலங்களைச் சேர்ந்த 37 ராஜ்ய சபா இடங்களின் பதவிக்காலம் முடிவடைய உள்ளது.

இந்த இடங்களை நிரப்ப வரும் மார்ச் 16-ம் தேதி தேர்தலை அறிவித்திருக்கிறது இந்திய தேர்தல் ஆணையம். இந்தத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் பிப்ரவரி 26-ம் தேதி தொடங்குகிறது.

மேலே சொன்ன 10 மாநிலங்களில் தமிழ்நாடும் அடக்கம்.

நாடாளுமன்றம்

ராஜ்ய சபாவில் தற்போதைய மொத்த எண்ணிக்கை 245. அதில் பாஜக உறுப்பினர்கள் மட்டும் 103. தேசிய ஜனநாயகக் கூட்டணியினரின் மொத்த எண்ணிக்கை 133.

ராஜ்ய சபாவைப் பொறுத்தவரை பெரும்பான்மைக்கு 122 இடங்கள் தேவைப்படும். ஆனால், அதைத் தாண்டியும் 11 இடங்களை வைத்திருக்கிறது பாஜக.

தற்போது ராஜ்ய சபா தேர்தல் நடக்க உள்ள மாநிலங்கள் – மகாராஷ்டிரா (7), தமிழ்நாடு (6), பீகார் (5), மேற்கு வங்கம் (5), ஒடிசா (4), அசாம் (3), சத்திஸ்கர் (2), அரியானா (2), தெலங்கானா (2), இமாச்சல பிரதேசம் (1).

இதில் பாஜக கூட்டணி ஆளும் மாநிலங்கள் – அஸ்ஸாம், பீகார், சத்தீஸ்கர், ஹரியானா, மகாராஷ்டிரா, ஒடிசா.

ராஜ்ய சபா தேர்தல் நடக்கும் 10 மாநிலங்களில், 6 மாநிலங்கள் பாஜக கூட்டணி ஆளும் மாநிலங்கள். இதிலேயே பாஜக-விற்கு ஒரு பெரும்பான்மை கிடைத்துவிட்டது.

தேசிய ஜனநாயகக் கூட்டணி
தேசிய ஜனநாயகக் கூட்டணி

இன்னமும் கணக்குப் போட்டுப் பார்த்தால்…

மகாராஷ்டிராவில் 6 இடங்களும், தமிழ்நாட்டில் 2 இடங்களும், பீகாரில் 4 இடங்களும், மேற்கு வங்கத்தில் ஓரிடமும், ஒடிசாவில் 3 இடங்களும், அஸ்ஸாமில் 3 இடங்களும், சத்தீஸ்கரில் ஓரிடமும், ஹரியானாவில் ஓரிடமும் பாஜக கூட்டணிக்குக் கிடைக்கும்.

ஆக, இந்தத் தேர்தலில் பாஜக கூட்டணிக்கு கிட்டத்தட்ட 21 இடங்கள் கிடைக்க உள்ளன.

இதில் மகாராஷ்டிராவில் 4 இடங்களும், மேற்கு வங்கத்தில் ஓரிடமும், ஒடிசாவில் 3 இடங்களும் கட்டாயம் பாஜக-விற்குத் தான்.

இந்த 10 மாநிலங்களில் பாஜக மற்றும் பாஜக கூட்டணிக்கு மிஸ் ஆகும் இரண்டு மாநிலங்கள் தெலங்கானா, இமாச்சல பிரதேசம்.

இப்போது இந்தியா கூட்டணிக்கு வருவோம்…

மகாராஷ்டிராவில் இருக்கும் ஒரே ஒரு இடம் மட்டுமே இந்தியா கூட்டணிக்கு. அந்த இடத்திற்கும் சரத் பவார், சிவசேனாவை சேர்ந்த பிரியங்கா சதுர்வேதி… என போட்டிகளின் பட்டியல் நீள்கிறது. இதை எல்லாம் சமாளித்துத் தான் இந்தியா கூட்டணி இடம் பிரிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

தமிழ்நாட்டில் 4 இடங்கள் இந்தியா கூட்டணிக்கு உள்ளது. அதில் 2 இடங்கள் கட்டாயம் திமுக-விற்குத் தான். மீதி 2 இடங்கள் தான் கூட்டணி கட்சிகளுக்கு.

‘இந்தியா’ கூட்டணி
‘இந்தியா’ கூட்டணி

மேற்கு வங்கத்தில் 4 இடங்களைப் பெறுகிறது திரிணாமுல் காங்கிரஸ்.

தெலங்கானாவில் ஓரிடத்தை காங்கிரஸ் பெறுகிறது.

இதுபோக சத்தீஸ்கர், அரியானா, இமாச்சல பிரதேசத்தில் தலா ஓரிடம் இந்தியா கூட்டணிக்கு கிடைக்கும்.

ஒடிசா, அஸ்ஸாமில் இந்தியா கூட்டணிக்கு இடம் இல்லை.

ஆக, மொத்தம் 14 இடங்களை இந்தத் தேர்தலில் இந்தியா கூட்டணி பெறுகிறது.

மார்ச் 16-ம் தேதி வருகிற தேர்தல் கணக்கைப் போட்டுப் பார்த்தால், அதிலும் பாஜக கூட்டணியின் கை தான் ஓங்குகிறது.

ஏற்கெனவே, ராஜ்ய சபாவில் பெரும்பான்மை எண்ணிக்கையைத் தாண்டியிருக்கும் பாஜக கூட்டணிக்கு, இது மிக மிக ப்ளஸ்.

இந்த 37 இடங்களின் தேர்தலுடன் இந்த ஆண்டு மொத்தம் 71 ராஜ்ய சபா இடங்களுக்கான தேர்தல் நடக்க உள்ளது. அதில் 40-க்கும் மேற்பட்ட இடங்களை தேசிய ஜனநாயக கூட்டணி பெற்றுவிட வேண்டும் என்று இப்போதே பிளானில் இருக்கிறதாம் பாஜக.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

‘உங்கள் அண்ணன் உணர்வெழுச்சியுடன் காத்திருக்கிறேன்!’ – நாதக மாநாடு குறித்து சீமான் உருக்கம்!

பிப்ரவரி 21-ம் தேதியான இன்று திருச்சியில் மாபெரும் மக்கள் மாநாட்டை நடந்துகிறது...

இரு தொகுதியில் விஜய்; தி.நகரில் ஆனந்த், வில்லிவாக்கத்தில் ஆதவ்? – தயாரானதா தவெக-வின் முதல் லிஸ்ட்?

தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் சென்னையில் உள்ள பெரம்பூர்...

KN Nehru: "திமுக அரசின் உச்சியைப் பிடித்து உயர் நீதிமன்றம் உலுக்கியுள்ளது" – தவெக தலைவர் விஜய்

அமைச்சர் கே.என்.நேரு மீதான அமலாக்கத்துறையின் ஊழல் புகாரின் அடிப்படையில் அவர் மீது...