19
February, 2026

A News 365Times Venture

19
Thursday
February, 2026

A News 365Times Venture

“பிரேமலதா விஜயகாந்த் எடுத்திருக்கும் இந்த சிறப்பான முடிவை வரவேற்கிறேன்” – செல்வப்பெருந்தகை

Date:

தமிழகத்தில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது.

கடந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம்பெற்ற தேமுதிக, சட்டசபை தேர்தலுக்கான கூட்டணி முடிவை அறிவிக்காமல் இருந்தது.

தேமுதிக, திமுக கூட்டணியில் இணையுமா அல்லது அதிமுக கூட்டணியில் இணையுமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்திருந்த நிலையில், இன்று ( பிப்.19) தேமுதிக தலைவர் பிரேமலதா விஜயகாந்த், அண்ணா அறிவாலயத்திற்கு வந்து முதல்வர் ஸ்டாலினை நேரில் சந்தித்து திமுக கூட்டணியில் இணைந்திருக்கிறார்.

திமுக கூட்டணியில் இணைந்த தேமுதிக

தேமுதிக முதன்முறையாக திமுக கூட்டணியில் இணைந்திருக்கிறது. இந்நிலையில் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தேமுதி-கவை வரவேற்று தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார். அப்பதிவில், “வருகின்ற 2026 தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, தி.மு.க கூட்டணியில் தேசிய முற்போக்கு திராவிட கழகம் இணைந்து வலுவான கூட்டணியை அமைத்திருப்பது தமிழக அரசியலில் ஒரு முக்கியமான முன்னேற்றமாகும்.

திருமதி பிரேமலதா விஜயகாந்த் மற்றும் தேமுதிக நிர்வாகிகள் இணைந்து சிறப்பான முடிவெடுத்திருப்பதை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பாக வரவேற்கிறேன். பாராட்டுகிறேன்.

சமூகநீதி, மதச்சார்பற்ற தன்மை, ஜனநாயகப் பண்புகள் மற்றும் மக்கள் நலக் கொள்கைகளை முன்னிறுத்தும் நோக்கில் உருவான இந்த கூட்டணி, மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் வல்லமை பெற்றதாக இருக்கும்.

செல்வப்பெருந்தகை
செல்வப்பெருந்தகை

மக்களின் நலன், முன்னேற்றம் மற்றும் மாநிலத்தின் வளமான எதிர்காலம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு அமைக்கப்பட்ட இந்த கூட்டணி உறுதியாக வெற்றி பெறும்” என்று பதிவிட்டிருக்கிறார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

ஒரே இரவில் 'ஓகே' ஆன கூட்டணி; கச்சிதமாக முடித்த மூவர் அணி! – திமுக முகாமில் தேமுதிக இணைந்தது எப்படி?

தேசிய முற்போக்கு திராவிடக் கழகத்தை ஆரம்பித்த விஜயகாந்த், அ.தி.மு.கவுடன் ஒருமுறை கூட்டணி...

திமுக-வின் ஆஃபர்; எடப்பாடியின் ஓரவஞ்சனை – பிரேமலதாவின் அறிவாலய விசிட் பின்னணி!

அறிவாலயம் பக்கமாக வண்டியை திருப்பியிருக்கிறார் தேமுதிக-வின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த். கூட்டணிக்குள்...

கோவிட் காலத்தில் பணிபுரிந்த செவிலியர்களுக்கு நிரந்தரப் பணி – நாளை கலந்தாய்வு!

கடந்த 2019 மற்றும் 2020 கோவிட் தொற்றுக் காலத்தில் தற்காலிகமாக நியமனம்...