18
February, 2026

A News 365Times Venture

18
Wednesday
February, 2026

A News 365Times Venture

டிமாண்டி சாலை இனி எம்.எஸ்.விஸ்வநாதன் சாலை! – இசை மேதைகளின் பெயரில் சென்னை சாலைகள்!

Date:

தமிழகத்தின் திரை மற்றும் இசைத் துறைக்கு ஈடு இணையற்ற பங்காற்றிய பழம்பெரும் கலைஞர்களான எம்.எஸ்.விஸ்வநாதன், சீர்காழி கோவிந்தராஜன், திருச்சி லோகநாதன் ஆகியோரைக் கௌரவிக்கும் வகையில், அவர்கள் வாழ்ந்த மற்றும் தொடர்புடைய சாலைகளுக்கு அவர்களின் பெயரைச் சூட்டி பெயர்ப்பலகைகளை இன்று திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின். இது இசை ரசிகர்கள் மற்றும் திரைத்துறையினர் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Road name

1. எம்.எஸ்.விஸ்வநாதன் சாலை (முன்பு டிமாண்டி சாலை)

‘மெல்லிசை மன்னர்’ என்று அழைக்கப்படும் எம்.எஸ்.விஸ்வநாதன் (MSV) அவர்கள், தமிழ் திரையிசையின் பொற்காலத்தை உருவாக்கியவர். அவர் வசித்து வந்த டிமாண்டி சாலைக்கு (Demonte Road), இனி ‘எம்.எஸ்.விஸ்வநாதன் சாலை’ என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.

2. சீர்காழி கோவிந்தராஜன் சாலை (முன்பு மந்தைவெளிப்பாக்கம் கிழக்கு வட்டச் சாலை)

வெண்கலக் குரலுக்குச் சொந்தக்காரரான இசைமணி சீர்காழி கோவிந்தராஜன் அவர்கள் பக்தி இசை மற்றும் திரை இசையில் தனி முத்திரை பதித்தவர். மந்தைவெளி பகுதியில் அமைந்துள்ள மந்தைவெளிப்பாக்கம் கிழக்கு வட்டச் சாலைக்கு, ‘சீர்காழி கோவிந்தராஜன் சாலை’ எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

3. திருச்சி லோகநாதன் சாலை (முன்பு மந்தைவெளிப்பாக்கம் நார்ட்டன் 3வது தெரு)

‘வாராய்… நீ வாராய்…’, ‘ஆசையே அலைபோலே’ போன்ற தத்துவப் பாடல்களின் மூலம் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம்பிடித்தவர். இவர் சென்னையில் வசித்து வந்த மந்தைவெளிப்பாக்கம் நார்ட்டன் 3வது தெருவிற்கு, ‘திருச்சி லோகநாதன் சாலை’ என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.

சென்னையில் திரை, இசைக் கலைஞர்களின் பெயரில் அமைந்துள்ள பிற முக்கிய சாலைகள்.!

கலைவாணர் என்.எஸ்.கே. – கோடம்பாக்கத்தின் மிக முக்கிய சாலையான ஆற்காடு சாலைக்கு கலைவாணரின் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

சிவாஜி கணேசன் – தி.நகரில் உள்ள சவுத் போக் சாலைக்கு செவாலியர் சிவாஜி கணேசன் சாலை எனப் பெயர் மாற்றப்பட்டது.

கண்ணதாசன் – தி.நகரில் உள்ள ஹென்ஸ்மேன் சாலைக்கு கவிஞர் கண்ணதாசன் சாலை என்று பெயரிடப்பட்டுள்ளது.

Road name
Road name

டி.எம். சௌந்தரராஜன் – மந்தைவெளி பகுதியில் உள்ள மேற்கு வட்டச் சாலைக்கு டி.எம்.சௌந்தரராஜன் சாலை என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.

எஸ்.பி.பாலசுப்பிரமணியன் – சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள, காம்தார் நகர் முதன்மை சாலைக்கு எஸ் பி பி பெயர் சூட்டப்பட்டுள்ளது.

விவேக் – சாலிகிராமத்தில் உள்ள பத்மாவதி தெருவுக்கு ‘சின்ன கலைவாணார் விவேக் சாலை’ என்று பெயர்.

ஜெய்சங்கர் – நுங்கம்பாக்கத்தில் உள்ள கல்லூரி பாதையின் (College lane) பெயரை ஜெய்சங்கர் சாலை என்று பெயர் மாற்றப்பட்டுள்ளது.

Road name
Road name

இந்தப் பெயர் மாற்றங்கள் வெறும் நடவடிக்கைகள் மட்டுமல்ல; அடுத்த தலைமுறையினருக்கு நமது மண்ணின் மைந்தர்களையும், அவர்களின் கலைப் பங்களிப்பையும் நினைவுபடுத்தும் ஆவணங்களாக இந்தச் சாலைப் பெயர்கள் அமைகின்றன. குறிப்பாக, டிமாண்டி காலனி போன்ற பெயர்கள் ஒருவித அச்ச உணர்வோடு பார்க்கப்பட்ட நிலையில், அதனை எம்.எஸ்.விஸ்வநாதன் போன்ற ஒரு மேதையின் பெயரில் அழைக்கப்படுவது அப்பகுதிக்கு ஒரு நேர்மறையான அடையாளத்தைத் தரும் என்பதில் சந்தேகம் இல்லை.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

`பட்டா இருந்தும் மின்சாரம் இல்லை' – 31 ஆண்டுகளாக இருளில் வாழும் 138 அருந்ததியர் குடும்பங்கள்!

திருவண்ணாமலை மாவட்டம், துரிஞ்சாபுரம் ஒன்றியம், வடஆண்டிப்பட்டு கிராமம், கௌதம புத்தர் நகரில்...

நடிகை பிரதியுஷா மரண வழக்கு: 24 ஆண்டுகள் கழித்து வெளியான தீர்ப்பு; காதலனுக்கு செக்!

தமிழ் தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் நடித்து பிரபலம் அடைந்தவர் நடிகை பிரதியுஷா....

"அதிகாரத்தில் பங்கு வேண்டும் என்று கேட்பதில் தவறு கிடையாது!" – சொல்கிறார் தொல்.திருமாவளவன்

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினருமான தொல். திருமாவளவன்...

"அந்த போன்கால் வரட்டும்!" – காத்திருக்கும் அறிவாலயம்

நேற்று பிப்.17-ம் தேதி, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாவட்டத் தலைவர்கள் கூட்டம்...