15
February, 2026

A News 365Times Venture

15
Sunday
February, 2026

A News 365Times Venture

Vijay: "அவரைப் பார்த்துதான் அண்ணாவே திமுகவை ஆரம்பித்தார்" – விஜய் பற்றிய கேள்விக்கு உதயநிதி பதில்

Date:

கடந்த வாரம் விருதுநகரில் தென்மண்டல இளைஞரணி நிர்வாகிகள் சந்திப்புக் கூட்டம் நடைபெற்றது. இதை நடத்திய நிர்வாகிகளுக்கு நன்றி தெரிவிப்பதற்காக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மதுரைக்கு வந்திருந்தார்.

அப்போது செய்தியாளர்களைச் சந்தித்து பேசியவர், “மகளிர் உதவித்தொகை கொடுக்கவே முடியாது எனச் சொன்னார்கள். அதையும் கொடுத்திருக்கிறோம். தற்போது மகளிர் உதவித் தொகையுடன் சிறப்பு தொகுப்பாக ரூ. 5000 கொடுத்திருப்பது பெண்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது” என்றார்.

சேலத்தில் நடந்த தவெக பொதுக்கூட்டத்தில் ஒருவர் உயிரிழந்தது குறித்த கேள்விக்கு, “யார் கூட்டத்தை நடத்தினார்களோ அவர்கள்தாம் பொறுப்பேற்க வேண்டும். அவர்கள்தாம் பதில் சொல்ல வேண்டும்” என்றார்.

விஜய், உதயநிதி

தன்னுடைய அரசியலின் தாக்கத்தால்தான் உரிமைத் தொகையை அரசு தருவதாக விஜய் கூறியது குறித்த கேள்விக்கு, “அவரைப் பார்த்துதான் அண்ணாவே திமுக கட்சியை ஆரம்பித்தார் தெரியுமா?” எனத் துணை முதலமைச்சர் உதயநிதி கிண்டலாகப் பேசினார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

உக்ரைன் – ரஷ்யா: "20 வருடங்கள் அமெரிக்கா பாதுகாப்பு தர வேண்டும்" – உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி

ரஷ்யா - உக்ரைன் இடையே நடந்துவரும் போர் முக்கியக் கட்டத்தை எட்டியிருக்கிறது....

"பெண்களை வெறும் உடலாக மட்டும் பார்ப்பதே RSS, BJP-இன் சித்தாந்தம்" – நயினார் மீது ஜோதிமணி காட்டம்

"பெண்களை வெறும் உடலாக மட்டுமே பார்க்கிற ஆர்.எஸ்.எஸ், பா.ஜ.க சித்தாந்தத்தின் வெளிப்பாடே...

கோவையில் செந்தில் பாலாஜியை முந்திய வேலுமணி; ஹாட் பாக்ஸுடன் இறங்கிய அதிமுக; வீடு தேடி வரும் பரிசுகள்

2021 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக ஆட்சியைப் பிடிக்க முடியாவிடினும் கோவை மாவட்டத்தில்...

PM RAHAT: 'இதற்கு' ரூ.1.5 லட்சம் வரை கட்டணமில்லா சிகிச்சை; மத்திய அரசின் புதிய திட்டம்|How to

நேற்று புது டெல்லியில் புதிய பிரதமர் அலுவலகமான 'சேவா தீர்த்' இந்திய...