14
February, 2026

A News 365Times Venture

14
Saturday
February, 2026

A News 365Times Venture

"அடுத்தவர் குதிரையில் சவாரி செய்யும் நீங்க எப்படி ஒரிஜினல் ஆவீங்க?"- விஜய்க்கு அதிமுக பதிலடி

Date:

சேலம், சீலநாயக்கன்பட்டியில் நேற்று (பிப்.13) தவெக நிர்வாகிகளின் சந்திப்பு நடைபெற்றது.

“கொள்கையை பெயருக்கு மட்டும் வைத்துக் கொண்டு நேரடியாக சரணடைவது, மறைமுகமாக சரணடைவது போன்ற அனுபவங்கள் எல்லாம் எனக்கு இல்லை.

கட்சி தொடங்கிய அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதாவை மறந்துவிட்டார்கள்.

முடிந்தால் என்னை போல் புதிய கட்சி தொடங்கி 1 சதவிகித வாக்கு வாங்க முடியுமா?” என்று சவால் விடுத்திருந்தார்.

தவெக விஜய்

இந்நிலையில் விஜய்க்கு பதிலடி கொடுக்கும் வகையில் அதிமுக சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டிருக்கிறது. அதில், ” நீங்க தனியாகவா வந்தீங்க பனையூர் பண்ணையார் அங்கிள்? அப்பா மூலமா சினிமா உள்ள வந்தீங்க…

வந்த சினிமா வழியே சூப்பர்ஸ்டார், புரட்சிக் கலைஞர், ஆகியோரைப் பார்த்து காப்பி பேஸ்ட்….

அரசியலில், அடுத்த கட்சி வரலாற்றுத் தலைவர்களின் மரபைத் திருடி, காப்பி பேஸ்ட்… இப்படி அடுத்தவர் குதிரையில் சவாரி செய்யும் நீங்க எப்படி ஒரிஜினல் ஆவீங்க?

சொந்தமாக ஒரு வரியையே பேசத் தெரியாதவர், அடுத்தவர் வரலாற்றைப் பற்றி கேள்வி கேட்கலாமா?

உங்களுக்கு அரசியல் புரிதலோ, வரலாறோ இல்லை என்பதற்காக எங்கள் இயக்கத்தின் தலைவர்களை இரவல் பெற்று ஸ்டிக்கர் ஒட்டிக் கொண்டுத் திரிபவர் தானே நீங்கள்?

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

இந்த முதல் காட்சி டிக்கெட்டெல்லாம் ரூ.2000-க்கு விற்பதெல்லாம் கொள்ளை இல்லைங்களா?

அப்படி பார்த்தா உங்களுக்கு ஒரு 30 ஆண்டு கொள்ளை அனுபவம் இருக்கு தானே?” என்று விஜய்யின் விமர்சனத்திற்கு பதிலடி கொடுக்கப்பட்டிருக்கிறது.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

`தங்களுக்கு என்ன பலன் என பார்க்காமல் கட்சி நலனை பாருங்கள்!'- ஓ.பி.எஸ்ஸை விமர்சித்த டிடிவி தினகரன்?

மதுரையில் அமமுக கட்சியின் செய்தி தொடர்பாளர் வெற்றி பாண்டியனின் புதுமனை...

"நாங்கள் கேட்பது நீங்கள் தோல்வி அடைந்த இடங்களை தான்"- ராஜகண்ணப்பனுக்கு மாணிக்கம் தாகூர் பதிலடி

தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில்...

July Charter 2025: இனி பிரதமருக்கு அனைத்திற்கும் 'செக்' – புதிதாக உருமாறும் வங்கதேசம்!

நேற்று முன்தினம் (பிப்ரவரி 12) வங்கதேசம் முழுவதும் நாடாளுமன்றத் தேர்தல் நடந்து...

சென்னை தொகுதிகளுக்கு மல்லுக்கட்டும் கூட்டணிக் கட்சிகள்… கறார் காட்டும் திமுக!

தி.மு.க கூட்டணியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை வரும் பிப்ரவரி 22-ம் தேதி...