இன்று புது டெல்லியில் புதிய பிரதமர் அலுவலகத்தைத் திறந்து வைத்துள்ளார் இந்திய பிரதமர் மோடி.
இந்த அலுவலகத்திற்கு ‘சேவா தீர்த்’ என்ற பெயரிடப்பட்டுள்ளது. சேவா தீர்த்தின் பொன்மொழியாக, ‘குடிமக்கள் இறைவனுக்கு சமம்’ என்று பொறிக்கப்பட்டுள்ளது.
சேவா தீர்த் பகுதியில் பிரதமர் அலுவலகம், அமைச்சரவை செயலகங்கள், தேசிய பாதுகாப்புக் கவுன்சில் செயலகத்தின் அலுவலகங்கள் ஆகியவை ஒன்றாக அமைந்திருக்கும்.
இதுவே இந்தப் புதிய மாற்றத்தின் சிறப்பம்சம்.
பல ஆண்டுகளாக அரசு அலுவலகங்கள் அனைத்தும் வெவ்வேறு இடங்களில் செயல்பட்டு வந்தன. இதனால், பல்வேறு நடைமுறைகள் இருந்தன. இதை சரிசெய்யவும்… அரசு அலுவலகங்களின் செயல்பாடுகளை எளிதாக்கவும் இந்த மாற்றம் என்று கூறப்படுகிறது.
புதிதாக திறந்துள்ள சேவா தீர்த்தில் நான்கு முக்கிய கையெழுத்துகளைப் போட்டுள்ளார் மோடி…
1. PM RAHAT திட்டம் – இந்தத் திட்டத்தின் கீழ், சாலை விபத்தில் காயம்பட்டவர்களுக்கு ரூ.1.5 லட்சம் வரையில் சிகிச்சை இலவசம்.
2. லட்சாதிபதி தீதி டார்கெட் – 2029-ம் ஆண்டிற்குள் 6 கோடி பேர் இந்தத் திட்டத்தின் கீழ் பயனடைந்திருக்க வேண்டும்.
3. விவசாயக் கட்டமைப்பு நிதி: இந்த நிதி ரூ.1 லட்சம் கோடியில் இருந்து ரூ.2 லட்சம் கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது.
4. ஸ்டார்ட் அப் இந்தியா நிதிகளின் நிதி: புதிய தொழில்நுட்பங்களுக்கு ஆதரவளிக்கும் வகையில் புதிதாக ரூ.10,000 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.




