13
February, 2026

A News 365Times Venture

13
Friday
February, 2026

A News 365Times Venture

கலைஞர் உரிமைத் தொகை: “வங்கி கணக்கில் ரூ.5000" – முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

Date:

தமிழ்நாட்டில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகைத் திட்டம் முதல்வர் ஸ்டாலினால் தொடங்கப்பட்டது. அதன் அடிப்படையில், ஒவ்வொரு மாதமும் பெண்களுக்கு மாதம் ரூ.1000 வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டு வந்தது. இந்த நிலையில், முதல்வர் ஸ்டாலின் தன் எக்ஸ் பக்கதில் அறிவிப்பு ஒன்றை வழங்கியிருக்கிறார். அதில், “தமிழ்நாட்டு மகளிருக்கு இந்த ஸ்டாலின் தந்த உறுதிமொழிதான் உரிமைத்தொகை. யார் தடை ஏற்படுத்தினாலும் அதிலிருந்து பின்வாங்க மாட்டேன். தேர்தலைக் காரணம் காட்டி, மூன்று மாதங்களுக்கு உரிமைத்தொகையை முடக்கப் பார்க்கிறார்கள். முந்திக்கொண்டது நமது திராவிட மாடல் அரசு!

பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் மாதங்களுக்கான முன்பணமாக ரூ.3 ஆயிரம் + கோடைக்காலச் சிறப்புத் தொகுப்பாக ரூ.2 ஆயிரம்! 1.31 கோடி கலைஞர் மகளிர் உரிமைத் திட்டப் பயனாளிகளுக்கும் இன்று காலை 5 ஆயிரம் ரூபாய் வரவு வைக்கப்பட்டிருக்கிறது. வெல்லும் தமிழ்ப் பெண்கள் ஆதரவோடு அடுத்தும் நாங்கள்தான் வெல்வோம்! திராவிட மாடல் 2.0-இல் ஆயிரம் ரூபாய் உரிமைத்தொகையை 2 ஆயிரமாக உயர்த்தி வழங்குவோம்! இது, என் சகோதரிகளுக்கு இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் கொடுக்கும் வாக்குறுதி!” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.


Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

TVK: “ விக்கிரவாண்டி மாநாட்டில் ஆட்சியில் பங்கு என குண்டு வீசி இருந்தேன்; அது இப்போ..!" – விஜய்

`விக்கிரவாண்டி மாநாட்டில் ஒரு குண்டு வீசி இருந்தேன்' ``ஆட்சியில் பங்கு என விக்கிரவாண்டி...

மகளிருக்கு ரூ.5000: "பயத்தில் வந்த அறிவிப்பு; பெண்கள் நம்பி விடுவார்களா என்ன?" – எடப்பாடி பழனிசாமி

முதல்வர் ஸ்டாலின் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தைத் தொடங்கிவைத்து, அதன் மூலம்...

`சுவர் அரசியல் ஏன் தவிர்க்க முடியாதது?' – தேர்தல் கால சுவர்களும் போஸ்டர்களும் | நினைவுச் சுவடுகள் 5

இன்று தொடுதிரையில் கணநேரத்தில் நாட்டு நடப்புகளை அறிகிறோம். தலைவர்கள் சமுக வலைதளம்...

மகளிருக்கு ரூ.5000: `பாராளுமன்ற தேர்தல் போதும்கூட முடக்கப்படவில்லை' – கொந்தளிக்கும் தமிழிசை

முதல்வர் ஸ்டாலின் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தைத் தொடங்கிவைத்து, அதன் மூலம்...