13
February, 2026

A News 365Times Venture

13
Friday
February, 2026

A News 365Times Venture

2022-ல் இந்தியா‌ உடனான தாக்குதலுக்கு பின், அணு ஆயுத சோதனையை நடத்தியதா சீனா?

Date:

ஜெனிவாவில் தற்போது ஐக்கிய நாடுகள் சபையின் ஆயுதக் குறைப்பு மாநாடு நடந்து வருகிறது.

அதில் நேற்று அமெரிக்காவின் வெளியுறவுச் செயலாளர் தாமஸ் ஜி. டினானோ பேசியது உலகம் முழுக்க அதிர்வலைகளைக் கிளப்பியுள்ளது.

அப்படி என்ன பேசினார்?

2022-ம்‌ ஆண்டு இந்தியா, சீனாவிற்கு இடையே தாக்குதல் நடந்தது. அந்தத் தாக்குதலில் 20 இந்திய வீரர்களும், 30-க்கும் மேற்பட்ட சீன வீரர்களும் உயிரிழந்தனர்.

இந்தச் சம்பவம் நடந்த சில நாட்களிலேயே (ஜூன் 22), சீனா அணு ஆயுத சோதனையை நடத்தியுள்ளது என்கிற அமெரிக்க உளவுத்துறை அறிக்கையைத் பற்றி தெரிவித்துள்ளார் டினானோ.

இந்தச் சோதனை இந்தியாவிற்கு அருகே உள்ள லாப் நூரில் நடந்துள்ளது என்றும் கூறியுள்ளார்.

அணு ஆயுத சோதனை

இந்தச் சோதனையை உலகளாவிய கண்காணிப்பு நிறுவனங்கள் கண்டுபிடிக்காமல் இருக்க, சீனா ‘Decoupling’ முறையைப் பயன்படுத்தியதாக அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது.

அதாவது, இந்தச்‌‌ சோதனையால் நிலத்தில் ஏற்படும் அதிர்வுகளை அடக்க பெரிய நிலத்தடி குழிகளுக்குள் வெடிக்கும் வெடிபொருட்களைப் பயன்படுத்தியதாக கூறுகிறது.

இந்தச் சோதனையில் சீனா சர்வதேச அணு ஆயுதக் கொள்கைகளை மீறியது என்றும் அமெரிக்கா கூறியுள்ளது.

சீனாவின் மறுப்பு

“அணு ஆயுத விஷயத்தில் அமெரிக்கா தொடர்ந்து சீனா மீது குற்றம் சாட்டி வருகிறது.

இந்தப் பொய்க் குற்றச்சாட்டுகளை சீனா கடுமையாக எதிர்க்கிறது.

அணு ஆயுத பந்தயத்தில் அமெரிக்கா தான்‌ முக்கிய குற்றவாளி” என்று அணு ஆயுதக் குறைப்பின் சீனாவின்‌ தூதரான ஷென் ஜியான் கருத்து தெரிவித்துள்ளார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

5,000 ரூபாய் அறிவிப்பு: `பென்' கொடுத்த அழுத்தம்; சீக்ரெட் வியூகம் அமைத்த அதிகாரி – செயலாக்கிய டீம்!

'இந்த பிப்ரவரி மாதம் மட்டுமல்லாமல் அடுத்த 2 மாதம்… அதாவது மார்ச்,...

Seva Teerth: 'குடிமக்கள் இறைவனுக்கு சமம்' – புதிய பிரதமர் அலுவலகத்தில் மோடி போட்ட 4 கையெழுத்துகள்

இன்று புது டெல்லியில் புதிய பிரதமர் அலுவலகத்தைத் திறந்து வைத்துள்ளார் இந்திய...

'வரி வேண்டாம்' சொந்தக் கட்சியினரே எதிராக வாக்கு; 'பார்த்துக்கொள்கிறேன்' மிரட்டும் ட்ரம்ப் |Explained

'தன் கையே கண்ணைக் குத்திய கதை போலத் தான் தற்போது அமெரிக்க...