30
September, 2026

A News 365Times Venture

30
Wednesday
September, 2026

A News 365Times Venture

`தேசியவாத காங்கிரஸ் அணிகள் இணைவது பற்றி பேச பட்னாவிஸுக்கு என்ன உரிமை இருக்கிறது?'- சரத் பவார் கேள்வி

Date:

மகாராஷ்டிராவில் கடந்த மாதம் 28-ம் தேதி மாநில துணை முதல்வர் அஜித் பவார் திடீரென விமான விபத்தில் காலமானார். அவரது மரணத்தைத் தொடர்ந்து அஜித் பவார் மனைவி சுனேத்ரா பவார் அவசர அவசரமாக துணை முதல்வர் பதவியை ஏற்றுள்ளார். இது குறித்து சரத் பவாரிடம்கூட சுனேத்ரா பவார் கருத்து கேட்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனை சரத் பவாரே குறிப்பிட்டு இருந்தார். தற்போது தேசியவாத காங்கிரஸின் இரண்டு அணிகளும் இணைவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. ஆனால் தேசியவாத காங்கிரஸ் இணைவதாக இருந்தால் அது குறித்து பா.ஜ.கவிடம் பேசவேண்டும் என்று முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் குறிப்பிட்டு இருந்தார்.

இந்நிலையில் சுனேத்ரா பவார் துணை முதல்வராக பதவியேற்றது மற்றும் கட்சியின் இரு அணிகள் இணைப்பு குறித்து முன்னாள் மத்திய அமைச்சர் சரத் பவார் அளித்த பேட்டியில், ”சுனேத்ரா பவார் துணை முதல்வரானதில் எனக்கு மகிழ்ச்சிதான்.

பட்னாவிஸ்

ஆனால் அஜித் பவாரின் உடல் தகனம் செய்யப்பட்ட வித்யா பிரதிஷ்தான் கல்வி வளாகத்தில் அவருக்கு நினைவகம் கட்டுவது குறித்து எனக்கு தெரியாது. தேசியவாத காங்கிரஸ் கட்சியின் இரு அணிகளும் இணைவது குறித்து இரு தரப்பிலும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வந்தது. இதில் தேவேந்திர பட்னாவிஸுக்கோ அல்லது பா.ஜ.க-விற்கோ எந்த தொடர்பும் கிடையாது.

தேவேந்திர பட்னாவிஸ் பேச்சுவார்த்தையில் ஈடுபடவில்லை. அது பற்றி பேச அவருக்கு என்ன அதிகாரம் இருக்கிறது. இப்போது எந்த ஓர் அரசியல் முடிவு குறித்தும் ஆலோசிக்கப்படவில்லை. தேசியவாத காங்கிரஸ் எந்த முடிவையும் சொந்தமாக எடுக்கும்” என்று தெரிவித்தார். இரு தேசியவாத காங்கிரஸ் கட்சிகளும் ஏற்கெனவே மகாராஷ்டிராவில் உள்ளாட்சித் தேர்தலில் இணைந்து போட்டியிட்டு வருகின்றன. அதோடு வரும் நாளை நடக்கும் ஜில்லா பரிஷத் தேர்தலில் இரு அணிகளும் ஒரே சின்னத்தில் போட்டியிடுகின்றன.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

"அதிமுக-வுக்கு திமுக வாக்கு கேட்கிறது; திமுக-வுக்கு அதிமுக வாக்கு கேட்கிறது" – ஆதவ் அர்ஜுனா சாடல்

கோவை விமான நிலையத்தில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது...

"தமிழ்நாட்டில் தொடர் கொலைக்கும் விலைவாசி உயர்வுக்கும் இடையேதான் போட்டி" – கனிமொழி விமர்சனம்

சென்னை ஐஸ் ஹவுஸ் பகுதியைச் சேர்ந்தவர் அஜித் (28). இவர் நேற்று...

வருசநாடு 98 கிராம மக்கள் போராட்டம்: “ஆட்சியாளர்களுக்கு உறுத்தவில்லையா?" – சீமான் கேள்வி

தேனி மாவட்டம், வருசநாடு அருகே சிங்கராஜபுரம், பசுமலைத்தேரி, கீழபூசனூத்து, மேலபூசனூத்து‌ உள்ளிட்ட...

"2 நாள்களில் 9 கொலைகள்; முதல்வர் 'மிக்சர்' சாப்பிடாமல் சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட வேண்டும்" – உதயநிதி

தமிழகத்தில் தொடர்ந்து கொலைகள் அரங்கேறி வருகின்றன. சட்டம் ஒழுங்கு குறித்து தொடர்ந்து...