1
February, 2026

A News 365Times Venture

1
Sunday
February, 2026

A News 365Times Venture

“இந்தியாவின் தேசிய மொழி எது?'' – எம்.பி கனிமொழி பதிலால் அரங்கம் அதிர கைதட்டிய குழு!

Date:

இந்தி இந்தியாவின் தேசிய மொழி என்­றும் அதனை யாரும் புறக்க­ணிக்கக் கூடாது என்­றும் பா.ஜ.க தொடர்ந்து சொல்­லிக் கொண்­டி­ருக்­கி­றார்­கள். தேசியக் கல்விக் கொள்கையின் மூலம் இந்தியை நாடு முழுவதும் கொண்டு செல்ல திட்டமிட்டு செயல்படுவதாக எதிர்க்கட்சிகள் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றனர்.

நாடா­ளு­மன்ற மக்­களவை­ தலை­வர் ஓம் பிர்லா சமஸ்­கி­ரு­தம்­தான் நாட்டின் மூல­மொழி என்று அவை­யிலேயே குறிப்­பிட்டதும் சர்ச்சையானது.

இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டம்

இப்படியாக இந்தியாவின் தேசிய மொழி குறித்து பல்வேறு விவாதங்கள் வலம் வருகிறது. அதே நேரம் மாநிலங்களின் கூட்டுதான் இந்தியா. எனவே, பல்வேறு மொழிகள் இருக்கும் இந்தியாவில் தேசிய மொழி என ஒன்று இல்லை. அரசின் அலுவலக மொழிதான் இந்தியும் ஆங்கிலமும் என எதிர்க்கட்சிகள் கூறிவருகின்றன.

இந்த நிலையில், ஜம்மு – காஷ்மீரின் பஹல்காமில் சுற்றுலாப் பயணிகள் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். இதற்கு பாகிஸ்தான்தான் பொறுப்பு எனக் கூறிய இந்தியா மே 7 அன்று, பாகிஸ்தானுக்குள் பல இடங்களில் வான்வழித் தாக்குதல்களை நடத்தியது இந்தியா.

அதைத் தொடர்ந்து, தீவிரவாதம் குறித்த இந்தியாவின் நிலைப்பாடு குறித்து உலக நாடுகளுக்கு தெளிவுபடுத்த இந்தியாவின் சார்பில் எம்.பிக்கள் அடகிய தூதுக்குழு பல்வேறு நாடுகளுக்கு பயணித்துவருகிறது.

கனிமொழி
கனிமொழி

அதன் ஒருபகுதியாக, தி.மு.க எம்.பி. கனிமொழி உள்ளிட்ட இந்திய பிரதிநிதிகள் ஸ்பெயின் சென்றுள்ளனர். ஸ்பெயின் தலைநகர் மட்ரிட்டில் ஸ்பெயின் நாட்டின் பிரதிநிதிகளுடன் இந்திய தூதுக்குழுவினர் கலந்துரையாடினர்.

அப்போது, இந்தியாவின் தேசிய மொழி எது என அவர்களிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு எம்.பி கனிமொழி, “இந்தியாவின் தேசிய மொழி வேற்றுமையில் ஒற்றுமை” என பதிலளித்தார். இந்த பதிலுக்குப் பிறகு சில நிமிடங்கள் அரங்கம் கைதட்டலால் நிரம்பியது.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

Budget 2026: “இந்தியாவின் சீர்திருத்த எக்ஸ்பிரஸ்" – பட்ஜெட் குறித்து பிரதமர் மோடி பெருமிதம்

இந்தியாவின் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்தார்....

"மேடையில் அமர வேண்டாம்" – தொண்டாமுத்தூரில் கண் சிவந்த செந்தில் பாலாஜி; கலக்கத்தில் உடன்பிறப்புகள்

திமுக கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் ஆட்சியைப் பிடித்தாலும் கோவை மாவட்டத்தில்...

Budget 2026: இனி 'இதற்கு' வரி இல்லை, குறையும் TCS, புதிய சட்டம் அமல்; வரி அறிவிப்புகள் என்னென்ன?

2026-27 நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட்டில் வருமான வரி குறித்து வெளியாகி உள்ள...

Budget 2026: தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம் – தேர்தல் மாநிலங்களுக்கு அறிவிப்புகள் என்னென்ன?

இந்த ஆண்டு பட்ஜெட்டில் பெரிய அறிவிப்புகள் எதுவும் இல்லை. 2026-ம் ஆண்டு...