31
March, 2026

A News 365Times Venture

31
Tuesday
March, 2026

A News 365Times Venture

"அதிமுக – பாஜக-வுக்கு அதிகாரம் கொடுத்தால், அந்த சாரை கண்டுபிடித்து விடுவோம்" – நயினார் நாகேந்திரன்

Date:

தூத்துக்குடியில் செய்தியாளர்களைச் சந்தித்த பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், ”தமிழக முதல்வர் ஞானசேகரன் பாலியல் வழக்கை பற்றி பெருமையாக பேசுகிறார். அந்த தீர்ப்பை பற்றி பெருமையாக பேசினார்கள். உண்மையிலேயே நானும்  இந்த தீர்ப்பை வரவேற்கிறேன்.

நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பு

அதே நேரத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தில் ஞானசேகரனுக்கு எப்படி அவ்வளவு செல்வாக்கு வந்தது? ஞானசேகருக்கு யாரோடு தொடர்பு இருந்தது? ஞானசேகரன் போனில் பேசும் போது அந்த ”சார்”  என்ற வார்த்தை வருகிறது. அந்த சார் யார்? என்பதை பற்றி முதல்வர் எதுவும் விளக்கம் சொல்லவில்லை. இந்த வழக்கில் 157 நாளில் தீர்ப்பு வந்துள்ளது. இதே போல் கடந்த  நான்கு ஆண்டுகளில் தமிழகத்தில் பல பாலியல் சம்பவங்கள் நடந்துள்ளது.

நாங்கள் கண்டுபிடித்து விடுவோம்!

அதற்கு ஏன் தீர்ப்பு வரவில்லை? யாரையோ மறைப்பதற்காக முதல்வர் இப்படி ஒரு ஏற்பாட்டை செய்து இருக்கிறார்.  அந்த சார் யார்?  என்பதை முதல்வர் சொல்ல வேண்டும். ஊடகங்கள் முதல்வரை பார்த்து மீண்டும் யார் அந்த சார்? என்ற கேள்வியை கேட்க வேண்டும்.  

நயினார் நாகேந்திரன்

யார் அந்த சார் என்ற கேள்வி எனக்கு மட்டுமல்ல எல்லோரிடத்திலும் இருக்கிறது . நான் யாரையும் குறை சொல்லவில்லை. யார் அந்த சார் என்பதை கண்டுபிடிக்க வேண்டும்.  யார் அந்த சார்  என்பதை கண்டுபிடிக்கும் அதிகாரத்தை பா.ஜ.க விற்கும் அ.தி.மு.கவிற்கும் கொடுத்தால் நாங்கள் கண்டுபிடித்து விடுவோம்.” என்றார்.  

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

`ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதெல்லாம் இருக்கட்டும்; அதை விட…'- ஈரான் போரில் ட்ரம்ப்-ன் அடுத்த பிளான்?

ஈரான் போர் ஐந்தாவது வாரமாக நடந்து கொண்டிருக்கிறது. இது இந்தப் போரில்...

விஜய் மீது வழக்கு: "எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவை முடக்க நினைத்த அதே பாணி…" – ஆதவ் அர்ஜுனா

சட்டமன்றத் தேர்தலுக்காக தமிழ்நாடு பரபரப்பாகி வருகிறது. வேட்பாளர் மனுத்தாக்கல் செய்து, தொகுதிக்குச்...

நெல்லை: 'பிணம் வேடம், மாட்டு வண்டி பயணம், கையில் வேல்' – வேட்பாளர்களின் கலக்கல் வருகை! | Photo Album

வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட பாமக - செளமியா அன்புமணி எந்தத் தொகுதியில்...

`அரசுக்கு எதிராக போராடிய உழைப்போர் உரிமை இயக்கம் திமுக-வுக்கு ஆதரவு அளித்தது ஏன்?' – தலைவர் பாரதி

1,400 தூய்மைப் பணியாளர்களை தனியார் நிறுவனத்துக்கு மாற்றியதைக் கண்டித்து, சென்னை மாநகராட்சி...