22
September, 2026

A News 365Times Venture

22
Tuesday
September, 2026

A News 365Times Venture

`ரித்தீஷ் ரூ.300 கோடிக்கும், ஆகாஷ் ரூ.500 கோடிக்கும் வீடு கட்டுகிறார்கள்' – நயினார் நாகேந்திரன்

Date:

பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “மதுரையில் தூர்வாரப்படாமல் குப்பைகள் நிறைந்த கால்வாயை துணி மூடி மறைத்துள்ளனர். இதுதான் திராவிட மாடல் அரசு.

நயினார் நாகேந்திரன்

ஒரு முதலமைச்சருக்கு இந்த நாட்டில் என்ன நடக்கிறது என்று கூட தெரியவில்லை. அதிகாரிகள் அதனை மறைக்கிறார்கள். அதிகாரிகள் நாட்டில் என்ன நடக்கிறது என்பதை கவனித்து முதலமைச்சரின் கவனத்துக்கு கொண்டு செல்ல வேண்டும்.

கமல்ஹாசன் திமுகவுடன் கூட்டணி வைத்தது அவரின் தனிப்பட்ட முடிவு. ஆனால், வாரிசு அரசியல் இருக்கக் கூடாது என்று முதலில் கூறிய கமல், பிறகு எம்பி சீட் கிடைத்தவுடன் வாரிசு அரசியல் இருக்கலாம் என்று மாற்றி பேசுகிறார். கமல்ஹாசன் ராஜ்யசபா பதவிக்காக அவரின் நிலைப்பாட்டில் இருந்து மாறிவிட்டார். 

Kamal Haasan
கமல் – Kamal Haasan

தமிழ்நாட்டில் மின் கட்டணம் அறிவிக்கப்படாமல் உயர்ந்து  கொண்டே இருக்கிறது. அரசு அதை பரிசீலனை செய்ய வேண்டும். மத்திய அரசுடைய எந்த திட்டங்களையும் மாநில அரசு நிறைவேற்றுவதில்லை.

2026 சட்டமன்ற தேர்தலில் வீடு வீடாக பெட்டிகள் செல்லும் என்று விஜய் கூறியது உண்மைதான். திமுக தலைமைக்கு நெருக்கமான ரித்தீஷ் ரூ.300 கோடிக்கும், ஆகாஷ் ரூ.500 கோடிக்கும்  வீடு கட்டி வருவதாக தகவல் வெளியாகிறது. மேலும் சினிமா நடிகைகளுக்கு அவர்கள் லட்சக்கணக்கில் பரிசு பொருள் வாங்கி கொடுப்பதாக கூறுகிறார்கள்.

மதுரையில் ஜூன் 22-ம் தேதி முருக பக்தர் மாநாடு நடைபெற உள்ளது. அதில் உத்தரப்பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத், ஆந்திரா துணை முதல்வர் பவன் கல்யாண் உள்ளிட்டோர் பங்கேற்கிறார்கள்.” என்றார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

"இடைத்தேர்தலைத் திணிப்பவர்களே தேர்தல் செலவையும் ஏற்க வேண்டும்" – தாராபுரத்தில் சீமான் ஆவேசம்

மதுராந்தகம், தாராபுரம் ஆகிய இரண்டு தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு அக்டோபர் 6...

ட்ரம்ப் போட்ட தடை; வெள்ளை மாளிகை கவரேஜைப் புறக்கணித்த US செய்தி நிறுவனங்கள் – என்ன நடந்தது?

அமெரிக்காவில் அந்த நாட்டு அதிபர் ட்ரம்ப்பை அதிகம் விமர்சிக்கும் செய்தி நிறுவனங்களில்...

ஆதவ் அர்ஜுனாவின் கேள்வி; சிபிஐ-யின் பதிலடி; தவெக-வுக்கும், கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கும் இடையே விரிசலா?

தமிழகத்தில் காலியாக உள்ள மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்றத் தொகுதிகளுக்கு அக்டோபர்...

அரசியல் மேடைகளில் பெண் இழிவு வார்த்தைகள்… கடுமையான எதிர்வினைகளால் வைப்போம் முற்றுப்புள்ளி!

அரசியல் சச்சரவுகளில் எதிர்த்தரப்பினரை சீண்ட பெண்களை ஆபாசமாகப் பேசுவது ஒரு கலாசாரமாகவே...