25
June, 2026

A News 365Times Venture

25
Thursday
June, 2026

A News 365Times Venture

`பாகிஸ்தான் – சீனா உறவு எப்படி உள்ளது?' – வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் பதில்!

Date:

ஜெர்மன் பத்திரிகைக்கு கொடுத்துள்ள பேட்டி ஒன்றில், இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் பாகிஸ்தான் – சீனா உறவு குறித்து பேசியுள்ளார்.

“உங்களுக்கே தெரியும், இந்தியா – பாகிஸ்தான் இடையே நடந்த தாக்குதலின் போது, பாகிஸ்தான் பயன்படுத்திய பல ஆயுதங்கள் சீனாவில் இருந்து வந்தது தான். இரு நாடுகளும் மிக நெருக்கமான உறவைக் கொண்டது. இதில் இருந்தே நாம் தெரிந்துகொள்ளலாம்” என்று கூறியுள்ளார்.

ஜெய்சங்கரிடம், ‘இந்தியா – பாகிஸ்தான் பிரச்னையில் அணு ஆயுதப் பயன்பாடு குறித்து யோசிக்கப்பட்டதா?’ என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர், “அணு ஆயுத பயன்பாடு பற்றி எப்போதுமே யோசிக்கப்படவில்லை. எங்கள் பகுதியில் (தெற்காசியா) எப்போது பிரச்னை ஏற்பட்டாலும், அணு ஆயுதப் பிரச்னை ஏற்படும் என்கிற பிம்பம் உள்ளது.

Jaishankar

இது என்னை மிகவும் தொந்தரவு செய்கிறது. ஏனெனில், இது தீவிரவாதம் போன்ற கொடூர நடைமுறைகளை ஊக்குவிக்கிறது” என்று பதிலளித்துள்ளார்.

‘இந்தியா – பாகிஸ்தான் தாக்குதல் நிறுத்தத்திற்கு அமெரிக்காவிற்கு நன்றி சொல்ல விரும்புகிறீர்களா?’ என்ற கேள்விக்கு, “தாக்குதல் நிறுத்தத்திற்காக நான் யாருக்கு நன்றி சொல்ல வேண்டும்? நான் இந்திய ராணுவத்திற்கு நன்றி சொல்கிறேன். காரணம், அவர்களின் நடவடிக்கையால் தான் பாகிஸ்தான், ‘தாக்குதலை நிறுத்த தயார்’ என்று கூறியது” என்று தெரிவித்துள்ளார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

பிரமாண்ட ஸ்வர்ணகிரி; `ஆந்திராவின் KGF' – சந்திரபாபு நாயுடு பெருமிதம்

ஆந்திரப் பிரதேச மாநிலம், கர்னூல் மாவட்டம் துக்கலி மண்டலத்தில் உள்ள ஜொன்னகிரி...

PMK: இணைந்த தந்தை – மகன் இதயங்கள்! – இக்கட்டில் சேலம் அருள் போன்ற 2-ம் கட்ட தலைவர்கள்?

பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் ராமதாஸ், அவரின் மகன் அன்புமணி...

‘சார்… ஆபீஸுக்கு ரெய்டு வருது!’ கசியும் தகவல் டு மாண்புமிகுவால் கொதிக்கும் மா.செ-க்கள்! | கழுகார்

முன்கூட்டியே கசியும் தகவல்‘சார்... உங்க ஆபீஸுக்கு ரெய்டு வருது!’லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநராக...

எ.வ.வேலு: `இந்த மிரட்டலுக்கெல்லாம் அஞ்சிடும் இயக்கம் அல்ல திமுக' – DVAC ரெய்டு குறித்து ஸ்டாலின்

கடந்த தி.மு.க ஆட்சியில் பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்தவர் எ.வ.வேலு. அவர் அமைச்சராக...