28
August, 2026

A News 365Times Venture

28
Friday
August, 2026

A News 365Times Venture

புதுக்கோட்டை: "ED-க்கு மட்டுமல்ல, மோடிக்கும் நாங்கள் பயப்பட மாட்டோம்" – உதயநிதி ஸ்டாலின்

Date:

புதுக்கோட்டையில் கலைஞர் கருணாநிதி மாவட்ட விளையாட்டு மைதானத்தில் பல்நோக்கு உள் விளையாட்டு அரங்கை தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அதிகாரிகள் மற்றும் அமைச்சர்களோடு நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது, செய்தியாளர்களைச் சந்தித்த அவர்,

“புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் சுணக்கமாக நடைபெறும் பணிகள் கண்டறிந்து அதனை விரைவுபடுத்த அறிவுறுத்தப்பட்டது. புதுக்கோட்டை கலைஞர் கருணாநிதி மாவட்ட விளையாட்டு மைதானத்தில் கடந்த 2017-18-ம் ஆண்டு அ.தி.மு.க ஆட்சி காலத்தில் ரூ.4.62 கோடி மதிப்பில் பல்நோக்கு உள் விளையாட்டு அரங்கம் கட்டும் பணி தொடங்கப்பட்டு அதற்குப் பிறகு நிதி நெருக்கடியால் அப்பணி கிடப்பில் உள்ள நிலையில் தற்போது அந்தப் பணியை முழுமை செய்ய நான்கரை கோடி ரூபாய் தேவை என்று அதிகாரிகள் ஆய்வு செய்து தெரிவித்துள்ளனர். அதற்குரிய நிதியில் ரூ.3.50 கோடி தமிழ்நாடு முதலமைச்சர் ஒதுக்கீடு செய்துள்ளார். மீதமுள்ள ஒரு கோடியை சட்டமன்ற/ நாடாளுமன்ற உறுப்பினர்கள் நிதியிலிருந்து வழங்குவார்கள்.

udhayanithi stalin

வருகின்ற டிசம்பர் மாதத்திற்குள் முழுமையாக பல்நோக்கு விளையாட்டு அரங்கம் கட்டும் பணி நிறைவடைந்து விளையாட்டு வீரர்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும். நிதி உரிமை கேட்பதற்காக தமிழ்நாடு முதலமைச்சர் நிதி ஆயோக் கூட்டத்திற்கு சென்றுள்ளார். எதிர்க்கட்சி தலைவர் அரசியல் செய்யத் தான் செய்வார். ED -க்கு அல்ல, மோடிக்கும் நாங்கள் பயப்பட மாட்டோம். தொடர்ந்து, நாங்கள் குரல் கொடுத்துக்கொண்டுதான் இருப்போம். மிரட்டப் பார்த்தார்கள். மிரட்டி அடிபணிந்து பயப்படுவதற்கு அடிமைக் கட்சி கிடையாது தி.மு.க. கலைஞர் உருவாக்கிய தி.மு.க இது. சுயமரியாதை கட்சி. பெரியாரின் கொள்கையுடைய கட்சி. தப்பு செய்தவர்கள் தான் பயப்பட வேண்டும். நாங்கள் யாருக்கும் அடிபணிய தேவையில்லை. பயப்பட வேண்டிய அவசியமும் கிடையாது. எதுவாக இருந்தாலும் சட்டபூர்வமாகச் சந்திப்போம்” என்றார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

கேள்விக்குறியாகும் இளைஞர்களின் எதிர்காலம்… நிதி ஆயோக்கின் அதிர்ச்சி ரிப்போர்ட்!

சமீபத்தில் நிதி ஆயோக் வெளியிட்டுள்ள ஓர் அறிக்கை, நம் இளைய தலைமுறை...

நேபாளம்: "ஈஷாவில் இருந்து யாத்திரை சென்றவர்களையும் காணவில்லை; அவர்களை மீட்க தயார்" – ஜக்கி வாசுதேவ்

நேற்று நேபாளத்தில் வெள்ளம் ஏற்பட்டு, அதில் குறைந்தபட்சம் 160 பேர் உயிரிழந்துள்ளதாகத்...

"தலைமைச் செயலாளர் மீது நடவடிக்கை எடுங்கள்; முதலமைச்சர் விளக்கம் வேண்டும்!" – பெ.சண்முகம் கடிதம்

இடதுசாரி அமைப்புகள் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் நடத்தும் போராட்டங்களில் மாணவர்கள் மற்றும்...