14
March, 2025

A News 365Times Venture

14
Friday
March, 2025

A News 365Times Venture

தஞ்சாவூர்: பசியோடு காத்திருந்த மாணவர்கள்; 5 மணி நேரம் தாமதமாக வந்த அமைச்சர்; கொந்தளித்த பெற்றோர்

Date:

தஞ்சாவூர், அறிஞர் அண்ணா நூற்றாண்டு அரங்கத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில், மனிதநேய வார நிறைவு விழாவும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியும் உயர் கல்வித்துறை அமைச்சர் செழியன் தலைமையில் நேற்று (ஜனவரி 31) நடந்தது.

மதியம் 3 மணிக்கு அமைச்சர் வருவதாகக் கூறி பரிசு பெறும் அரசுப் பள்ளி மாணவர்கள், கலைநிகழ்ச்சியில் ஈடுபட்ட மாணவர்கள், கல்லூரி மாணவிகள், நலத்திட்ட உதவிகள் பெறும் பயனாளிகள் உள்ளிட்ட அனைவரும் விழா நடைபெறும் இடத்திற்கு மதியம் 1 மணிக்கு வரவழைக்கப்பட்டிருந்தனர்.

அரசுப் பள்ளி மாணவர்கள்

அமைச்சர், மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் அமர்வதற்கு மேடையில் நாற்காலிகள் போடாமல் இருந்தது. அரசுப் பள்ளி மாணவர்களை அழைத்து நாற்காலிகளைத் தூக்கி, மேடையில் போட வைத்துள்ளனர். நேரம் கடந்ததே தவிர அமைச்சர் கோவி. செழியன் வரவில்லை. அமைச்சர் இதோ வந்துவிடுவார், அதோ வந்துவிடுவார் எனச் சொல்லியே மாணவர்களும், பயனாளிகளும் காக்க வைக்கப்பட்டனர். இதனால் பசி தாங்க முடியாமல் மாணவர்கள் மட்டுமின்றி அனைவரும் கஷ்டப்பட்டனர்.

பல மணி நேரங்கள் ஆன பிறகும் அமைச்சர் வரவில்லை. இதனால் மாணவர்கள் உள்ளிட்டவர்கள் சோர்வடைந்தனர். ஒருகட்டத்தில் அரங்கத்தை விட்டு வெளியே வந்த மாணவர்கள் தவித்து நின்றனர். மாணவர்கள் சோர்வடைந்து, மயக்கம் ஏற்படுகின்ற நிலையில் காணப்பட்டனர். அதன் பிறகு ஆசிரியர்கள் மாணவர்களுக்கு பிஸ்கட், டீ வாங்கி கொடுத்தனர். மாணவர்களின் பெற்றோர் சிலர், “எங்க பிள்ளைகளை வைத்து நாற்காலி தூக்க வைக்குறாங்க, பசியால் தவித்தும் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட யாரும் இதை கண்டுக்கலை” எனப் புலம்பிக் கொண்டிருந்தனர்.

நாற்காலி தூக்கி செல்லும் மாணவர்கள்
நாற்காலி தூக்கி செல்லும் மாணவர்கள்

இதையடுத்து, 6 மணியளவில் வந்த அமைச்சர் மேடையில் ஏறி அவசர கதியில் சிலருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி விட்டு, திரும்பிச் சென்றார். மனிதநேய வார விழாவில் நடந்த இச்செயலைப் பலரும் விமர்சனம் செய்து வருகின்றனர். இது குறித்துப் பேசிய சிலர், “அரசுப் பள்ளி மாணவர்களை வேதனைக்கு உள்ளாக்குவது தொடர்கிறது. கடந்த வாரம் நடைபெற்ற நிகழ்ச்சியில் பெற்றோருக்குத் தெரிவிக்காமல் தமிழ்த்தாய் வாழ்த்து பாட மாவட்ட ஆட்சியர் தலைமையில் செயல்படும் சத்திரம் நிர்வாகத்தின் பள்ளி மாணவிகளை அழைத்திருந்தனர்.

பள்ளியில் மகளைக் காணாமல் மாணவியின் அம்மா தவித்த சம்பவம் நடந்தது. இப்போது அரசுப் பள்ளி மாணவர்களை அழைத்து வந்து பட்டினியும், பசியுமாகக் காக்க வைத்துள்ளனர். அவங்க வீட்டு பிள்ளைகள்னா இப்படிச் செய்வார்களா? மாவட்ட ஆட்சியர் பிரியங்க, இது போன்ற நிகழ்ச்சிகளில் உரியக் கவனம் செலுத்தாமல் அலட்சியமாக நடந்து கொள்வதால் இப்படி நடக்கிறது” என வேதனையுடன் தெரிவித்தனர்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3OITqxs

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

தொகுதி மறுவரையறை: `தெற்கு தேய்கிறது; வடக்கு மேய்கிறது’ – ஆதவன் தீட்சண்யா | களம் பகுதி 4

எந்த ஒரு விவகாரத்துக்கும் பல முகங்கள் இருக்கும். பல்வேறு நபர்களின் பார்வைகள்...

“புதிய பொறுப்பாளரை ஏற்க முடியாது'' – கொதிக்கும் புதுக்கோட்டை மாநகர திமுகவினர்… பின்னணி என்ன?

புதுக்கோட்டை மாநகர தி.மு.க செயலாளராக இருந்த அமைச்சர் ஆ.செந்தில் கடந்த சில...

TN Budget Highlights | TASMAC – செந்தில் பாலாஜிக்கு சுத்துப்போடும் ED – Imperfect Show 14.03.2025

இன்றைய இம்பர்ஃபெக்ட் ஷோ ஃவில், பிரிவினைவாத உணர்வைப் பரப்பும் ஆபத்தான மனநிலை: ரூபாய்...