6
March, 2026

A News 365Times Venture

6
Friday
March, 2026

A News 365Times Venture

சாவர்க்கர் குறித்த கருத்து : `இது ஏதாவது ராகுல் காந்திக்கு தெரியுமா?’ – காட்டமான உச்ச நீதிமன்றம்

Date:

கடந்த 2022 -ம் ஆண்டு நவம்பர் மாதம் 17-ம் தேதி ராகுல் காந்தி தலைமையில் நடத்தப்பட்ட ஒற்றுமையை யாத்திரையில் பேசிய ராகுல் காந்தி, `சாவர்க்கர் பிரிட்டிஷார் உடன் இணைந்து செயல்பட்டார்’ என்றும் `பிரிட்டிஷார் இடமிருந்து அவர் பென்ஷன் பெற்றார்’ என்றும் கூறியிருந்தார்.

இதற்கு எதிராக நிற்பேந்திர பாண்டே என்பவர் லக்னோவில் புகார் அளித்திருந்தார். லக்னோ மேஜிஸ்திரேட் நீதிமன்றம், `ராகுல் காந்தி நேரில் ஆஜராக கடந்த 2024 டிசம்பர் 12-ம் தேதி சம்மன் அனுப்பியிருந்தது. இந்த சம்மனை எதிர்த்து ராகுல் காந்தி தொடர்ந்த மனுவை அலகாபாத் உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்திருந்த நிலையில், அதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் ராகுல் காந்தி சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

ராகுல் காந்தி

`அது ராகுல் காந்திக்கு தெரியுமா?’

இந்த மேல்முறையீட்டு மனுமைதான விசாரணை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தீபன்கர் தத்தா மற்றும் மன்மோகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது

ராகுல் காந்தி சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வியிடம், “மகாத்மா காந்தி வைஸ்ராயிடம் பேசும் பொழுதும் கடிதம் எழுதும் போதும் `உங்கள் கீழ்படிந்த ஊழியர்’ என்ற பொருள் கொண்ட ஆங்கில வார்த்தையை பயன்படுத்துவார். அது ராகுல் காந்திக்கு தெரியுமா? இவரது பாட்டியான இந்திரா காந்தி சாவர்க்கரை புகழ்ந்து கடிதம் எழுதி இருக்கிறார். அதுவாவது தெரியுமா? நமது சுதந்திரப் போராட்ட வீரர்கள் பற்றியும் நாட்டின் வரலாறு பற்றியும் எதுவும் தெரியாமல் இப்படி பொறுப்பற்ற வார்த்தைகளை பயன்படுத்தக் கூடாது” என நீதிபதிகள் கண்டிப்பாக தெரிவித்தனர்.

`நேரடியாக வேலைக்காரன் என்ற பொருளை எடுத்துக் கொள்ளக் கூடாது’

“நமக்கு சுதந்திரம் பெற்றுத்தந்த சுதந்திரப் போராட்ட தியாகிகளை எப்படி நடத்தக் கூடாது என்பதாகத்தான் இது இருக்கிறது. உங்களுக்கு இந்தியாவின் வரலாறு எதுவும் தெரியவில்லை என்பதுதான் இது காட்டுகிறது. ஒரு அரசியல் கட்சியின் முக்கிய தலைவராக இருக்கிறார். அப்படி இருக்கும் பொழுது ஏன் இப்படியான பொறுப்பற்ற வார்த்தைகளை அவர் பயன்படுத்துகிறார். மகாராஷ்டிரா மாநிலத்தில் சாவர்க்கர் வழிபடப்படுகிறார்.

பல நீதிபதிகள் கூட தலைமை நீதிபதிகளுக்கு உங்கள் ஊழியர் என்ற வார்த்தையை பயன்படுத்தி தான் கடிதமே எழுதுகிறார். அதற்கு நேரடியாக வேலைக்காரன் என்ற பொருளை எடுத்துக் கொள்ளக் கூடாது. இதை அனுமதித்தால் வரக்கூடிய நாட்களில் யாராவது `பிரிட்டிஷ் யாருக்கு மகாத்மா காந்தி வேலையாளாக செயல்பட்டார்’ என பேசத் தொடங்குவார்கள்.

உச்ச நீதிமன்றம்
உச்ச நீதிமன்றம்

இந்த முறை உங்களுக்கு நாங்கள் சில நிவாரணங்களை கொடுக்கிறோம். அதே நேரத்தில் இனிமேல் கொண்டு எந்த சுதந்திரப் போராட்ட வீரர்கள் பற்றியும் இப்படி பேசக்கூடாது என்று உங்களுக்கு தடை உத்தரவு பிறப்பிக்கிறோம். அதையும் மீறி நீங்கள் ஏதேனும் பேசுவீர்களானால், உங்களுக்கு எதிராக தானாக முன்வந்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்துவோம்” என கடுமையான எச்சரிக்கை விடுத்தனர்.

இதைத்தொடர்ந்து வழக்கில் எதிர்மனுதாரர்களுக்கு நோட்டீஸ் பிறப்பித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் உத்தரவிற்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளனர்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

போர் எதிரொலி: இந்தியாவில் சமையல் எரிவாயு தட்டுப்பாட்டைத் தவிர்க்க மத்திய அரசு நடவடிக்கை!

ஈரான், இஸ்ரேல், அமெரிக்கா இடையேயான போர் சூழல் காரணமாக ஹார்முஸ் ஜலசந்தி...

ஈரான் போர் நீடித்தால் ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலை 150 டாலர்களை தொடுமா? – கத்தார் அதிர்ச்சி தகவல்

ஏழாவது நாளாக ஈரானில் தொடர்ந்து கொண்டிருக்கிறது போர். இந்தப் போர் முடியும்...

3 பேர்; 40 நாட்கள்; 4000 கி.மீ பயணம்; 234 தொகுதிகள் – பயணத்தை தொடங்கிய VIKATAN ELECTION EXPRESS

தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், கள நிலவரங்களை மக்களிடம்...

“16 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சமூக ஊடகங்கள் பயன்படுத்த தடை" – கர்நாடக முதல்வர் சித்தராமையா!

கர்நாடக முதல்வர் சித்தராமையா இன்று வெள்ளிக்கிழமை 2026–27-ம் ஆண்டுக்கான மாநில பட்ஜெட்டை...