2
March, 2026

A News 365Times Venture

2
Monday
March, 2026

A News 365Times Venture

Stalin: "திமுக கூட்டணியில் பாமக இணைகிறதா?" – கூட்டணி குறித்து முதல்வர் ஸ்டாலின் பேசியது என்ன?

Date:

தமிழக முதல்வர் ஸ்டாலின் ஆங்கில நாளிதழ் ஒன்றிற்குப் பேட்டி அளித்திருக்கிறார். 

அந்த பேட்டியில், ‘பா.ம.க, தி.மு.க கூட்டணியில் இணைய வாய்ப்பு இருக்கிறது என்று தகவல் வெளியாகி இருக்கிறது. இது உண்மையா?’ என்று கேள்வி கேட்கப்பட்டிருக்கிறது.

ஸ்டாலின்,
அன்புமணி

அதற்குப் பதிலளித்த ஸ்டாலின், “அத்தகைய தகவல்களைப் பொருட்படுத்தத் தேவையில்லை. திமுக கூட்டணி உறுதியாக இருக்கிறது” என்றிருக்கிறார்.

தொடர்ந்து பேசிய அவர், “அதிமுக, பாஜக இடையே கள்ளக் கூட்டணி என ஏற்கெனவே கூறினேன். தற்போது அது உண்மையாகியுள்ளது. அதிமுக – பாஜக கூட்டணியை இரண்டு  முறை தோற்கடித்துள்ளோம்.

2026 தேர்தலிலும் நிச்சயம் தோற்கடிப்போம்” என்று கூறியிருக்கிறார்.

மேலும் பேசிய அவர், “இந்த அரசு, கூட்டணி கட்சிகளின் ஆலோசனைகள் மற்றும் ஆக்கபூர்வமான விமர்சனங்களைக் கருத்தில் கொண்டு, அவர்களது ஒத்துழைப்புடன் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.

ஸ்டாலின்
ஸ்டாலின்

கூட்டணிக் கட்சிகளின் ஆக்கபூர்வமான விமர்சனங்களுக்கு எப்போதும் மதிப்பளிக்கிறேன். மத்திய-மாநில அரசுகளுக்கு இடையே கவர்னர் என்பவர் தபால்காரர்தான்.

தற்போதைய உச்ச நீதிமன்ற தீர்ப்பும் இதைத்தான் கூறியிருக்கிறது” என்று பேசியிருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3OITqxs

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

பிரதமர் மோடி புதுச்சேரி வருகை; பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள் தொடங்கி வைப்பு | Photo Album

Modi: "மோசடி செய்வதில் திமுக அமைச்சர்களுக்கு இடையே போட்டி இருக்கிறது" -...

தொகுதி் பங்கீடு: பேச்சுவார்த்தைக்கு அழைத்த அறிவாலயம்… விசிக-வின் கணக்கு என்ன?

தி.மு.க கூட்டணியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை, தொடங்கியிருக்கும் நிலையில் மார்ச் 2-ம்...

"தேர்தலில் தனித்து நிற்க காங்கிரஸிற்கு தைரியம் இல்லை.!" – குஷ்பு சாடல்

தமிழக பாஜகவின் துணைத் தலைவர் குஷ்பு சென்னை விமான நிலையத்தில் இன்று(...

`ஈரானும் இஸ்ரேலும் எப்படியான நண்பர்கள் தெரியுமா?’ – நட்பு, பகையான பின்னணி | Iran vs Israel

(பொறுப்பு துறப்பு: இந்த கட்டுரையில் இடம்பெற்றிருக்கும் கருத்துக்கள் அனைத்தும் கட்டுரையாளரின் தனிப்பட்ட...