17
April, 2026

A News 365Times Venture

17
Friday
April, 2026

A News 365Times Venture

புதிதாக கட்டப்பட்ட பாளையங்கோட்டை சந்தை; திறக்கப்படுவது எப்போது? – காத்திருக்கும் வியாபாரிகள்!

Date:

பாளையங்கோட்டை புதிய மார்க்கெட் எப்போது திறக்கப்படும் என்பதை பொது மக்கள் மற்றும் வியாபாரிகள் ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர். நெல்லை மாநகராட்சிக்கு உட்பட்ட பாளையங்கோட்டை காந்தி மார்க்கெட், நெல்லை மக்களின் முக்கியமான வர்த்தகப் பகுதியாக இருந்தது. காய்கறிகள், பழங்கள், வீட்டு உபயோக பொருள்கள் உள்ளிட்ட அனைத்தையும் மொத்தமாக வாங்கும் இடமாக இது அறியப்பட்டது.

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.14.90 கோடி செலவில் பழைய கட்டடம் இடிக்கப்பட்டு, புதிய வசதிகளுடன் கூடிய கட்டடம் கட்டப்பட்டது. இதில் 540 கடைகள், இரு சக்கர வாகன நிறுத்த வசதி, குளிர் சாதன சேமிப்பு, 50 டன் அளவுக்கு காய்கறி மற்றும் பழங்களை சேமிக்கக்கூடிய வசதியுடன் நவீன அம்சங்களுடன்  அமைக்கப்பட்டுள்ளன. இந்த சந்தை முழுமையாக செயல்படத் தொடங்கினால் அரசுக்கு வருடத்திற்கு ரூ.10.80 லட்சம் வருவாய் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய கட்டடத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த பிப்ரவரி 6-ம் தேதி திறந்து வைத்தாலும், இதுவரை கடைகள் திறக்கப்படவில்லை. இதனால் வியாபாரிகளும் பொதுமக்களும் ஏமாற்றத்துடன் உள்ளனர். முன்னாள் வணிகர்கள், “எங்களுக்கு மீண்டும் கடைகள் வழங்க வேண்டும், அதற்குரிய கட்டணத்தை செலுத்த தயாராக இருக்கிறோம்” எனக் கூறி, மாநகராட்சிக்கு மனுவும் அளித்துள்ளனர்.

இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், “புதிய மார்க்கெட்டில் வணிகர்களுக்கு  கடைகளை ஒதுக்க தயாராக இருக்கின்றோம். ஆனால் இந்தக் கடைகள் தொடர்பாக ஒரு பொதுநல வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. வழக்கு முடிவடைந்தவுடன் உடனடியாக கடைகள் ஒதுக்கப்படும்” என்று தெரிவித்தனர்.

மக்களும் வியாபாரிகளும், வழக்கு விரைவில் முடிவடைந்து, மார்க்கெட் திறக்கப்பட்டு வணிகம் பழைய நிலையை அடைய வேண்டும் என எதிர்பார்த்து வருகின்றனர்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

'பேமென்ட் 1 லட்சம்; 2 AC ரூம் கட்டாயம்' – பில் போடும் நாஞ்சில் சம்பத்? ; விழிபிதுங்கும் தவெகவினர்!

தவெகவின் பரப்புரைச் செயலாளரான நாஞ்சில் சம்பத் வாகன பிரசாரங்களிலும் பொதுக்கூட்டங்களிலும் பேச...

"ஹார்முஸ் ஜலசந்தி திறந்துவிட்டது; ஆனா, எங்க கப்பற்படை அங்கே தான் இருக்கும்" – ட்ரம்ப்

கடந்த பிப்ரவரி 28-ம் தேதி மூடிய ஹார்முஸ் ஜலசந்தியை இன்று தான்...

"தென் மாநிலங்களுக்கு அநீதி இழைக்கப்படாது, நான் கையெழுத்திட்டு தருகிறேன்"- அமித் ஷா வாக்குறுதி

நாடாளுமன்ற சிறப்புக் கூட்டம் நடந்துவரும் நிலையில், மகளிர் இட ஒதுக்கீடு மசோதா...

நாடாளுமன்றத்தில் நடைபெற்ற வாக்கெடுப்பு; தோல்வியைத் தழுவிய தொகுதி மறுவரையறை மசோதா

நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தின் முதல் நாளான நேற்று (ஏப்ரல்.17) மக்களவையில் 3...