15
April, 2025

A News 365Times Venture

15
Tuesday
April, 2025

A News 365Times Venture

மசோதா விவகாரம்: `தீர்ப்பை மறு ஆய்வு செய்ய வேண்டும்' – மனுதாக்கல் செய்யும் உள்துறை அமைச்சகம்?

Date:

ஆளுநாரால் முடக்கப்பட்டிருந்த 10 மசோதாக்கள் தொடர்பாக தமிழ்நாடு அரசு தொடர்ந்திருந்த வழக்கில், உச்ச நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு பரபரப்பை ஏற்படுத்தியது. குறிப்பாக ஆளுநாரால் முடக்கப்பட்ட 10 மசோதாக்களையும் நிறைவேற்றி உத்தரவிட்டதும், குடியரசுத் தலைவர் ஒரு மசோதாவின் மீது முடிவெடுக்க மூன்று மாதகாலம் அவகாசம் எனக் காலக் கெடு விதித்ததும் குறிப்பிட்டதக்கது.

அதைத் தொடர்ந்து உச்ச நீதிமன்றம் ஒப்புதல் அளித்த 10 மசோதாக்களும் சட்டமானதாக நேற்று தமிழ்நாடு அரசு தன் அரசிதழில் அறிவித்தது.

ஸ்டாலின் – ஆளுநர் ரவி

இந்த நிலையில், உச்ச நீதிமன்றத் தீர்ப்பை மறு ஆய்வு செய்ய வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சகம் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய வாய்ப்பிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கியது.

இது தொடர்பாக தி இந்துவிடம் பேசிய மத்திய உள்துறை அமைச்சக மூத்த அதிகாரி, “ஆளுநர்கள் மற்றும் ஜனாதிபதிக்கு திட்டவட்டமான காலக்கெடுவை நிர்ணயிக்கும் தீர்ப்புக்கு எதிராக ஒரு மனு தயாரிக்கப்பட்டு வருகிறது. அந்த தீர்ப்பில் மத்திய அரசின் அதிகாரம் குறித்து போதுமான வழிகாட்டுதல் இல்லை என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது.

அதாவது, இந்தத் தீர்ப்பு ‘காலாவதியான’ மசோதாவை மீட்டெடுப்பதற்கு வழி வகுத்திருக்கிறது. அரசியலமைப்பின் படி, மசோதா திருப்பி அனுப்பப்பட்டாலோ அல்லது ஜனாதிபதியால் அதற்கு ரத்து செய்யப்பட்டாலோ சட்டம் காலாவதியாகிவிடும்.

சட்டமன்றம் விரும்பியபடி, பரிந்துரைக்கப்பட்ட திருத்தங்களுடன் அல்லது திருத்தமில்லாமல், அதை நிறைவேற்றுவதற்காக சட்டமன்றத்தில் மீண்டும் அறிமுகப்படுத்த வேண்டும். உச்ச நீதிமன்றம் வழங்ககிய தீர்ப்பில் இது கருத்தில் கொள்ளப்படவில்லை.

அமித் ஷா
அமித் ஷா

மேலும், குடியரசுத் தலைவருக்கு விதிக்கப்பட்ட காலக்கெடுவையும் மறுபரிசீலனை செய்ய வேண்டும். அரசியலமைப்பின் 201-வது பிரிவின் கீழ் மாநில சட்டங்கள் தொடர்பாக குடியரசுத் தலைவர் மூலம் இறுதி முடிவை பரிசீலித்து அறிவிப்பதற்கான முதன்மை அமைச்சகம் உள்துறை அமைச்சகமாகும்.

உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் மறுஆய்வு மனுவை, நீதிபதிகள் ஜே.பி. பர்திவாலா, நீதிபதி ஆர். மகாதேவன் ஆகியோர் அடங்கிய அதே பெஞ்ச் முன் தாக்கல் செய்ய வேண்டும்.” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

Vikatan WhatsApp Channel

இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்… CLICK BELOW LINK

https://bit.ly/VikatanWAChannel

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

`எடப்பாடி பழனிசாமி குறித்து அவதூறு'- கொலை மிரட்டல் விடுத்ததாக அதிமுக ஒ.செ மீது புகார்- என்ன நடந்தது?

ஒரத்தநாடு அருகே உள்ள நெடுவாக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த வசந்த், கள்ளர் படைப்பற்று...

`உசுர கையில பிடிச்சிட்டு ரோட்டைக் கடக்குறோம்'- குடிநீர் பிரச்னையால் சிரமப்படும் சிக்கனம்பட்டி மக்கள்

சேலம், காடையாம்பட்டி தாலுகா சிக்கனம்பட்டி ஊராட்சியில் சாலையின் ஒருபக்கம் 100 குடும்பங்களும்,...

மாணவர்களிடம் மதம் சார்ந்த கோஷம் : ஆளுநருக்கு எதிராக கொந்தளிக்கும் பள்ளி கல்லூரி ஆசிரியர் சங்கங்கள்

மதுரையில் கல்லூரி மாணவர்களை கட்டாயப்படுத்தி ஜெய் ஸ்ரீராம் கோஷமிட வைத்த ஆளுநர்...

வாணியம்பாடி: நகராட்சிக் கழிவறையின் அவலநிலை… அவசரத்துக்கு அல்லாடும் மக்கள்!

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி நகரம், தோல் தொழிற்சாலைகள் நிறைந்த நெரிசல்...